இன்ஸ்டன்ட் இட்லி மாவு அரைக்கும் போது ரகசியமான இந்த 2 பொருட்களை சேர்த்தால், இட்லி அவ்வளவு பஞ்சு போல கிடைக்கும். கிரைண்டரில் மாவு ஆட்டி, இட்லி சுட்டால் கூட இந்த மல்லிகை பூ இட்லி கிடைக்காது.

idli
- Advertisement -

வீட்டில் இட்லி சுடுவது என்பது அவ்வளவு சுலபமான வேலை அல்ல. உளுந்து ஊற வைத்து, அரிசி ஊற வைத்து கிரைண்டரில் மாவு ஆட்டி இட்லி வார்த்தாலும், இட்லி என்ன கல்லு போல வருது அப்படி என்று வீட்டில் இருப்பவர்கள் சொல்லுவார்கள். இவ்வளவு கஷ்டப்படாமல் சாப்பிட்டாக இட்லி செய்ய ஒரு இன்ஸ்டன்ட் இட்லி மாவு ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு இந்த குறிப்பு மிக மிக உதவியாக இருக்கும்.

இந்த இன்ஸ்டன்ட் இட்லி மாவு அரைப்பதற்கு இட்லி அரிசி – 1 கப், முழு உளுந்தம் பருப்பு – 1/2 கப், மாவு ஜவ்வரிசி – 1/2 கப், வெள்ளை அவல் – 3/4 கப், இந்த நான்கு பொருட்கள் தேவை. ஜவ்வரிசியையும் அவல் சேர்த்து இந்த மாவை நாம் தயார் செய்யும் போது, இட்லி அத்தனை சாப்பிட்டாக பஞ்சு போல, கிடைக்கும் என்றால் பாருங்கள். இதில் வெள்ளை அவல் பதிலாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு அவல் கூட சேர்க்கலாம். ஆனால் இட்லியின் நிறம் கொஞ்சம் மாறுபடும்.

- Advertisement -

முதலில் அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி, தண்ணீரை வடிகட்டி வெள்ளை துணியில் ஈரம் போக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெயிலிலும் காய வைக்கலாம். ஃபேன் காற்றிலும் காய வைக்கலாம். உங்களுடைய விருப்பம். கழுவிய பின்பு காய்ந்த அரிசி நமக்கு தேவை அவ்வளவுதான்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எடுத்து வைத்திருக்கும் உளுந்தை போட்டு 2 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து வறுக்க வேண்டும். உளுந்து சிவப்பு நிறமாக மாறக்கூடாது. உளுந்து சூடாக வேண்டும். உளுந்து சூடாவி வந்தவுடன் இதோடு ஜவ்வரிசி, அவல் சேர்த்து மீண்டும் வறுக்க தொடங்க வேண்டும். ஜவ்வரிசியும் அவலும் சூடாக வேண்டும் நிறம் மாறக்கூடாது. இந்த மூன்று பொருட்களும் அதிகபட்சம் மூன்று நிமிடம்தான் கடாயில் வறுபட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து தான் இதை நீங்கள் வறுக்க வேண்டும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வறுபட்ட இந்த மூன்று பொருட்களையும் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது பருப்பு வறுத்த அதே கடாயில் இட்லி அரிசியை போட்டு வெறும் 2 நிமிடம் மட்டும் அரிசியை சூடு செய்து அதையும் தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆரவைத்து விடுங்கள். இப்போது அரைப்பதற்கு அரிசி பருப்பு ஜவ்வரிசி அவல் எல்லாம் தயாராக இருக்கிறது.

முதலில் இட்லி அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு சிறு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். நைசாக அரிசியை அரைக்க கூடாது. ரொம்பவும் குருணை குருணையாகவும் அரைக்கக்கூடாது. நைஸ் ரவை பக்குவத்தில் அதை அரைத்து ஒரு தட்டில் கொட்டி ஆரவைத்து விடுங்கள். அடுத்து வறுத்து வைத்திருக்கும் உளுந்து ஜவ்வரிசி அவல் போட்டு மிக நைசாக மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும். இதை சலித்து தான் அரிசி மாவோடு கலக்க வேண்டும். குருணையோடு கலக்கவே கூடாது.

சலித்த உளுந்து ஜவ்வரிசி அவல் மற்றும் அரிசியை அகலமான ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து ஆற வைத்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தால் இன்ஸ்டன்ட் இட்லி மாவு தயார். ஒரு காய்ந்த டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இந்த மாவு மூன்று மாதங்கள் வரை கூட கெட்டுப்போகாமல் இருக்கும். இப்போது இதிலிருந்து உங்களுக்கு தேவையான மாவை ஒரு கிண்ணத்தில் அளந்து போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உங்கள் கையைக் கொண்டு இட்லி மாவு பக்குவத்திற்கு கரைத்து வைத்து விடுங்கள். உப்பு போட்டு கரைத்து வைக்க வேண்டும். மாவு 8 மணி நேரம் புளித்ததும், அந்த மாவை நன்றாக கலந்தால் இட்லி மாவு தயார். வழக்கம் போல இட்லி வார்த்து பாருங்கள். உங்களுக்கே தெரியும். சூப்பரான இட்லி தயாராகி இருக்கும்.

- Advertisement -