இல்லத்தரசிகளின் கவனத்திற்கு! உங்கள் தினசரி வாழ்க்கையில் இந்த 5 விஷயங்களை செய்பவர்களா நீங்கள்? கண்ணுக்கு தெரியாத ஆபத்து உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

women
- Advertisement -

தினமும் வீட்டை கவனித்துக் கொள்ளும் இல்லத்தரசிகளாக நீங்கள் இருந்தால், உங்களுக்காகவே முழுக்க முழுக்க சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது. உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நீங்கள் இந்த விஷயங்களை செய்து வந்தால், அதை இன்றுலிருந்து மாற்றிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் காலப்போக்கில் அதுவே உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து பல பிரச்சனைகளில் கொண்டுபோய் விட்டுவிடும். அன்றாடம் இல்லத்தரசிகள் தங்களை அறியாமலேயே செய்யக்கூடிய அந்த தவறுகள் என்னென்ன தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

women5

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் முதலில் செய்யக்கூடிய தவறு. தன் குடும்பத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருடைய ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளும் இவர்கள், தங்களுடைய ஆரோக்கியத்தைப் பற்றி ஒருநாளும் சிந்திப்பதே கிடையாது. வீட்டில் இருக்கும் பெண்கள்தான் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் இருக்கும் மற்றவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். என்னேரமும் அடுத்தவர்களுக்காக மட்டும் நேரத்தை ஒதுக்கி வேலை செய்யும் நீங்கள், உங்களுக்காக தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கி உங்களுடைய உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

இரண்டாவது விஷயம். தினமும் காலையில் எழுந்தவுடன் காபி டீ குடிக்கும் பெண்கள் ஆக நீங்கள் இருந்தால் அதை நாளையிலிருந்து தவிர்த்துவிட்டு, சத்துமாவு கஞ்சி, ஜுரக தண்ணீர் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய விஷயங்களை முதல் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். இதோடு சேர்த்து தண்ணீரில் ஊற வைத்த 5 பாதங்களை தோலை நீக்கிவிட்டு இல்லத்தரசிகள் தினம்தோறும் சாப்பிடுவது மிக மிக நல்லது. குறிப்பாக 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.

women8

மூன்றாவதாக, இல்லத்தரசிகள் என்றால் சமைத்து முடித்து விட்டு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட்ட பின்பு மிச்சம் மீதி இருப்பதை தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சமைத்து முடித்து விட்டு, களைப்பாக இருக்கும் நீங்கள் முதலில் சூடான சாப்பிட்டினை மனநிறைவோடு, திருப்தியாக சாப்பிட்டுவிட்டு அதன் பின்பு உங்களுடைய குழந்தைகள் கணவரை பார்க்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. நீங்கள் பசியோடு இருந்து கொண்டு உங்களுடைய குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டினால் அது உங்களை அறியாமலேயே உங்களுக்குள் எரிச்சலை உண்டாக்கி குழந்தைகளிடம் வெறுப்பைக் காட்ட செய்யும்.

- Advertisement -

நான்காவு விஷயம். இன்றைய சூழ்நிலையில், யாருமே வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை. இதனால் நம்முடைய வீட்டிற்கும் யாரும் வரப்போவது கிடையாது என்பதால் வீட்டில் இருக்கும் பெண்கள் அழுக்கு பிடித்த நைட்டியோடு சீவாத தலையோடு இருக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய மன நிலையை பெரிதும் பாதிக்கும். கண்ணாடியில் உங்களுடைய முகத்தை நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன அழுத்தத்தை கொடுத்துவிடும்.

women1

ஐந்தாவது விஷயம். ஒரு பண்டிகை நாள், நல்ல நாள், விசேஷ தினம் என்றால் பெண்கள் அடுப்படியிலேயே கிடந்து கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுடைய வேலையை முந்தைய நாளே ப்ளான் செய்து, அடுத்த நாள் காலையே எல்லா சமையலையும் முடித்து விட்டு சிறிது நேரம் டிவி பார்ப்பது குழந்தைகள் கணவருடன் நேரத்தை கழிப்பது, அழகாக அலங்காரம் செய்துகொண்டு அந்த நல்ல நாளை செலவழிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குள் முழுமையான சந்தோஷம்.

- Advertisement -

women8

இறுதியாக முடிவுக்கு வருவோம். சரி இதையெல்லாம் இல்லத்தரசிகள் செய்யாமல் விட்டு விட்டால் என்ன ஆகும். இல்லத்தரசிகளுக்கு, அதாவது வீட்டில் இருக்கக்கூடிய அந்தப் பெண்களுக்குத் தானாகவே ஒரு மன அழுத்தம் ஏற்படும். அடிக்கடி முன்கோபத்திற்க்கு ஆளாவீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய ஒரிஜினாலடி என்று சொல்லப்படும் உங்களுடைய அடையாளமே வேறு மாதிரி மாறிவிடும். (குடும்பத்திற்காக நான் என்னைத் தியாகம் செய்கின்றேன் என்று நினைத்துக்கொண்டு நீங்கள் செய்யும் இந்த வேலைதான் காலப்போக்கில் உங்களுக்கே பிரச்சனையாக வருவது உங்களுக்கே தெரியாது).

sad-crying

நம்முடைய குடும்பத்திற்காக நாம் எவ்வளவு தியாகம் செய்து, எவ்வளவு உழைக்கின்றோம். நம்முடைய அழகு நம்முடைய ஆரோக்கியத்திற்கு என்று நாம் எதுவும் செய்து கொள்ளவில்லை. ஆனால் நம்மை கவனித்துக் இந்த வீட்டில் யாருமே இல்லை என்ற மன அழுத்தம் அவர்களுக்குள்ளேயே, அவர்களை அறியாமலேயே தோன்றி அவர்களது வாழ்க்கையின் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டு, சந்தோஷம் இல்லாத மனநிலைமை ஏற்பட்டுவிடும்.

family2

குழந்தைகளுக்கு கணவருக்கு வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு என்று பார்த்து பார்த்து நீங்கள் ஒவ்வொரு விஷயத்தை செய்யும்போதும், அந்த விஷயங்களில் இருந்து ஒரு பங்கை நீங்கள் உங்களுக்காக செய்து கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, சந்தோஷமாக இருந்தால்தான் உங்களுடைய குடும்பமும் சந்தோஷமாக இருக்கும். நீங்கள் தான் உங்களுடைய வீட்டிற்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டுமே தவிர, உங்களை நீங்களே வருத்திக் கொண்டு இருக்கக் கூடாது. இல்லத்தரசிகள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் மேல் சொன்ன விஷயங்களை உங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் மாற்றம் தெரியும். வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் உங்களை விட்டுப் போகாது.

- Advertisement -