தினமும் இந்த வேலைகளை செய்யும் பெண்களை அந்த கடவுளுக்கே ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். இந்தப் பெண்கள் வாழும் வீட்டில் நிச்சயமாக ஒரு சிக்கல் கூட இருக்காது.

women5
- Advertisement -

எந்த ஒரு நல்ல விஷயத்தை தொடங்குவதாக இருந்தாலும், அதை நம் வீட்டில் இருக்கும் பெண்கள் கையாலேயே தொடங்கலாமே. இன்று இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களையும் முதலில் பெண்களே ஆரம்பியுங்கள். ஒரு வீட்டில் கஷ்டங்கள் வரலாம், போலாம். ஆனால் சிக்கலான சூழ்நிலையில் குடும்பத்தில் இருப்பவர்கள் என்றுமே சிக்கிக் கொள்ள கூடாது. அந்த சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும். அந்த கடவுளுக்கே பிடிக்க வேண்டும் என்றால் நாம் எந்தெந்த செயல்களை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு சில விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குடும்பத்தில் சிக்கல் வராமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டியவை:
கடவுள் என்பவன் யார் தெரியுமா. இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிர் தான் கடவுள். ஆகவே வீட்டில் இருக்கும் பெண்களாக இருக்கட்டும், ஆண்களாக இருக்கட்டும் முதலில் நேசிக்க வேண்டிய விஷயம், உயிர். ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதியுங்கள். யாரையும் அலட்சியமாக எண்ணாதீர்கள். அடுத்தவர்களை பற்றி பின்னால் வசை பாடாதீர்கள். எல்லா உயிரினமும் ஒன்றுதான். கஷ்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்று உணருங்கள். நான் மட்டும் உலகத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

- Advertisement -

உணவு இல்லாதவர்களுக்கு, ஆடை இல்லாதவர்களுக்கு, இருக்க இடம் இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு நீங்கள் செய்யும் சேவை அந்த கடவுளுக்கே செய்யக்கூடிய சேவை. இந்த அறிவைப் பெற்றவர்களை கடவுளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சொல்லப்போனால் இதை உணர்ந்தவர்கள், நீங்கள் தான் கடவுள். இந்த விஷயங்களை எல்லாம் ஆண்கள் செய்கிறார்களோ இல்லையோ,  ஒரு பெண் அடுத்தவர்களுடைய கஷ்டத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அன்பே சிவமாகும், அறிவே குருவாகும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம். என்னதான் நாம் நல்லது செய்தாலும் வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் ஒரு சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றி தான் ஆக வேண்டும். அந்த வரிசையில் முதல் விஷயமாக உங்களுக்கு சொல்லப்படக்கூடியது, தலைமுடி. எப்போதும் பெண்கள் தலையில் சிக்கோடு இருக்கக் கூடாது. சில வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து அப்படியே முடியை கொண்டை கட்டிக்கொண்டு வேலையை செய்ய தொடங்கி விடுவார்கள்.

- Advertisement -

மாலை நேரம் வந்துவிடும். மாலையும் தலை சீவாமல் அப்படியே மீண்டும் அந்த கொண்டையை கழட்டி சிக்கு எடுக்காமல் ஒரு ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக் கொள்வார்கள். இந்த தவறை செய்யவே செய்யாதிங்க. உங்கள் தலைமுடி எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கலாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு குடும்பத்தில் சிக்கல் இருக்கும். தினம் தினம் காலையில் ஒரு வேலை, மாலையில் ஒரு வேலை தலையில் இருக்கும் சிக்கை எடுத்து தலையை சீவி கட்டிக் கொள்ள வேண்டும். தலைவிரி கோலத்தோடு வீட்டில் இருக்க வேண்டாம்.

எப்போதும் தூங்கி வழிந்த முகத்தோடு முகத்தில் கலை இல்லாமல் இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் பெண்களாகவே இருந்தாலும் சரி, தலை சீவி முகம் கழுவி பொட்டு இட்டுக்கொண்டு பார்ப்பதற்கு மகாலட்சுமி அம்சத்தோடு முகத்தில் புன்னகையோடு தான் இருக்க வேண்டும். கையில் போடக்கூடிய வளையல் பிளாஸ்டிக் வளையலை அணிய வேண்டாம். இரும்பு வெள்ளியிலும் வளையல் அணியக்கூடாது. தங்க வளையல் போடலாம்.

- Advertisement -

கூடுமானவரை ஒரு வளையல் போடுவதை தவிர்த்து விட்டு, இரண்டு வளையல்களை கையில் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு வளையலுக்கு மேல் உங்களுடைய விருப்பம் எத்தனை வளையல்கள் போட்டாலும் அது நல்லது தான். இந்த சத்தத்தின் ஒலியில் இறைவன் உங்களுடைய வீட்டில் இருப்பான்.

இப்படி ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு நினைவிலும், ஒவ்வொரு செயலிலும் இறைவனை நாம் காண வேண்டும் என்றால் அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்கக் கூடாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்கவே கூடாது. உங்களை பார்த்து, உங்களுடைய குடும்பமே உங்களை பின்பற்ற தொடங்கி விடும். இப்படி எல்லாம் கூட இந்த உலகத்தில் வாழ முடியுமா என்று நீங்கள் பின்பற்றக் கூடிய விஷயங்களை, உங்களை பார்த்து ஒருவர் பின்பற்றினால் கூட, நீங்கள் இறைவனுக்கு சொந்தக்காரராக மாறிவிடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: குண்டுமணி தங்கம் கூட தன்னிடம் இல்லையே என்று வருத்தப்படுபவர்கள், இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்களிடம் எத்தனை சவரன் நகை இருக்கிறது என்று உங்களுக்கே தெரியாத அளவிற்கு நகை சேரும்.

ஆகவே மேல் சொன்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இந்த விஷயங்களை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக கடவுளை உணரக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -