20 நிமிடத்தில் சூப்பரான ஸ்பெஷல் ரவை தோசையும், இதற்கு தொட்டுக் கொள்ள ஹோட்டல் ஸ்டைல் ஸ்பெஷல் தேங்காய் சட்னியும் செய்வது எப்படி?

dosai
- Advertisement -

பெரும்பாலும் இட்லி தோசை மாவு இல்லை என்றால், நமக்கு என்ன டிபன் செய்வது என்றே தெரியாது. ஒரே குழப்பமாக இருக்கும். உங்கள் வீட்டில் ரவை இருக்குதா. டக்குனு இருபதே நிமிடத்தில் இந்த தோசையையும் சட்னியையும் செய்து முடித்துவிடலாம். நெஜமாவே இருபது நிமிஷத்தில் செய்வீங்க. வேணும்னா ரெசிபியை படிச்சிட்டு உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரவை – 1 கப், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 3/4 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், இந்த எல்லாப் பொருட்களையும் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் நைஸ் பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்தப் பவுடரை அப்படியே ஒரு அகலமான பவுலில் கொட்டிக் கொள்ளுங்கள். ரவையை எந்த கப்பில் அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் 1 கப் தயிர் ஊற்றி இந்த மாவை முதலில் கட்டிகளில்லாமல் கரைத்து வைத்து, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து, ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்துவிடுங்கள். இதற்குள் சட்னியை அரைத்து விட்டு வரலாம்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய் – 1 கப், பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – 1 கொத்து, லெமன் ஜூஸ் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை அரைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீராக வேணாம். கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும். இந்த சட்னியை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், தாளித்து சட்னியில் கொட்டி கலந்தால் சுவையான தேங்காய் சட்னி தயார்.

- Advertisement -

இதற்குள் தோசை மாவு நன்றாக ஊறியிருக்கும். மாவை ஒரு முறை நன்றாக கலந்துவிட்டு, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு இருந்தால் போதும். அடுப்பில் தோசைக்கல்லை காய வைத்துக்கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, தோசை மாவை கல்லில் மெல்லிசாக, அரிசி மாவு தோசை போலவே வார்த்து விடுங்கள். மேலே தேவையான நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மிதமான தீயிலேயே தோசையை சிவக்க வையுங்கள்.

தோசை பொன்னிறமாக வந்தவுடன் திருப்பி கூட போட வேண்டாம். அப்படியே சுருட்டி தேங்காய் சட்னி வைத்து பரிமாறினால், சுவையாக இருக்கும். உங்களால் முடிந்தால் உருளைக்கிழங்கை வேகவைத்து கட்டியாக மசாலா செய்து இந்த தோசைக்கு நடுவே வைத்து சுருட்டி மசால் தோசை, தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் இன்னும் கூடுதல் சிறப்பு. அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த ரெசிப்பி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -