இந்திய அணியின் புதிய சீருடையை அறிமுகப்படுத்திய பி.சி.சி.ஐ – புதிய சீருடையில் விளையாட தயாராகும் இந்திய வீரர்கள்

Pandya

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை துவங்க உள்ளது.

Koli

இந்நிலையில் நாளைய போட்டியில் இருந்து இந்திய அணி புதிய சீருடையில் இறங்கும் என்று புதிய சீருடையினை அறிமுகப்படுத்தியது பி.சி.சி.ஐ நாளைய போட்டியில் இருந்து உலகக்கோப்பை தொடரிலும் கூட இந்திய அணி இந்த சீருடையிலேயே விளையாட இருக்கிறது. இந்த சீருடை பிரபல நைக் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் நைக் நிறுவனம் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

இந்திய வீரர்களான தோனி, கோலி, பிரிதிவி ஷா மற்றும் ரஹானே ஆகியோர் இந்த சீருடை வெளியீட்டு விழாவிற்கு சென்று சீருடைகளை அணிந்து போஸ் கொடுத்தனர். ஆனால், அவ்வளவு நன்றாக இல்லை இந்த சீருடை. ஏற்கனவே இருந்த சீருடையை பார்ப்பதற்கு அழகாக இருந்தது என்று ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புதிய சீருடை :

new jersy

இந்த சீருடை அந்த அளவிற்கு நான்றாக இல்லை என்பது நிதர்சனம். அடிக்கடி சீருடை மாற்றுவதை விடுத்து ஆட்டத்திற்கு தேவையான வீரர்களை மாற்றுங்கள் என்று ரசிகர்கள் இந்த புதிய சீருடைக்கு கமென்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

எம்.எஸ்.தோனி : சிறிய ஷார்ட்ஸ் அணிந்து தோனியை இறுக்க கட்டிப்பிடித்த பெண் ரசிகை – வைரல் புகைப்படம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Indian team have to played with a new jersy