- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇறைவழிபாட்டில் தடை வராமல் இருக்க

இறைவழிபாட்டில் தடை வராமல் இருக்க

- Advertisement -

சில பேர் வீடுகளில் இறை வழிபாடு செய்யும்போதுதான் அவர்களுக்கு கொட்டாவி மேல் கொட்டாவி வரும். தூக்கம் வரும். மனம் ஒரு நிலைப்படாது. மந்திரத்தை சொல்ல முடியாது. பூஜையில் ஒரு மன நிறைவும் ஏற்படாது. இப்படிப்பட்ட சூழ்நிலை உங்களுக்கு இருந்தால், இந்த பிரச்சனைகள் வர என்ன காரணம் அதை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இறைவழிபாட்டில் தடை ஏற்பட காரணம்

சாமி கும்பிடும் போது கொட்டாவியும் தூக்கமும் வருவதற்கு உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் தான் காரணம். உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றல் தான் காரணம். உங்களுக்கு புண்ணியத்தை சேர்க்கும் இறை வழிபாட்டை தவிர்ப்பதற்கு இப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் உண்டாக்கும் கெட்ட சக்திகளை, வெளியேற்ற என்ன செய்வது. முதலில் பூஜை செய்வதற்கு முன்பு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள். பிறகு உங்கள் பூஜையில் கட்டாயம் தர்பை புல், துளசி இலையும் இருக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு தர்ப்பை குச்சியை கையில் வைத்துக் கொண்டு பூஜை செய்தால் நிச்சயம் தூக்கம் வராது. அப்படி இல்லை என்றால் தர்ப்பை புல் விரிப்பு விற்கிறது. கடைகளில் சின்னதாக தர்பை போல் விரிப்பு வாங்கி அதன் மேல் அமர்ந்து மந்திரத்தை சொல்லுங்கள். பூஜை செய்யுங்கள் நிச்சயமாக தூக்கம் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியும்.

பூஜைக்கு முன்பு, மந்திரத்தை சொல்வதற்கு முன்பு, இரண்டு துளசி இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்துவிட்டு மந்திரத்தை உச்சரிக்கும் போதும் கொட்டாவி வருவதை தவிர்க்கலாம். மேல் சொன்ன இந்த இரண்டு எளிமையான விஷயங்கள் உங்கள் பூஜையை முழுமையாக நிறைவடைய செய்யும். இறைவழிபாடு செய்யும்போது எந்த ஒரு தடையும் ஏற்படாமலும் இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான விஷயங்களை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -

அதேபோல கண்களில் பார்க்கும் பூஜைப் பொருட்களை எல்லாம் வாங்கி பூஜறையில் வைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்குள் நீங்கள் மூழ்கி விடக்கூடாது. உங்களுடைய வீட்டில் எவ்வளவு பூஜை சம்பந்தப்பட்ட பொருட்களை சேர்த்துக் கொண்டே இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு வேலை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

பிரத்தியேகமாக வாங்கி வைத்த பூஜை பொருளுக்கு, ஒருநாள் பூஜை செய்ய முடியும், ஒரு வாரம் பூஜை செய்ய முடியும், வாழ்நாள் முழுவதும் அந்த பொருட்களுக்கு பூஜை செய்ய முடியுமா என்று பார்த்துவிட்டு, அந்த குறிப்பிட்ட பூஜை பொருளை வாங்கி பூஜையறையில் வையுங்கள். எல்லா ஆன்மீகம் சார்ந்த பொருட்களையும் வாங்கி பூஜை அறையில் வைத்துவிட்டு, ஓரிரு நாட்கள் பூஜை செய்துவிட்டு பிறகு சூழ்நிலை காரணமாக பூஜை தடைப்படுவது, குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் வேல்மாறல்

நம்மால் என்ன முடியுமோ அதை மட்டும் நிறைவாக நம்பிக்கையுடன் செய்து சாமி கும்பிடும்போது நிறைவான பலன் நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்