30 வயதிற்கு மேல், மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு தேய்மானம் வராமல் இருக்க, இந்த கஞ்சியை பெண்கள் கட்டாயம் குடிக்க வேண்டும். வெறும் ஐந்தே நிமிடத்தில் சுலபமான உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி.

kanji1_tamil
- Advertisement -

உளுந்தங்கஞ்சி குடித்தால் எலும்புகள் வலுப்பெறும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அந்த கஞ்சியை செய்து குடிக்க மாட்டோம். நம் பிள்ளைகளுக்கும் கொடுக்க மாட்டோம். காரணம், உளுந்தை ஊற வைத்து அரைத்து அந்த கஞ்சு காசுவதில் சிரமம். சிரமமே இல்லாமல் உளுந்து கஞ்சி செய்ய, இன்ஸ்டன்ட் உளுந்த கஞ்சி பொடி அரைத்து, அந்த பொடியில் எப்படி கஞ்சி காய்ச்சுவது என்பதை பற்றி தான் இந்த குறிப்பின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ரெசிபி ஆரோக்கியத்தை கொடுத்துவக்கூடிய அருமையான ரெசிபி. மிஸ் பண்ணாம தெரிஞ்சிக்கோங்க.

உளுந்தங்கஞ்சி செய்ய இன்ஸ்டன்ட் பொடி அரைக்கும் முறை:
அடுப்பில் ஒரு அடி கனமான அகலமான கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் கருப்பு உளுந்து 1 கப் அளவு போட்டு 5 நிமிடங்கள் நன்றாக வறுக்க வேண்டும். உளுந்து வறுபட்டு நல்ல வாசம் வரும் போது, அடுப்பை அணைத்து விடுங்கள். (தேவைப்பட்டால் இதற்கு வெள்ளை உளுந்தும் பயன்படுத்தலாம். ஆனால் கருப்பு உளுந்து ஆரோக்கியம் நிறைந்தது.) இதை ஒரு அகலமான தட்டில் கொட்டி நன்றாக ஆற வை வைக்க வேண்டும். அடுத்து அதே கடாயில் 1 டேபிள் ஸ்பூன் அரிசியை, போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். அரிசி நிறம் மாற வேண்டாம். பொரிந்து வெள்ளை நிறத்திற்கு வந்தவுடன் அந்த அரிசியையும் வறுத்து வைத்திருக்கும் உளுந்தோடு சேர்த்து ஆற வையுங்கள். இப்போது அந்த கடாயில் சூடு இருக்கும் அல்லவா அதில் 2 ஏலக்காய்களை போட்டு, வறுத்துக்கொள்ளுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டில் ஏலக்காய் போட்டாலே வறுபட்டு விடும்.

- Advertisement -

இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின் (வறுத்த உளுந்து, அரிசி, ஏலக்காய் மூன்று பொருள் தான்.) மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை சலித்து குருனைகள் இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். மீதமான குருனையை மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, சலித்து எடுத்தால் சூப்பரான, நைஸ் ஆன, கஞ்சி காச தேவையான உளுந்து பொடி தயாராக நமக்கு கிடைக்கும். இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்தால் 2 மாதம் கெட்டுப் போகாது. ஃப்ரிட்ஜில் வைத்தால் 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

இந்த உளுந்தங்கஞ்சி ஜீரணம் ஆவதற்கு கட்டாயமாக சுக்கு பொடி சேர்க்க வேண்டும். சுக்கை சில பேர் இந்த உளுந்திலே போட்டு அரைப்பார்கள். தேவைப்பட்டால் உளுந்தில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சுக்கை பொடியாக வாங்கி கஞ்சி காய்ச்சும் போது சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உளுந்தங்கஞ்சி காய்ச்சும் முறை:
ஒரு சிறிய பாத்திரத்தில் 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி 2 ஸ்பூன் நாம் அரைத்த உளுந்து பொடியை போட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, அது சூடாகி கொதி வரும்போது கரைத்து வைத்திருக்கும் இந்த உளுந்து கரைசலை பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி, கைவிடாமல் கலந்தால் 4 லிருந்து 5 நிமிடத்தில் உளுந்து நன்றாக வெந்து கொழ கொழவென கஞ்சி பக்குவத்தில் நமக்கு கிடைக்கும். அப்போது இதில் 1/2 ஸ்பூன் சுக்கு பொடி, தேவையான அளவு வெல்லம், அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி போட்டு நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டால் சுடச்சுட உளுந்து கஞ்சி தயார்.

இதையும் படிக்கலாமே: ஈவினிங் பிள்ளைகளுக்கு ஸ்நாக்ஸ்க்கு என்ன செய்றதுன்னு தெரியலையா? ஒரு உருளைக்கிழங்கு இருந்தா போதும், பத்தே நிமிஷத்துல சூப்பரா, நல்ல கிரிஸ்பியான முறுக்கை சட்டுனு சுட்டு எடுத்துடலாம்.

இதைக் கூடுதல் சுவையாக இதில் தேங்காய் பால் சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் துருவிய தேங்காய்களை மேலே தூவலாம். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காயை இதில் போடலாம். அது நம்முடைய விருப்பம் தான். ஆனால் வாரத்தில் ஒருமுறையாவது இந்த உளுந்தங்கஞ்சி நாம் எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக செய்யப்பட வேண்டிய ஒரு ரெசிபி. மறக்காம செஞ்சு சாப்பிடுங்க. குறிப்பா பெண் குழந்தைகளுக்கு இதை கொடுங்க. உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -