இந்த இன்ஸ்டன்ட் மாவு செய்யத் தெரிந்தால் போதும். வீட்டில் தோசை மாவு இல்லையென்றாலும் சுவையான தோசை செய்யலாம்.

rava dosa
- Advertisement -

பெரும்பாலும் வீடுகளில் எப்போதும் இட்லி, தோசையே காலை உணவாக இருக்கிறது. சில சமயங்களில் வீட்டில் தோசை மாவு தீர்ந்து இருப்பதை கவனிக்காமல் இருந்தால் அப்போது அந்த நேரத்தில் என்ன சமைக்க வேண்டும் என்ற தடுமாற்றம் ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் வீட்டில் இருக்கும் ரவையை வைத்து தோசை மாவினை உடனடியாக தயார் செய்ய முடியும். ரவையை வைத்து செய்யும் தோசை வித்தியாசம் தெரியாத அளவிற்கு அரிசி மாவில் செய்தது போலவே இருக்கும். இந்த மாவினை எப்படி தயார் செய்வது என்பதனை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

idli-mavu

தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், தயிர் – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், உப்பு – அரை ஸ்பூன், சோடா உப்பு – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை, ஒரு கப் புளித்த தயிர், அரை கப் தேங்காய் துருவல், தேவையான அளவு தண்ணீர் இவற்றை ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு அதனுடன் அரை ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு 10 நிமிடம் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.

ravai

மாவு நன்றாக ஊறிய பின்னர் அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து தோசை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுக்கவேண்டும். இதன் சுவை மிகவும் அருமையாகவும் தோசை மொறுமொறுவென்றும் இருக்கும்.

- Advertisement -

இந்த ரவை தோசையுடன் சேர்த்து சாப்பிட ஒரு சுவையான சட்னியையும் ஐந்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.

onion-chutni

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் நறுக்கியது – 2, பச்சை மிளகாய் – 2, காய்ந்த மிளகாய் – 5, எண்ணெய் – 2 ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், புளி – சிறிய துண்டு, உப்பு – அரை ஸ்பூன்.

செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் இவை இரண்டையும் நன்றாக பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், 5 காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் உப்பு, புளி மற்றும் வதக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வெங்காய சட்னியை ரவை தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த தோசையை வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் மிச்சம் வைக்காமல் அனைவரும் சாப்பிட்டு முடிப்பார்கள். யாருக்குமே தெரியாது இது ரவையை வைத்து செய்த தோசை என்று. வீட்டில் தோசை மாவு இல்லாத சமயங்களில் இந்த சுலபமான இன்ஸ்டன்ட் தோசை மாவினை ஒரு முறை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். எவ்வளவு ஈசியாக உங்கள் வேலை மாறும் என்று உங்களுக்கே புரியும்.

- Advertisement -