இனி ஆப்பத்திற்கு தனியாக மாவு அரைக்க வேண்டாம். உங்க வீட்டில இட்லி மாவு இருக்கா? அது போதுமே. ஒரு முறை இந்த ஆப்பத்தை ட்ரை பண்ணி பாருங்க.

aapam
- Advertisement -

நிறைய பேருக்கு ஆப்பம் சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் ஆபத்திற்கு என்று தனியாக மாவு அரைத்து புளிக்கவைத்து ஆப்பம் சுட்டு சாப்பிடுவதற்கு கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆப்பமாவு அரைத்தாலும் சிலருக்கு பக்குவமாக வராது. இனி ஆப்ப மாவை கஷ்டப்பட்டு அரைக்க வேண்டும் என்ற எந்த கஷ்டமும் இல்லை. உங்க வீட்ல இட்லி மாவு இருந்தால் ஒரு முறை இந்த மாதிரி ஆப்பம் செஞ்சு பாருங்க. நிச்சயமா ஆப்பத்தின் அதே ருசி கிடைக்கும். ஆப்ப கடாயில் வார்த்து எடுத்தால் கூடைபோல் ஆப்த்தின் அதே வடிவத்தில் கிடைக்கும். நேரத்தைக் கடத்தாமல் சூப்பரான இந்த சுலபமான ரெசிபியை தெரிந்து கொள்ளலாமா.

லேசாக இருக்கும் வெள்ளை அவுல் – 4 ஸ்பூன், எடுத்து ஒரு முறை கழுவி விட்டு நல்ல தண்ணீரில் 5 லிருந்து 7 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். (கெட்டி அவுலாக இருந்தால் 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.) ஊறிய அவுலை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த அவுலுடன், 1/2 கப் அளவு தேங்காய் துருவல் சேர்த்து, 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவேண்டும். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைத்து விட வேண்டாம். தேங்காய் திப்பி திப்பியாக தெரியக்கூடாது. மைய அரைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது‌. இந்த அவுல் தேங்காய் சேர்த்து அரைத்த விழுது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு சிறிய பாத்திரத்தில் புளித்த இட்லி மாவில் இருந்து 2 கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லி மாவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் அவுல் தேங்காய் சேர்த்த கலவையை ஊற்றி, நன்றாக கலந்து 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை மூடி போட்டு அப்படியே விட்டு விடுங்கள். (இட்லி மாவில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் மீண்டும் உப்பு சேர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.)

appam3

அவ்வளவு தாங்க. சூப்பரான ஆப்பம் மாவு தயார். சிலபேர் ஆப்பத்தில் சர்க்கரை சேர்த்து சுடுவார்கள். தேவைப்பட்டால் 2 ஸ்பூன் சர்க்கரையை இந்த மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆப்பத்திற்கு தயார் செய்து வைத்திருக்கும் இந்த மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இந்த மாவில் ஆப்ப சோடா சேர்க்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.

- Advertisement -

ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி தயாராக இருக்கும் ஆப்ப மாவில் இருந்து ஒரு கரண்டியை கடாயில் ஊற்றி, எப்போதும் போல மாவை சுழற்றி லேசாக ஆப்பத்தின் ஓரத்தில் எண்ணெய் ஊற்றி, ஒரு மூடி போட்டு ஒரு நிமிடம் போல வேகவைத்து எடுத்து பாருங்கள். கூடை போல சூப்பரான ஆப்பம் தயாராக கிடைக்கும்.

aval-idli3

இந்த ஆபத்தை இட்லி மாவில் தான் செய்தீர்களா, என்று உங்களாலேயே நம்பமுடியாது. இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் பால் சூப்பராக இருக்கும். அசைவ பிரியர்கள் ஆக இருந்தால் ஆட்டுக்கால் பாயா, அல்லது கறி குழம்பு இவைகளை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். அது அவரவர் விருப்பம் தான்.

aapam

நான் ஸ்டிக் கடாயில் இந்த ஆபத்தை ஊற்றினால் சூப்பராக வரும். உங்கள் வீட்டில் நான் ஸ்டிக் கடாய் இல்லை என்றால், இரும்பு கடாயிலும் இந்த ஆபத்தை பக்குவமாக ஊற்றி எடுத்து விடலாம். கடாயில் சூடு மட்டும் மிதமாக இருக்க வேண்டும். பார்த்துக் கொள்ளுங்கள். நீங்க ஆப்ப பிரியர்களாக இருந்தால் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -