- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நினைத்த உடனேயே வெறும் 2 நிமிடத்தில் உளுந்து வடை செய்ய முடியுமா என்ன? அது எப்படி?

நினைத்த உடனேயே வெறும் 2 நிமிடத்தில் உளுந்து வடை செய்ய முடியுமா என்ன? அது எப்படி?

- Advertisement -

நினைத்த உடனேயே உளுந்து சேர்த்த, உளுந்து வடையை இரண்டே நிமிடத்தில் செய்ய முடியுமே, இந்த உளுந்து ப்ரீமிக்ஸ் பொடியை அரைத்து வைத்துக் கொண்டால். உளுந்து மாவை அரைத்த வடை போல, இதன் சுவை இருக்குமா, என்று நிறைய பேருக்கு சந்தேகம் கட்டாயம் இந்த இடத்தில் எழும். வயதானவர்கள், சிறிய குழந்தைகளை வைத்திருப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என்று இவர்களுக்கு எல்லாம் உளுந்து வடை சாப்பிட வேண்டும் என்றால் இந்த மாவை இன்ஸ்டன்டாக எடுத்து போட்டு வடை சுடலாம். அவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள குறிப்பு இது. நீங்களும் குறிப்பை படித்து பாருங்கள். பிடித்திருந்தால் முயற்சி செய்யலாம். இதோ உளுந்து ப்ரீமிக்ஸ் ரெசிபி உங்களுக்காக.

பவுடர் அரைக்கும் முறை

முதலில் 1 கிலோ உளுந்து, 1 கிலோ பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி, மாவு பச்சரிசியாக இருந்தால் நல்லது. அல்லது ரேஷன் பச்சரிசியை கூட பயன்படுத்தலாம். இந்த இரண்டு பொருட்களையும் தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

ஊறிய பின்பு தண்ணீரை நன்றாக வடிகட்டி, ஒரு வெள்ளை துணியில் பரப்பி வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். உங்கள் ஊரில் வெயில் குறைவு என்றால், ஃபேன் காற்றிலேயே ஒரு நாள் முழுவதும் ஈரம் இல்லாமல் காய வைத்து விட்டு, ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியாக தான் அரைத்து எடுக்க வேண்டும் ஒன்றாக அரைக்க கூடாது.

அரைத்த உளுந்து மாவையும், அரைத்த பச்சரிசி மாவையும் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொல்லப் போகின்றோம். அதற்கு எதற்காக தனித்தனியாக அறைக்க வேண்டும். ஒன்றாக போட்டு அரைக்க கூடாதா என்று நிறைய பேருக்கு சந்தேகம் வரும். காரணம் இருக்கிறது.

- Advertisement -

உளுந்தை, அரிசியோடு சேர்த்து அரைக்கும் போது அது நைசாக அரைபட்டு நமக்கு கிடைக்காது. அதனால்தான் இரண்டையும் தனித்தனியாக அரைத்து வாங்குகின்றோம். இரண்டையும் அரைத்த பின்பு சூடு ஆறிய பின்பு ஒன்றாக கலந்து டப்பாவில் ஸ்டோர் செய்து விட்டீர்களா. இப்போது இன்ஸ்டன்டான வடை மாவு நமக்கு தயாராக இருக்கிறது.

வடை செய்யும் முறை

அரைத்து வைத்திருந்த மாவில் இருந்து தேவையான அளவு மாவை மட்டும் ஒரு அகலமான பேஷனில் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக சீவிய இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு தேவையான அளவு, கருவேப்பிலை கொத்தமல்லி தழை, சேர்க்கவும். சோடா உப்பு தேவையான அளவு கட்டாயம் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

சோடா உப்பு சேர்க்காமல் செய்தால் இந்த வடை ரொம்பவும் ரஃப் ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (நீங்கள் எடுத்திருக்கும் மாவின் அளவுக்கு ஏற்ப மேல் சொன்ன பொருட்களை எல்லாம் போட்டுக் கொள்ளுங்கள்.)

மெதுவடைக்கு உங்கள் தேவைக்கு ஏற்ப எந்தெந்த பொருட்களை எல்லாம் மாவோடு கலப்பீர்களோ அதையெல்லாம் போட்டு கலந்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உங்கள் கையை கொண்டு மாவை நன்றாக பிசைய வேண்டும். ரொம்பவும் கட்டிப்பதமாக பிசைந்தாலும் வடை ரஃப்பாக கிடைக்கும். ஆகவே கொஞ்சம் தளதளன்னு மாவை பிசைந்து வடை மாவு பக்குவத்திற்கு கொண்டு வந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அட இது எல்லாமே சூப்பர் ஐடியாவா இருக்கேங்க! இல்லத்தரசிகளை, ஸ்மார்ட் இல்லத்தரசிகளாக மாற்றும் செலவை குறைக்கும் புத்தம் புதிய ஐடியாக்கள் 10 இதோ உங்களுக்காக.

அடுப்பில் கடாயை வைத்து அதில் வடையை பொறித்தெடுக்க தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது வழக்கம் போல இந்த மாவை வடைபோல தட்டி எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான மெதுவடை தயார். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க. காலையில் பிரேக்ஃபாஸ்ட்க்கு கூட சட்டென இந்த வடையை தயார் செய்யலாம்.

சற்று முன்