குக்கரை பயன்படுத்தி சுலபமான முறையில் 1/2 மணி நேரத்தில் கெட்டி தயிர் செய்ய இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க

curd
- Advertisement -

முன்பெல்லாம் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை வீட்டில் தயார் செய்து தான் உபயோகித்து வந்தோம். ஆனால் இன்று மாறி வரும் காலத்திற்கு ஏற்ப எல்லாம் பாக்கெட்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் இப்போதும் கூட நெய் வெண்ணெய் போன்றவைகளை கடைகளில் கிடைக்கும் பாக்கெட்களில் வாங்கினாலும் தயிரை மட்டும் இன்றும் பலர் வீட்டில் உறை ஊற்றி தான் சாப்பிடுகிறார்கள். ஆனால் அப்படி வீட்டு தயிர் தான் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் ஒரு நாள் காத்திருக்க வேண்டும்.

முதல் நாள் பாலை காய்ச்சி அதில் உறை ஊற்றி இரவு முழுவதும் காத்திருந்தால் தான் அடுத்த நாள் தயிர் கிடைக்கும். அரை மணி நேரத்தில் வீட்டிலே கெட்டி தயிர் தாயராகி விடும் என்பது கேட்கவே ஆச்சரியமாக தான் உள்ளது. ஆனால் அது உண்மையும் கூட. வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

முதலில் ஓரு கனமான பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீர் இருந்தால் கூட போதும். பாலை காய்ச்சும் போது தண்ணீர் சேர்க்கவே கூடாது. பின் இந்த இரண்டு ஸ்பூன் தண்ணீர் எதற்கு என்றால், தண்ணீர் ஊற்றிய பிறகு, பாலை ஊற்றினால் பால் அடிப்பிடிக்காமல் இருக்கும். இது சாதாரணமாக பால் காய்ச்சும் போது கூட பாத்திரத்தில் முதலில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிய பின் பாலை ஊற்றி காய்ச்சினால் பாத்திரம் அடிப்பிடிக்காது, தேய்க்கவும் சுலபமாக இருக்கும்.

பாலை நன்றாக தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி எடுத்த பின், அதை மற்றொரு பாத்திரத்திரத்திற்கு மாற்றி விடுங்கள். இந்த பாத்திரம் உங்கள் வீட்டில் இருக்கும் குக்கரின் உள்ளே வைக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். பால் மிதமான சூட்டில் இருக்கும் போது குக்கரில் நன்றாக கொதிக்கும் நீரை ஊற்றி, எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த பால் ஊற்றி வைத்த பாத்திரத்தை எடுத்து குக்கரில் வைத்து விடுங்கள். குக்கரில் ஊற்றி இருக்கும் தண்ணீர் இந்த பால் பாத்திரத்தில் பாதி அளவு இருக்க தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

பின்பு நாம் குக்கரை சமைக்கும் போது எப்படி மூடுவோமோ கேஸ் கட்டை, வெயிட் எல்லாம் போட்டு மூடி வைத்து விடுங்கள். நீங்கள் குக்கரை குளிர்ந்த இடத்தில் வைக்க கூடாது. சற்று அனல் உள்ள இடமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ரூம் டெம்பரேச்சர் மற்றும் குக்கரில் ஊற்றி இருக்கும் தண்ணீரின் சூட்டில் தான் தயிர் உறையும். எனவே இதை சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அரை மணி நேரம் இப்படியே வைத்தால் போதும், பின்பு குக்கரை திறந்து பாருங்கள். அப்போது தான் காய்ச்சி வைத்த பால் எப்படி கெட்டித் தயிர் ஆகி இருக்கிறது என்று நீங்களே அதிசயத்து போவீர்கள்.

- Advertisement -