இட்லிக்கு மாவு அரைக்க போறீங்களா? சட்டுன்னு 1 நிமிஷம் இதை பாருங்க. 5 நிமிடத்தில் ரிப்பன் பக்கோடா தயார்.

pakoda4
- Advertisement -

இட்லிக்கு மாவு அரைப்பதற்கும், ரிப்பன் பகோடா செய்வதற்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீங்க. சம்பந்தம் இருக்குதுங்க. நீங்க என்னைக்கு இட்லிக்கு மாவு அரைப்பீங்க. அப்ப மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாக்கணும். 5 நிமிடத்தில் சூப்பரான ரிப்பன் பக்கோடா தயார். நீங்க நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு சூப்பரான சிம்பிளான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தான் இது. வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபிக்குள் செல்வோம்.

இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது 1 டம்ளர் அரிசியை மட்டும் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு ஆட்டிய பின்பு அதிலிருந்து 2 கப் அரைத்த அரிசி மாவை மட்டும் தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். 1 கப் பொட்டுக்கடலையை எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாக பொடி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு பாத்திரத்தில் இட்லிக்கு அரைத்த அரிசி மாவை எடுத்து வைத்து இருக்கிறீர்கள் அல்லவா. அதில் இந்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து விட்டு, உருக்கி வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, இதை உங்கள் கையை கொண்டு நன்றாக பிசையவும். தண்ணீர் தேவைப்படாது. இதை முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

முறுக்கு குழாயை எடுங்கள். அதில் ரிப்பன் பகோடா அச்சை போடுங்கள். முறுக்கு குழாய்க்கு உள்ளே எண்ணெயை தடவி, தயார் செய்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டையாக பிடித்து அச்சில் போட்டு அப்படியே எண்ணெயில் ரிப்பன் பகோடா பிழிந்து விடுங்கள். இந்த பக்கோடா சிவந்து வரட்டும். சிடுசிடுப்பு அடங்கிய பின்பு எண்ணெயை வடித்து ரிப்பன் பகோடாவை எடுத்து சாப்பிட்டு பாருங்கள்.

- Advertisement -

அப்படியே எடுத்து உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் கொடுங்கள். இந்த ரிப்பன் பகோடா எதில் செய்தீர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அசத்தலான குறிப்பு இது. இட்லி மாவு அரைத்து எடுப்பதற்குள் சூப்பரான ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்துவிடலாம். மிஸ் பண்ணாதீங்க அடுத்தமுறை இட்லிக்கு மாவு அரைக்கும்போது இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

பின் குறிப்பு: உங்களுக்கு வேறு ஏதேனும் முறுக்கு அச்சு தேவை என்றாலும் அதை போட்டு முறுக்கு போல கூட புழிந்து கொள்ளலாம். அதேசமயம் பொட்டு கடலை மாவு அதிகமாகிவிட்டது. மாவு ரொம்பவும் கட்டியாகி விட்டது என்றால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளலாம். அல்லது அரிசி மாவு நிறைய இருக்கின்றது. மாவு ரொம்பவும் தலதல வென இருக்கிறது என்றால் இன்னும் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவை போட்டு அட்ஜஸ்ட் செய்தும் பிசைந்து கொள்ளலாம்.

- Advertisement -