கோலி, தோனி நிச்சயம் அணிக்கு தேவை. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணிக்கு இதுவே இரண்டாவது முறை – புள்ளி விவரம் இதோ

indian-team

இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. தொடர் போட்டிகள் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

நான்காவது போட்டியில் கோலிக்கு பதிலாக இந்திய அணியின் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இந்த போட்டியில் இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணி 92 ரன்கள் மட்டுமே அடித்து நான்காவது போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி ஒரு சாதனையும் நிகழ்த்தியுள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி சந்தித்த மிக மோசமான தோல்வியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான 88 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து சுருண்டது.

ms-vk

அதற்கு அடுத்து நேற்றைய போட்டியில் 92 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் கோலி மற்றும் தோனியின் தேவை இந்திய அணிக்கு மிக முக்கியம் என்று தெரியவந்துள்ளது. அடுத்த போட்டியில் தோனி இடம்பெறுவாரா? இந்திய அணி வெற்றி பெருமா? என்று பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே :

சச்சினையும், கோலியையும் உன்னால் மட்டுமே நெருங்க முடியும் நீ வா தம்பி – ஸ்ரீசாந்த்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்