கிரக பிரவேசம் செய்யும் பொழுது இந்த தவறுகளை செய்தால் அந்த வீட்டில் நிம்மதி வாழ முடியாதா? கிரக பிரவேசத்தில் செய்ய வேண்டியதும்! செய்யக்கூடாததும்!

gragapravesham

ஒரு வீட்டிற்கு புதிதாக கிரகப்பிரவேசம் செய்யும் பொழுது முறையாக புரோகிதரை அழைத்து பூஜை, புனஸ்காரங்கள் செய்வது வாடிக்கை. ஹோமம் செய்வதும், யாகம் நடத்துவதும் அந்த வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்தியும் நுழைய கூடாது என்பதற்காகவும், வாழப்போகும் வாழ்க்கை நலமோடும், செல்வச் செழிப்போடும் இருக்கவும் செய்வதாகும். கிரகபிரவேசம் செய்வதற்கு நாள், நட்சத்திரம் பார்ப்பதும் அவசியமாகும். அந்த வரிசையில் கிரகப்பிரவேசம் செய்யும் பொழுது எந்த தவறுகளை நாம் செய்கிறோம்? எதை செய்யக்கூடாது? அப்படி செய்தால் என்ன ஆகும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

new-house-graga

நீங்கள் புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்ய கட்டாயம் நல்ல நாள் பார்க்க வேண்டும். அந்த நாளில் குடும்பத்தலைவி தீட்டு படாமலும், வீட்டு விலக்கு ஆகாமலும் இருக்க வேண்டும். குடும்ப தலைவர் மற்றும் தலைவிக்கு சந்திராஷ்டம நாளாக இருக்கக் கூடாது. கரி நாளில் கட்டாயம் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.

சில பேர் வீடு கட்டும் பொழுது அரைகுறையாக நிறுத்தி வைத்திருப்பார்கள். முழுமையாக முடித்திருக்க மாட்டார்கள். கூடுமானவரை வீடு முழுமை பெறாமல் கிரகபிரவேசம் செய்வதை தவிர்ப்பது உத்தமம். அரைகுறையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வீட்டில் கிரகப்பிரவேசம் செய்வது முழுமையான பலனை கொடுக்காது என்று கூறப்படுகிறது. கிரகப்பிரவேசம் செய்யும் பொழுது எதிலும் அவசரம் காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள், மிகுந்த பக்தியுடன், பதட்டமின்றி கிரகப்பிரவேச பூஜைகள் நடைபெறுமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

gragapravesam

ஒருசிலர் எல்லாம் நேரமாகிவிட்டது என்று மிகுந்த அவசர அவசரமாக கிரகபிரவேச வேலைகளை செய்வார்கள். இப்படி அவசர அவசரத்துடன் செய்வது கெடுபலன்களை உண்டு பண்ணும். எனவே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பிரம்ம முகூர்த்த நேரமாக இருக்கும் 4 முதல் 6 மணி வரையிலான காலகட்டத்திலும், லக்ன முகூர்த்தமானா 6 முதல் 7 வரையிலான காலகட்டத்திலும் கிரகப்பிரவேசம் செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும். அதிகாலையில் செய்யும் பொழுது நேரத்தை தவற விடுவது, வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்பதை மனதில் கொண்டு கிரகப்பிரவேசத்தை திட்டமிட்டு நடத்துவது நலம் தரும்.

கிரகப்பிரவேசம் செய்பவர்கள் நீங்கள் கட்டிய வீடு இருக்கும் பகுதியில் ஏதாவது ஒரு கோவில் கோபுரத்தில் இருந்து புதிதாக வாங்கிய சுவாமி படம், அரிசி, பருப்பு, உப்பு, காமாட்சி அம்மன் விளக்கு, நிறைகுடம், மங்கலப் பொருட்களில் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகிய தாம்பூலம், தேங்காய் முதலியவற்றை எடுத்துக் கொண்டு தான் முதன் முதலாக கிரகப்பிரவேச வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

kalasam

நீங்கள் கட்டிய வீடு பெரிதாக இருந்தாலும், சிறிதாக இருந்தாலும் இதனை கட்டாயம் செய்ய வேண்டும். கிரகப் பிரவேசத்தின் பொழுது விநாயகர், லட்சுமி மற்றும் நவகிரகம் ஆகிய இந்த மூன்றுக்கும் தனித்தனியாக மூன்று கலசங்கள் வைக்க வேண்டும். கிரகப்பிரவேசம் முடிந்ததும் கலசத்தில் இருக்கும் நீரை புரோகிதர் மற்றும் யாராவது ஒருவரை மாடியில் ஈசானிய மூலையில் நின்று கொள்ள செய்ய வேண்டும். அதற்கு கீழே நேர ஈசானிய மூலையில் வீட்டின் உரிமையாளரும், அவருடைய மனைவியும் நின்று கொள்ள வேண்டும். மேலிருந்து அவர்கள் கலசத்தில் இருக்கும் நீரை தாரையாக இவர்கள் மேல் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் சர்வ தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பல சந்ததிகளோடு, செல்வ செழிப்புடன் வாழ்வாங்கு வாழ செய்யுமாம்.