ரயில் வண்டியின் கடைசி பெட்டியில் இந்த ‘X’ சிம்பல் எதனால் போடப்பட்டுள்ளது என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா?

train
- Advertisement -

வாழ்க்கையில் அன்றாடம் நாம் பார்க்க கூடிய சில விஷயங்கள் எதனால், எதற்காக பின்பற்றப் படுகின்றது என்பதே நமக்குத் தெரியாமல் இருக்கும். அதில் சில சுவாரஸ்யமான விஷயங்களை தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். அட! இதற்கான அர்த்தம் இதுதானா? என்று சுவாரசியத்துடன் சிந்திக்க வைக்கக்கூடிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள உங்களுக்கும் பிடிக்குமா? தொடர்ந்து இந்தப் பதிவைப் படியுங்கள்.

train1

முதல் விஷயம். ரயிலுக்கு பின்னால் இந்த X என்ற எழுத்து எதனால் எழுதப்பட்டுள்ளது. பல பெட்டிகள் இணைக்கப்பட்ட ஒரு வண்டி தான் இந்த ரயில். இதை நாம் தொடர்வண்டி என்றும் சொல்வோம் அல்லவா. இந்த ரயிலின் பாதுகாப்பிற்காக தான், அதிகாரிகள் இந்த X என்று சொல்லக்கூடிய சிம்பிளை கடைசி பெட்டியில் வரைந்து வைத்துள்ளார்கள்.

- Advertisement -

ரயில் வண்டியில் கடைசி பெட்டியில் இந்த X என்ற சிம்பிள் இல்லை என்றால், எல்லாப் பெட்டிகளும் இஞ்சினோடு சேர்ந்து இருக்கவில்லை என்பதை குறிப்பதாக அர்த்தம். ரயில் வண்டியின் இறுதி பெட்டி என்றால், அதன் பின்னால் கட்டாயம் இந்த X சிம்பல் இருக்க வேண்டும். X சிம்பல் இல்லை என்றால், பின்னாடி இருக்கக்கூடிய ஏதோ ஒரு பெட்டி இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்று, ரயில்வே அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

train2

முன்பக்கத்தில் ரயிலை இயக்க கூடிய எஞ்சின் ஓட்டுநருக்கு, பின்னால் இருக்கக்கூடிய பெட்டி துண்டிக்கப்பட்டால், கட்டாயம் ரயிலை இயக்குபவருக்கு தெரிவதற்கு வாய்ப்பே கிடையாது. ஆகவே, ரயில் நிலையங்களில் இருக்கும் ரயில்வே அதிகாரிகள் கடைசி பெட்டியில் இந்த ‘X’ சிம்பல் இல்லை என்றால், அதை உடனே இஞ்சின் டிரைவருக்கு தெரிவிப்பார்கள். ரயிலில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதையும் கண்டு பிடித்து, ரயிலை உடனடியாக நிறுத்தவும் செய்வார்கள்.

- Advertisement -

ரயிலின் கடைசிப் பெட்டி ரயிலோடு தான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக போடப்பட்டுள்ள சிம்பிள்தான் இது. இதோடு மட்டுமல்லாமல் X க்கு பக்கத்தில் ‘LV’ என்ற எழுத்தும் இருக்கும். இதற்கு அர்த்தம் ‘last vehicle’ என்பது தான். இந்தத் தொடர் வண்டி கடைசி பெட்டியுடன் தான் பயணிக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்காக போடப்பட்ட சிம்பிள்தான் X.

இரண்டாவது சுவாரசியமான கேள்வி. ஃபேஸ்புக் எதற்காக நீல நிறத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு (Mark Zuckerberg) சிவப்பு பச்சை நிறம் தெரியாது. Colour blind என்று சொல்லக்கூடிய பிரச்சனை இவருக்கு உண்டு. எனவே நீல நிறத்தை மட்டும் தான் அவரால் நன்றாக காண முடியும். இதனால்தான் ஃபேஸ்புக்கின் நிறம் நீல நிறத்தில் உள்ளது.

facebook1

மூன்றாவது சுவாரசியமான கேள்வி. வேகமாக ஓடக்கூடிய கார் பைக்கை நாய் எதற்காக துரத்துகின்றது என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா? பொதுவாகவே நாய்களுக்கு பைக் மற்றும் கார் டயர் பகுதிகளை முகர்ந்து பார்த்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. வேகமாக நம்முடைய வீதிக்குள் நுழையும் புதிய வண்டியின் டயரை முகர்ந்து, அதனுடைய வாசத்தினை கண்டுபிடித்து, இது நம் வீதியில் வரும் வண்டி அல்ல என்பதற்காகவும், அந்த வண்டியை உடனடியாக நம் இடத்தில் இருந்து துரத்தி விட வேண்டும் என்பதற்காகவும், பாதுகாப்பிற்காக நாய்கள், வேகமாக வரக்கூடிய புதிய வண்டிகளை துரத்துமாம்.

இதற்கு இரண்டாவது காரணமும் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய இடத்திற்குள் புதியதாக வேறு வாகனங்கள் வந்தால், அந்த வாகனங்களில் வேறு இடத்தில் உள்ள நாய்கள் சிறுநீர் கழித்திருக்கும். அந்த வாசனையை, இந்த நாய் கண்டுபிடித்துக் கொண்டு, வேறொரு நாய் தான் நம்முடைய இடத்திற்கு வந்து விட்டது, என்று உணர்ந்து, அதை நம்முடைய இடத்தில் இருந்து துரத்த வேண்டும் என்பதற்காகவும் வேகமாக வரக்கூடிய புது வாகனங்களை நாய்கள் துரத்தும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -