இனி சமைக்கத் தெரியாதவர்கள் சாம்பார் வைத்தால் கூட அது, அமிர்தமாக சுவையாக தான் இருக்கும். வீட்டிலேயே மிக்ஸி ஜாரில் அரைக்கும் இந்த சாம்பார் பொடியின் ரகசிய குறிப்பு உங்களுக்கு தெரிந்தால்.

sambar
- Advertisement -

சில பேர் மீன் குழம்பு, கறி குழம்பை கூட சுலபமாக சுவையாக வைத்து விடுவார்கள். ஆனால் சுவையான சாம்பார் வைப்பதில் நிறைய சிரமங்கள் இருக்கும். சுவையான சாம்பார் பொடி கடைகளில் நமக்கு கிடைக்கின்றது. இன்ஸ்டன்டாக அதை வாங்கி சாம்பார் வைப்பது சரிதான். இருந்தாலும் நம் கையாலேயே மணக்க மணக்க மிக்ஸி ஜாரில் மசாலா பொருட்களை வறுத்து அரைத்துப் போட்டு சாம்பார் வைத்தால் அதன் ருசியும் மனமும் நிச்சயம் ரொம்ப ஸ்பெஷலாகத்தான் இருக்கும். நீங்க இப்பதான் புதுசாக சமைக்க பழகுகிறீர்களா. உங்களுக்கு சாம்பார் சரியாக வைக்க வராதா? இந்த ரெசிபி உங்களுக்காக.

உங்களுக்கு நன்றாக சமைக்க தெரியும். சாம்பார் வைக்கத் தெரியும் என்றாலும் பரவாயில்லை. இப்படி ஒரு பொடியை அரைத்து ஒரு முறை சாம்பார் வைத்து பாருங்கள். நீங்கள் எப்பவும் செய்யும் சாம்பாரை விட இந்த சாம்பாருக்கு கூடுதல் ருசி கிடைக்கும். வாங்க ரெசிபிக்குள் செல்வோம்.

- Advertisement -

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து முதலில் உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி வைக்கவும். அடுத்து அதே கடாயில் வர மல்லி – 4 நான்கு டேபிள் ஸ்பூன், போட்டு அதையும் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அரிசி – 1 ஸ்பூன், போட்டு பொரி அரிசி போல வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கொப்பரை தேங்காய் 4 டேபிள் ஸ்பூன் போட்டு, பொன்முறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். காரத்திற்கு வர மிளகாய் – 20, அதே கடாயில் போட்டு இரண்டு நிமிடம் போல நன்றாக சூடு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இறுதியாக கருவேப்பிலை – 2 கொத்து, போட்டு அதை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பொருட்களை எல்லாம் கட்டாயம் எண்ணெய் ஊற்றாமல் தான் வருக்க வேண்டும். வருத்த இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் கொட்டி பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், போட்டு நைசான பொடியாக அரைத்து எடுத்தால் சூப்பரான சாம்பார் பொடி மணக்க மணக்க தயார். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது சாம்பார் வைக்கலாம்.

டிபன் சாம்பார், சாப்பாடுக்கு செய்யக்கூடிய சாம்பார் என்று எல்லா சாம்பார் வகைகளுக்கும் இந்த சாம்பார் பொடியை நாம் பயன்படுத்தலாம். சில கார வருவல்களுக்கு கூட இந்த பொடியை போட்டு செய்தால் மணக்க மணக்க ருசியாக இருக்கும். இதை நாம் குறைந்த அளவில்தான் பொருட்களை சேர்த்து அரைத்து இருக்கின்றோம். இதனுடைய வாசம் போவதற்குள் சாம்பார் பொடி தீர்ந்துவிடும். கடையில் கொடுத்து தான் இனி சாம்பார் பொடி அரைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. வீட்டிலேயே இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்களேன்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: இனி அதிரசம் செய்ய மாவு அரைத்து பாகு எடுத்து கஷ்டப்பட வேண்டாம். பத்தே நிமிஷத்துல நல்லா சாப்பிட்டான அதிரசம் தயார். புதிதாக சமையல் பழகுபவர்கள் கூட சுலபமாக இதை செய்து விடலாம்.

உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வர மல்லி – 4 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், அரிசி – 1 ஸ்பூன், கொப்பரை தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 20, கருவேப்பிலை 2 கொத்து, பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தேவையான பொருட்கள் இவ்வளவுதான், ஒரு ஸ்பூனை எடுத்து இந்த பொருட்களை எல்லாம் சரியான அளவில் அளந்து கொண்டால் பொடியின் பக்குவம் தவறவே தவறாது.

அதேபோல மேலே சொன்னது போல இந்த பொருட்களை எல்லாம் தனித்தனியாக போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக போட்டு கருக விட்டாலும் பொடியின் வாசம் மாறிவிடும்.

- Advertisement -