புதிய வீரர் அறிமுகம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியின் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு

team

இந்திய அணி இந்த மாதம் இறுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி அறிவிக்கப்பட்ட இந்திய அணிவீரர்களின் விவரம் இதோ :

இந்திய அணியில் சில மாறுதல்கள் இந்த பட்டியலில் உள்ளது. அதன்படி தடையிலிருந்து மீண்ட ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். மேலும், இந்திய அணிக்காக புதிய அறிமுகம் ஆக மாயங்க் மார்கண்டே அறிமுகம் காண இருக்கிறார். இவர் ஏற்கனவே ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

markande

மேலும், கலீல் அகமது அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் தொடர்வார்கள் என்று கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து செம பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம் – காரணம் இவர்தான்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்