உங்களின் வியாபார நஷ்டம், எதிரிகள் தொல்லை நீங்க இக்கோயிலுக்கு செல்லுங்கள்

நாம் விரும்பாவிட்டாலும் நமக்கு ஏதாவது ஒரு வகையில் எதிரிகள் உருவாகின்றனர். எதிரிகள் தொல்லை மற்றும் இன்ன பிற பிரச்சனைகளை தீர்க்கும் கோயில் இதோ

murugan
- Advertisement -

பிரபஞ்சத்தில் இருக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் அதற்கு எதிர்ப்பதமாக ஒரு விடயம் இருக்கவே செய்கிறது. மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பல காரணங்களால் சக மனிதர்களிடம் பகைமை கொண்டு தீங்கு செய்ய விளைகின்றனர். அத்தகைய எதிரிகளின் தொல்லைகளை போக்குவதோடு, பல நன்மைகளை அளிக்கும் ஒரு கொய்லாக இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பல சிறப்புகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord Murugan

அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு

சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோயிலாக இது இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். தேவி கெஜவள்ளி என அழைக்கப்படுகிறாள். இக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் இருக்கிறது. தீர்த்தம் சரவண தீர்த்தம் ஆகும்.

- Advertisement -

தல புராணங்களின்படி இவ்வூருக்கு அருகில் உள்ள கடம்பரை எனும் ஊரில் காசியப முனிவர் தான் செய்த யாகத்தை தடுக்க முயற்சிக்கும் மலையமான், மாகறன் என்னும் இரு அரக்கர்களை அழிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார். முனிவருக்கு காட்சி தந்த சிவபெருமான் தன் மகன் முருகன் அரக்கர்களை அழித்து, யாகம் நடைபெற உதவி புரிவான் என அருள்புரிந்தார். தந்தையின் கட்டளையை ஏற்று முருகப்பெருமான் அவ்விரு அரக்கர்களையும் அழித்தபோது, அவர் வீசிய வேல் இந்த ஊரின் பகுதியில் விழுந்ததால் இவ்வூருக்கு இளையனார்வேலூர் என பெயர் உண்டாயிற்று.

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் சிறப்புக்கள்:

- Advertisement -

ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உடைய கோயிலாக இது இருக்கிறது. சுவாமிநாத சித்தரால் இக்கோயில் உருவாக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது. கோயிலில் முருகனுக்கு காமிக ஆகமம் பூஜை செய்யப்படுகிறது. சித்திரை திருவிழா வைகாசி வசந்த உற்சவம், ஆவணி பவித்திர உற்சவம், புரட்டாசியில் கெஜவள்ளி உற்சவம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

kantha sasti kavasam lyrics

நேரடி மற்றும் மறைமுக எதிரிகளின் தொல்லைகள், நெடுநாட்களாக வியாபாரம், தொழில்களில் இருக்கும் நஷ்டங்கள், குழந்தை பாக்கியமின்மை போன்றவற்றிற்கு இங்கு வந்து வழிபடுவதால் சிறந்த பலன் உண்டாவதாக அனுபவம் பெற்றவர்கள் கூறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப பல்லக்கு எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

- Advertisement -

கோயில் அமைவிடம்

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளையனார்வேலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது

கோயில் நடை திறப்பு

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது.

கோயில் முகவரி

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
இளையனார்வேலூர்
காஞ்சிபுரம் மாவட்டம் – 631601

இதையும் படிக்கலாமே:
பித்ரு தோஷம் நீங்க இங்கு செல்லுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ilayanar vellore murugan temple in Tamil. It is also called as Ilayanar murugan kovil in Tamil or Viyabaram peruga in Tamil or Kanchipuram temples in Tamil or Ethirigal thollai neenga in Tamil.

- Advertisement -