பருப்பு சேர்க்காமல் சுவையான தக்காளி சாம்பாரை இப்படி ஒரு முறை செய்தால் போதும். இதன் சுவைக்கு 10 இட்லி கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

sambar
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் பெரும்பாலான உணவு வகை என்னவென்றால் இட்லி மற்றும் தோசை தான். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இட்லி அல்லது தோசை என்பது அனைவரது வீட்டிலும் இருக்கிறது. அவ்வாறு இதற்கு தொட்டுக்கொள்ள செய்யும் சைட்டிஷ்கள் பல விதமான முறையில் செய்யப்படுகின்றன. ஆனால் நேரம் குறைவாக இருக்கும் பொழுது சமையலை சீக்கிரமாக முடித்து= வெளியில் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும் பொழுதும் வேலை அதிகமாக இருக்கக்கூடிய சைடிஷ்கள் செய்யாமல், சிம்பிளான சைடிஷ்ஷை செய்தால் உங்களுக்கான வேலை எளிதில் முடியும். அவ்வாறு வேலையை குறைக்கவும், சுவையை அதிகரிக்கவும் சுவையான இந்த இன்ஸ்டன்ட் சாம்பாரை ஒருமுறை செய்து பாருங்கள் .யாருமே நம்ப மாட்டார்கள் இதனுடன் பருப்பு சேர்க்கவில்லை என்று நீங்கள் சொன்னால். அவ்வாறு இதன் மனமும், சுவையும் அவ்வளவு அருமையான பதத்தில் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 5, பச்சை மிளகாய் – 6, எண்ணெய் – 3 ஸ்பூன், கடலைமாவு – 3 ஸ்பூன், சாம்பார் பொடி – 2 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் –அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன். கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை ஒரு குக்கரில் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் பச்சைமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து, ஐந்து விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும், குக்கரை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை தனியாக வடி கட்டி வைக்க வேண்டும். பின்னர் ஒரு வைத்து இவற்றை நன்றாக கடைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன்பின் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு சொம்பு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் சூடானதும் அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் 2 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்க வேண்டும். பிறகு இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்துள்ள தக்காளி, வெங்காயத்தை இதனுடன் சேர்த்து, நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இறுதியாக ஒரு சிறிய கிண்ணத்தில் 3 ஸ்பூன் கடலை மாவு மற்றும் அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, கரைத்து இந்த சாம்பாருடன் சேர்த்து, 5 நிமிடம் அனைத்தையும் கொதிக்க விட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சாம்பாரை விடவும் அதிகம் சுவையில் இந்த தக்காளி சாம்பார் மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -