10 வயதை பட்டுன்னு குறைக்க, 10 லவங்கம் இருந்தால் போதும். பல வருடங்கள் கடந்தாலும் நீங்கள் ஸ்வீட் 16ஆக இருப்பீர்கள்.

face
- Advertisement -

16 வயதில் எப்படி இளமையாக இருந்தோமோ, அதே போல 40 வயதிலும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. 16 வயதில் நமக்கு இருந்த சந்தோஷமும் மனநிறைவும் அப்படியே 40 வயதிலும் இருக்க வேண்டும். மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்டால், நாம் எத்தனை வயதை கடந்தாலும் இளமை நம்முடனே இருக்கும். இளமை என்பது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. மனது சம்பந்தப்பட்ட விஷயம். நமக்கு வயதாகி விட்டது என்ற எண்ணத்தை மனதிற்குள் கொண்டு வராதீங்க. எனக்கு எப்போதுமே வயது 16 என்று மனதில் நினைத்துக் கொண்டால், எப்போதுமே இளமையாக சந்தோஷமாக இருக்கலாம்.

மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். இந்த இரண்டு விஷயத்தை கடைபிடிக்கும் போதே உங்களுடைய தோற்றம் இளமையாக இருக்கும். தோல் சுருக்கம் ஏற்படாது. கண்ணுக்கு கீழே கருவளையம் வராது. இதோடு சேர்த்து கவனிக்க வேண்டிய விஷயம் உணவு பழக்க வழக்க முறைகள். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். இதோடு சேர்த்து பின் சொல்லக்கூடிய அழகு குறிப்பு பின்பற்றும் போது நீங்கள் என்றைக்குமே ஸ்வீட் 16 தான்.

- Advertisement -

இளமையான தோற்றத்தை தக்க வைக்கும் இலவங்கம்:
லவங்கம் 10 எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சின்ன உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக நுணுக்கி கொள்ள வேண்டும். அதாவது கொரகொரப்பாக நசுக்கி அந்த பொடியை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நசுக்கி வைத்திருக்கும் இந்த கிராம்பு தூளை அந்த தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி இந்த தண்ணீரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஒரு வாரம் கெட்டுப்போகாது. தினமும் இந்த தண்ணீரை உங்களுடைய முகத்திலும் கழுத்திலும் ஸ்பிரே செய்து அப்படியே லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

தினமும் இதை செய்யலாம். பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் தோல் சுருக்கம் வராது.

- Advertisement -

இரண்டாவதாக இன்னொரு அழகு குறிப்பு:
ஒரு சிறிய பவுல் எடுத்துக்கோங்க. அதில் 1 ஸ்பூன் காபி பவுடர் போட்டுக்கோங்க. உங்க வீட்டில் பயன்படுத்தும் எந்த இன்ஸ்டன்ட் காபி பவுடர் ஆக இருந்தாலும், அதில் போட்டு ஃப்ரிட்ஜில் சோர் செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா அந்த கிராம்பு தண்ணீர், அதை காபி பவுடரில் ஊற்றி, ஆலிவ் ஆயில் 1 ஸ்பூன் ஊற்றி, இதை பேஸ்ட் போல கலந்து அப்படியே முகம் கழுத்து பகுதியில் தேய்த்து லேசாக ஸ்கிரப் செய்து மசாஜ் செய்தால் முகத்தில் இருக்கும் டெட் செல்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவு பெறும். இந்த காபித்தூள் ஸ்கிரப்பரை வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் போட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: 50 வயதிலும் வெள்ளை முடி எட்டிப் பார்ப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இரண்டே வாரத்தில், இரண்டு மடங்கு முடி வளர, தேங்காய் எண்ணெயில் இதை போட்டு தலையில் தடவுங்க போதும்.

தோல் சுருக்கத்தை குறைத்து இளமையை தக்க வைக்க கூடிய தன்மை இந்த கிராம்புக்கு உண்டு. அழகான அழகு நீண்ட நாட்களுக்கு நிறைத்திருக்க இந்த எளிமையான குறிப்பு நிச்சயம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பு படிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -