இந்த முறுக்கு செய்ய அரிசி ஊற வைத்து அதன் பிறகு காய வைத்து அரைத்து இது போன்ற எந்த வேலையும் இல்லாமல் நினைத்து மாத்திரத்தில் உடனே செய்யக்கூடிய ஒரு மிக மிக சுலபமான முறுக்கு ரெசிபி தான் இந்த இட்லி மாவு முறுக்கு. இந்த ஒரு ரெசிபி உங்களுக்கு தெரிஞ்சுதுன்னா இனி உங்க குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்ற பிரச்சனை இருக்காது ரொம்ப அளவுக்கு ஈசியா செய்யலாம். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
முன்பெல்லாம் முறுக்கு, சீடை போன்ற பலகாரம் எல்லாம் ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் தான் செய்வார்கள். இன்று அப்படியெல்லாம் இல்லை நினைத்தவுடன் செய்து விடக் கூடிய சுலபமான முறைகள் நிறையவே வந்து விட்டது. முன்பெல்லாம் இந்த முறுக்கு பிழிவது என்பது பெரிய வேலை. செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். ஆனால் இப்போதெல்லாம் அதையும் மிக சுலபமாக பிழிய நிறைய முறுக்கு பிழியும் கருவிகள் கூட வந்து விட்டது.
இப்படி ஒரு பலகாரம் செய்ய எத்தனை சுலப வழிகள் உள்ளது அத்தனை சுலப வழிகளையும் கண்டு பிடித்து வேலைகளை வெகுவாகவே குறைத்துக் கொண்டோம். இப்போது அதை விட சுலபமாக அரிசி ஊற வைத்து அரைத்து என எதுவுமே செய்யாமல் வீட்டில் ஒரு கப் இட்லி மாவு இருந்தால் போதும் இந்த முறுக்கு தயாராகி விடும்.
அதற்கு முதலில் ஒரு கப் அளவுக்கு பொட்டுக்கடலை எடுத்து மிக்ஸியில் நல்ல பைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.ஸகொஞ்சம் கூட கொரகொரப்பாக இருக்கக் கூடாது. ஒரு வேளை உங்கள் மிக்ஸியில் அப்படி அரைக்க வரவில்லை என்றால் அரைத்த உடன் மாவை ஜலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது சலித்த மாவுடன் ஒரு கப் அளவிற்கு இட்லி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக புளித்த இட்லி மாவு சேர்க்க வேண்டாம். இந்த இட்லி மாவுடன் கொஞ்சம் பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெள்ளை எள், இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் கலக்காமல் நன்றாக முறுக்கு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்களுக்கு தண்ணீர் பற்றவில்லை என்றால் லேசாக தெளித்துக் கொள்ளுங்கள் போதும்.
இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து முறுக்கு சுட எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள். நீங்கள் பிசைந்து வைத்த மாவை முறுக்கு பிழிய, நீங்கள் எந்த அச்சு வைத்திருந்தாலும் அதில் இந்த மாவை போட்டுமுறுக்கு பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். ரொம்ப ரொம்ப சுவையாகவும் மொறு மொறுவென்றும் என்று இருக்கும்.
இதையும் படிக்கலாமே: பாய் வீட்டு பிரியாணி மட்டும் இல்லைங்க, பாய் வீட்டு கல்யாண சோறும் ரொம்ப சூப்பரா இருக்கும். இதுவரைக்கும் சாப்பிடாதவங்க உடனே செய்ஞ்சு சாப்பிடுங்க
இனி முறுக்கு செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உடனே செய்துவிடலாம். இனி முறுக்கு சுடுவது எல்லாம் கூட ஒன்றும் பெரிய வேலையே இல்லை நினைத்த மாத்திரத்தில் முறுக்கு ரெடி.