தெய்வங்களுக்கு பிடித்த மாதிரி நம் வீட்டை அமைத்துக் கொள்வது எப்படி?

god
- Advertisement -

நம்முடைய வீடு என்பது எப்போதுமே இறை சக்தி நிறைந்த வீடாக இருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். கோவிலுக்கு சென்றால் ஏற்படக்கூடிய மனநிம்மதியை நம்முடைய வீட்டிலும் நாம் பெற வேண்டும் என்றால் நம்முடைய வீட்டையும் கோவிலாக மாற்ற வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய சில ஆன்மீக ரீதியான தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கோவில் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கோவிலில் இருந்து வரக்கூடிய வாசம் தான்.

poojai

கோவிலுக்குள் நுழையும் போது நம்மை அறியாமல் நம்முடைய மனதை கவரும் அளவுக்கு கோவிலில் வாசம் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கூடிய பொருளாக இருந்தாலும் சரி, இறைவனுக்கு அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடிய பொருளாக இருந்தாலும் சரி, அது வாசனை நிறைந்த பொருளாக இருக்கும். பெரும்பாலும் இது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

- Advertisement -

எந்த இடத்தில் நல்ல வாசம் நிறைவாக இருக்கின்றதோ அந்த இடத்தில் நிச்சயமாக இறைசக்தி நிறைந்திருக்கும். அந்த வரிசையில் நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இறைவனுக்கு விருப்பமான வாசம் நம் வீட்டில் நிறைந்திருக்க இந்த 3 பொருட்களை சேர்த்து நம்முடைய வீட்டில் வைத்தாலே போதும்.

nallennai

சுத்தமான நாட்டு மரச்செக்கு நல்லெண்ணெய் வாங்கிக்கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி டம்ளரில் அந்த நல்ல நெய்யை ஊற்றிக் கொள்ள வேண்டும். 50ml அளவு எண்ணெய் இருந்தால் கூட போதும். அதில் கொஞ்சமாக அரகஜாவை கலந்து விடுங்கள். நல்லெண்ணெயும் அரகஜா சேர்த்து லேசாக கருப்பு நிறத்தில் நமக்கு கிடைத்திருக்கும்.

- Advertisement -

இந்த கண்ணாடி தம்ளரில் இருக்கும் நல்லெண்ணெயில், மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு விடுங்கள். அவ்வளவுதான், இதை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடலாம். இந்த நல்லெண்ணெய் அரகஜா எலுமிச்சம்பழம் 3 இல் இருந்து வெளிவரக்கூடிய வாசம் இறைவனுக்கு மிகவும் பிடித்த வாசமாக சொல்லப்பட்டுள்ளது.

lemon-glass

வீட்டில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் இந்த வாதத்திற்கு நிச்சயமாக தங்காது. இறைசக்தியை வசியப்படுத்த கூடிய தன்மை கொண்ட பொருட்கள் தான். இந்த மூன்று பொருட்களையும் உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் இந்த டம்ளரை தயார் செய்து வைத்துவிட்டு, தினம்தோறும் தீபம் ஏற்றி எப்போதும் போல இறைவழிபாடு செய்து கொள்ளலாம். இந்த டம்ளருக்காக என்று தனியாக எந்த பூஜை புனஸ்காரங்கள் செய்ய தேவை கிடையாது.

poojai

டம்ளரில் இருக்கும் எண்ணெய் தூசு படிந்து விட்டால் எலுமிச்சம்பழம் அழுகிப் போய் விட்டாலோ இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இத்தனை நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் இந்த பொருட்களை மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. டம்ளரில் ஊற்றி வைத்திருக்கும் எண்ணெய்யை நம்மால் வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாது. கீழே கொட்டிவிட்டு தான் வேறு ஒரு எண்ணெயை புதியதாக வைக்க வேண்டும். ஆனால் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய வீட்டில் இறைசக்தி நிறைவாக இருக்கும். உங்களுக்கு பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -