எவ்வளவு வயதானாலும் எலும்பு தேய்மான பிரச்சனை வராமல் இருக்க வாரம் ஒரு முறையாவது ராகி இட்லி இப்படி சுலபமாக செய்து சாப்பிடலாமே! 4 பொருள் இருந்தா பஞ்சு போல ராகி இட்லி ரெடி!

ragi-idli_tamil
- Advertisement -

எழும்பு தேய்மான பிரச்சினை இன்று குறைந்த வயதிலேயே அனைவருக்கும் வந்து விடுகிறது. இது போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கால்சியம் சத்து குறையாமல் இருக்கவும் ராகி இட்லி அடிக்கடி செய்து சாப்பிடலாம். சுவையான அற்புதமான சுவையில் ராகி இட்லி எளிமையாக எப்படி அவித்து எடுப்பது? இதன் பயன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு – ஒரு கப், உளுந்து – அரை கப், இட்லி அரிசி – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

ராகி இட்லி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு ராகி அதாவது கேழ்வரகு எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அரை கப் அளவிற்கு உளுந்து மற்றும் அரை கப் அளவிற்கு இட்லி அரிசி, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அதையும் அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின்பு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு 5 மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். இவை நன்கு ஊறி வந்ததும் பெரிய மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு மைய நைசாக இட்லி மாவிற்கு அரைப்பது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது இதை சுமார் 6 மணி நேரம் நன்கு புளிக்க விட வேண்டும். புளித்து வந்ததும் லேசாக கரண்டியை வைத்து மெல்லமாக கலந்து விடுங்கள். நன்கு பொங்கி மாவு சூப்பராக நைஸ் ஆக இருக்கும். பின்னர் இட்லி பாத்திரத்தில் எப்பொழுதும் போல எண்ணெய் தடவி இந்த மாவை ஒவ்வொரு குழிகளிலும் ஊற்றி அவித்து எடுக்க வேண்டும். சாதாரணமாக இட்லி அவிக்க 10 நிமிடம் ஆகும் ஆனால் ராகி இட்லியை 15 நிமிடங்களுக்கு நன்கு அவித்து எடுக்க வேண்டும். அப்பொழுது தான் சாப்டாக அவியும்.

இதையும் படிக்கலாமே: பல் இல்லாதவங்க கூட இந்த சப்பாத்தியை ஈசியா சாப்பிடலாம். ராகி மாவில் சாஃப்ட் சப்பாத்தி செய்வது எப்படி.

இட்லி மெத்தன்று பஞ்சு போல இருக்கும். இதே போல நீங்கள் இந்த மாவை வைத்து மொறு மொறுன்னு சூப்பரா மிருதுவான தோசையும் செய்யலாம். இட்லி அவித்து இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வர எலும்பு தேய்மான பிரச்சனை வராமல் தடுக்கலாம். எலும்பு சம்பந்தப்பட்ட எந்த விதமான பிரச்சனைகளும் வராமல் இருக்க, கால்சியம் சத்து குறையாமல் இருக்க இது போல தொடர்ந்து ராகி இட்லியை சாப்பிட்டு வரலாம். நீங்களும் சுவையான ராகி இட்லியை இதே மாதிரி ஈஸியாக செய்து உங்க வீட்டில் அசத்துங்கள்.

- Advertisement -