அட இது எல்லாமே சூப்பர் ஐடியாவா இருக்கேங்க! இல்லத்தரசிகளை, ஸ்மார்ட் இல்லத்தரசிகளாக மாற்றும் செலவை குறைக்கும் புத்தம் புதிய ஐடியாக்கள் 10 இதோ உங்களுக்காக.

tips1
- Advertisement -

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை சரி செய்ய உடனடியாக வீட்டில் ஒரு ஸ்மார்டான ஐடியாவை கையில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் வீட்டிலும், சமையலறையிலும், எந்த நேரத்தில் எந்த பிரச்சனை வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்காக ஒரு சில பிரச்சனைகளுக்கான தீர்வு தரும் புத்தம் புது ஐடியாக்களை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்புகளை படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது ஒவ்வொன்றாக எடுத்து விடுங்கள். பார்ப்பவர்கள் அசந்து போவார்கள். எளிமையான வீட்டுக்குறிப்பு 10 இதோ உங்களுக்காக.

குறிப்பு 1:
அகலமான ஒரு கடாயில் 2 கைப்பிடி அளவு ரேஷன் அரிசி இருந்தால் கூட போட்டு அதை நன்றாக வறுத்து எடுத்து ஒரு காட்டன் துணியில் வைத்து மூட்டை கட்டிக் கொள்ள வேண்டும். இதன் சூடு அவ்வளவு எளிதில் குறையாது. சூடான இந்த ஹாட் ஒத்தடப்பையை வலி இருக்கும் இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். குறிப்பாக பெண்களுக்கு வயிறு வலி வரக்கூடிய மாதவிடாய், மூன்று நாட்கள் இருக்கிறது அல்லவா, அப்போது இதை வைத்து வயிற்றின் மேல் லேசாக ஒத்தடம் கொடுத்தால் இதமாக இருக்கும். கை கால் வலிக்கு கூட இதை பயன்படுத்தலாம்.

- Advertisement -

குறிப்பு 2:
வாட்டர் கேனில் இருந்து கெட்ட வாடை வீசிக்கொண்டே இருக்கிறதா. அதில் கொஞ்சமாக கல் உப்பு, அலுமினியம் ஃபாயில் பேப்பரை கசக்கி சிறிய உருண்டைகளாக அதில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, நன்றாக குலுக்கி கழுவி ஊற்றினால் உள்ளே இருக்கும் துர்நாற்றம் முழுவதும் உடனடியாக நீங்கும்.

குறிப்பு 3:
இட்லி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தாலும் சீக்கிரம் புளித்து போகுதா. ஆட்டி பிரிட்ஜில் வைத்த இட்லி மாவில், வாழை இலையின் ஓரங்களில் இருக்கும் தண்டுகளை வெட்டி சிறு சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு வையுங்கள். அதை மீண்டும் மாவிலிருந்து எடுக்கும் அளவு போடுங்கள். ரொம்பவும் பொடியாக நறுக்கி போட்டுடாதீங்க. வாழை இலைக்கு நடுவில் குச்சி போல இருக்கும் பகுதியை வெட்டி போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இட்லி மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
ஒரு சில வீட்டில் குழந்தைகளுக்காக இரண்டு இட்லி வார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதற்காக வேண்டி பெரிய இட்லி குக்கரை பயன்படுத்தாதீங்க. அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி மேலே ஒரு சிறிய கிண்ணம் அல்லது களவடை வைத்து, அதன் மேலே ஒரே ஒரு இட்லி தட்டில் இரண்டு இட்லி வார்த்து மேலே ஒரு மூடி போட்டு வைத்து விட்டால் இட்லி சூப்பராக வெந்து கிடைக்கும். (அதே கடாயில் பொறியல் குழம்பு செய்து கொள்ளலாம். நிறைய பாத்திரம் எடுக்கும் வேலை மிச்சம்.)

குறிப்பு 5:
குப்பை வாரும் மரத்திற்கு மேலே ஒரு கேரி பேகை நுழைத்து கட்டி விட்டு விடுங்கள். குப்பை வாரும்போது முறம் அழுக்காகாமல் இருக்கும். முறத்தை அடிக்கடி கழுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்க குப்பை மரம் எப்போதுமே புதுசு போல அழகாய் இருக்க இந்த டிப்ஸ் போதும்.

- Advertisement -

குறிப்பு 6:
ஸ்டீல் கடாயில் தாளிக்கும் போதும் பொரியல் செய்யும் போதும் அடியில் கருப்பாக தீய்ந்து போகிறதா. ஸ்டில் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றிவிட்டு, அந்த எண்ணெயை அப்படியே கடாய் முழுவதும் பரப்பி விடுங்கள். கடாயின் அடிப்பகுதி முழுவதும் அந்த எண்ணெய் பரவி இருக்கும்படி செய்தால் சீடீல் கடாய் அடி பிடிக்காது. நான் ஸ்டிக் கடாய் போலவே செயல்படும்.

குறிப்பு 7:
நிறைய பேர் வீட்டில் இப்போது வெஜிடபிள் சாப்பர் இருக்கிறது. அதாவது கையாலேயே இழுத்து இழுத்து காய்கறி வெங்காயம் சாப் செய்வார்கள் அல்லவா. அதனுடைய பிளைட் சீக்கிரத்தில் மொக்கை ஆகிவிடும். அந்த பிளைட்டை நம்மால் தனியாக கையில் எடுக்க முடியும். ஒரு மண் அகல் விளக்கை தவித்து வைத்து, இந்த பிளேடின் இரண்டு பக்கத்தையும் தேய்த்துக் கொடுத்தால், சாப்பரின் பிலைட் சீக்கிரம் ஷார்ப்பாகும். ட்ரை பண்ணி பாருங்க.

குறிப்பு 8:
ஷேவிங் செய்ய பயன்படுத்தும் ரேசர் சீக்கிரம் மொக்கை ஆகிவிட்டதா. ஒரு ஜீன்ஸ் பேண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மொக்கையான ரேசரை, அந்த ஜீன்ஸ் பேண்டில் வைத்து அப்படியே ஷேவ் செய்து கொடுங்கள். ஒரே இடத்தில் தேய்த்தால் பேண்ட் கிழிந்து விடும். ஜீன்ஸ் பேண்டில் தள்ளி தள்ளி 10 இடத்தில் ஷேவ் செய்து கொடுங்கள். 10 முறை இப்படி ஜீன்ஸ் பேண்டில், ஷேவ் செய்தால் உங்களுடைய ரேசர் டக்குனு ஷார்ப்பா கிடைக்கும்.

குறிப்பு 9:
வெட்டிய வெங்காயத்தில் பாதி மீதும் இருக்குதா. மீதமாகும் என்று தெரிந்தால் வெங்காயத்தை தோலுடன் பாதியாக வெட்டுங்கள். ஸ்டோர் செய்யும் வெங்காயத்தை தோலோடு தான் ஸ்டோர் செய்து வைத்திருக்க வேண்டும். வெங்காயத்தை வெட்டிய உள்பாகத்துக்குள் நெய் அல்லது வெண்ணெய் தடவி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கவிழ்த்து வையுங்கள். இதன் மேலே ஒரு மூடியை போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால், அடுத்த ஒரு நாளைக்குள் இந்த மீதமான வெங்காயத்தை பயன்படுத்தலாம். வெட்டிய வெங்காயத்தை ரொம்ப நாள் வைத்து பயன்படுத்தக் கூடாது.

இதையும் படிக்கலாமே: ஹோட்டலில் கிடைக்கும் லேயர் பரோட்டாவை ரொம்ப ஈஸியா, முட்டை கூட சேர்க்காமல் வீட்டில் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

குறிப்பு 10:
ஒரு பௌலில் ஒரு சொம்பு அளவு கொதிக்க கொதிக்க சுடுதண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எக்ஸ்பியர் ஆன மாத்திரையாக இருந்தால் கூட பரவாயில்லை. மூன்றிலிருந்து நான்கு மாத்திரையை தூள் செய்து வச்சுக்கோங்க. நம் குழந்தைகள் குடிக்கும் ஏதாவது ஒரு சிறப்பு நிச்சயம் மிச்சம் நம் வீட்டில் இருக்கும் அதிலிருந்து இரண்டு மூடியை இந்த வெந்நீரில் ஊற்றி, பொடி செய்த மாத்திரையையும் வெந்நீரில் போட்டு ஒரு ஸ்பூன் வைத்து, நன்றாக கலந்து இதை சிங் ஓட்டை பாத்ரூமில் இருக்கும் ஓட்டையில் ஊற்றி விட்டால் கரப்பான் பூச்சி பூரான் கொசு தொல்லை இருக்கவே இருக்காது. ட்ரை பண்ணி பாருங்க. வாரத்தில் ஒரு நாள் ராத்திரி தூங்கும்போது இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க. தேவை, உங்கள் வீட்டில் அதிகம் பூச்சி தொல்லை இருக்கிறது என்றால் தினம் தினம் கூட இரவு எப்படி செய்யலாம்.

- Advertisement -