இந்த இன்ஸ்டன்ட் அதிரசத்தை நினைத்த உடனே சுலபமாக செய்திடலாம். இனி அதிரசம் செய்ய கம்பி பதம் பார்த்து பாகு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்த இன்ஸ்டன்ட் அதிரசத்தை நினைத்த உடனே சுலபமாக செய்திடலாம். இனி அதிரசம் செய்ய கம்பி பதம் பார்த்து பாகு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

adhirasam
- Advertisement -

பண்டிகை காலங்களில் இனிப்பு பலகாரங்களை செய்து, படையலில் வைத்து, சாமி கும்பிட்டு அதன் பின்னர் நமது உறவினர்களும் அக்கம் பக்கத்து வீட்டாருக்கும் பலகாரங்களை பகிர்ந்து கொடுப்பது தான் நமது மரபாகும். அவ்வாறு விழாக்காலங்களின் போது வீட்டில் செய்யக்கூடிய சுவையான அதிரசத்தை எப்போதாவது ஒருமுறைதான் செய்வார்கள். இந்த அதிரசம் செய்ய ஒரு கம்பி பதம் வரும் வரை கவனமாக வெல்லம் அல்லது சர்க்கரை வைத்து பாகு எடுத்து அதனுடன் அரிசி மாவினை கலந்து தான் அதிரசம் செய்ய வேண்டும். இந்த கம்பிப் பதம் சரியாக வரவில்லையென்றால் அதிரசம் செய்வது சிரமமாக இருக்கும். ஆனால் இப்போது நாம் பார்க்கப் போகும் இந்த இன்ஸ்டன்ட் அதிரசத்தை செய்ய பாகு எடுக்க வேண்டிய அவசியமும், கம்பிப் பதம் வர வேண்டிய அவசியமும் இல்லை. வாருங்கள் இந்த இன்ஸ்டன்ட் அதிரசத்தை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாகும் தெரிந்து கொள்வோம்.

vilakku2

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், ரவை – அரை கப், பொடித்த சர்க்கரை – அரை கப், தேங்காய் துருவல் – அரை கப், உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – 2 ஸ்பூன், பாதாம் – 10, முந்திரி – 10, ஏலக்காய் – 4, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 10 முந்திரி, 10 பாதாம், 4 ஏலக்காய் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

Badam benefits in Tamil

அதன்பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, அரை கப் ரவை, அரை கப் பொடித்த சர்க்கரை, அரை கப் துருவிய தேங்காய் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு ஒரு சிட்டிகை உப்பு, 2 ஸ்பூன் நெய் மற்றும் பொடியாக அரைத்து வைத்துள்ள பாதாம் முந்திரி கலவை இவற்றையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு கப் காய்ச்சிய பாலை இந்த மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பால் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். மாவை நன்றாக பிசைந்து முடித்த பின்னர் பெரிய உருண்டையாக எடுத்து கொண்டு, சப்பாத்தி திரட்டும் மனை மீது வைத்து, சிறிதளவு கோதுமை மாவை பரவலாக தூவி விட்டு, மெல்லியதாக திரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வட்டவடிவ கின்னத்தை பயன்படுத்தி மாவினை எத்தனை துண்டுகளாக வெட்ட முடியுமோ அத்தனை துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீதமுள்ள மாவினையும் இதே மாதிரி வட்டவடிவில் வெட்டி எடுக்க வேண்டும்.

wheat

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வட்ட வடிவில் வெட்டி வைத்துள்ள மாவிலிருந்து ஒவ்வொன்றாக எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். மாவினை எண்ணெயில் சேர்த்தவுடன் நன்றாக உப்பி சிவந்து வரும்பொழுது ஒரு ஜார்னி கரண்டியை பயன்படுத்தி நன்றாக அழுத்தி எண்ணெயை பிழிந்து அதன்பின் வெளியே எடுக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாவையும் பொரித்து எடுத்தால் சுவையான அதிரசம் தயாராகிவிடும்.

- Advertisement -