துணியில் இருக்கும் அழுக்கு நீங்க டிப்ஸ்

dirty cloth
- Advertisement -

வீட்டில் அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளில் ஒன்றுதான் துணி துவைப்பது. இன்றைய காலகட்டத்தில் பலரின் இல்லங்களிலும் வாஷிங் மெஷின் வந்துவிட்டது என்றாலும் அந்த வாஷிங்மெஷினில் துணிகளை போடும்பொழுது அழுக்கு முழுமையாக போவது கிடையாது. இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் அழுக்குகள் எளிதில் போவதற்கு செய்யக்கூடிய எளிய டிப்ஸை பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

கையில் துவைப்பதாக இருந்தாலும் சரி வாஷிங்மெஷினில் துவைப்பதாக இருந்தாலும் சரி அழுக்குகள் நிறைந்த துணிகளை துவைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். வாஷிங் மிஷினில் துவைப்பவர்களாக இருந்தால் வாஷிங் மெஷினில் துவைப்பதற்கு முன்பு கைகளில் அழுக்குகள் இருக்கும் இடங்களில் சோப்பு போட்டு கசக்கி பிறகு வாஷிங்மெஷினில் போடுவார்கள். இப்படி கஷ்டப்பட்டு துணி துவைப்பதற்கு பதிலாக எளிய முறையில் துணிகளை எப்படி துவைப்பது என்று பார்ப்போம்.

- Advertisement -

கையில் துவைப்பவர்கள் முதலில் துணியை சோப்புத்தூள் போட்டு ஊற வைத்து பிறகு துவைப்பார்கள். ஆனால் வாஷிங்மெஷினில் அப்படியே நாம் நேரடியாக துணிகளை மெஷினில் போட்டு ஆன் செய்துவிட்டால் அதுவே ஊறவைத்து துவைத்து விடும். அவ்வாறு செய்வதால் அழுக்குகள் விரைவில் நீங்காது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் சாதாரண தண்ணீரில் அரை மணி நேரம் துணிகளை ஊறவைத்து கொள்ள வேண்டும். இப்படி ஊறவைப்பது மூலம் துணிகளில் இருக்கும் தூசுகள் அனைத்தும் அந்த தண்ணீரில் வந்து விடும். சில மேலோட்டமாக இருக்கும் அழுக்குகளும் நீங்கிவிடும்.

பிறகு ஒரு பக்கெட்டில் தேவையான அளவு சோப்புத்தூளை போட்டு அதனுடன் கொஞ்சம் கல்லுப்பையும் போட்டு நன்றாக கரைத்து விட்டு அதில் அரை மணி நேரம் துணியை ஊற வைக்க வேண்டும். பிறகு வாஷிங் மிஷினிலோ அல்லது கையிலோ துவைத்து முடிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் துணிகளில் இருக்கும் அழுக்குகள் விரைவில் நீங்கிவிடும். சாயம் போகும் துணிகளாக இருக்கும் பட்சத்தில் கல்லுப்புடன் சிறிது வினிகரை சேர்த்து ஊற வைத்தால் சாயம் போகாது.

- Advertisement -

மேலும் வேலைப்பாடுகள் நிறைந்த துணிகளை வாஷிங்மெஷினில் போடக்கூடாது. அதை கையில் துவைக்கும் பொழுது நாம் சோப்புத்தூளை பயன்படுத்தி ஊற வைத்து துவைத்தால் அதில் இருக்கும் வேலைப்பாடுகள் நீங்க வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சோப்பு தூளுக்கு பதிலாக நாம் நம் தலைக்கு உபயோகப்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி துணியை ஊற வைத்து துவைத்தால் துணியில் இருக்கும் அழுக்குகளும் நீங்கும் . அதேசமயம் வேலைப்பாடுகளில் எந்த பிரச்சினையும் இருக்காது. அது மட்டுமல்லாமல் துணி புத்தம் புதுசு போல் பளிச்சென்று இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை தீபத்திற்கு பயன்படுத்திய பழைய திரிகளை என்ன செய்வது?

இந்த எளிமையான துணி துவைக்கும் டிப்ஸை பயன்படுத்தி உங்கள் வீட்டில் எவ்வளவு துணி இருந்தாலும் அதை எளிதில் விரைவாக அழுக்குகள் நீங்க துவைக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -