இறப்பு நிகழ்ந்த வீட்டில் ஒரு வருடத்திற்கு தப்பித் தவறியும் இவ்வாறான செயல்களை மட்டும் செய்து விடாதீர்கள்

death
- Advertisement -

இறப்பு என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் வரக்கூடிய ஒரு இயற்கையான விஷயமாகும். ஒருவருடைய இல்லத்தில் இறப்பு என்பது நிகழ்ந்து விட்டால் அங்கு கடைபிடிக்க வேண்டிய பல விதமான சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. அதிலும் பெண் வீட்டார் என்றால் ஒரு சில விஷயங்களையும், கணவர் வீட்டார் என்றால் வேறு விதமான சம்பிரதாயங்களையும் கடைபிடிக்க வேண்டியிருக்கும். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக ஒரு சில பழக்கவழங்களைக் கையாண்டு வருவார்கள். அவ்வாறு இறப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு வருடத்திற்கு பொதுவாகவே ஒரு சில சுப நிகழ்வுகளை தள்ளி வைப்பதென்பது இன்று வரையிலும் வழக்கத்தில் உள்ளது. அப்படி இறப்பு நிகழ்ந்த வீட்டில் செய்ய கூடாத காரியங்கள் என்னென்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

dead-death

ஒருவரது வீட்டில் இறப்பு என்பது நிகழ்ந்துவிட்டால் முதலில் செய்யக்கூடிய காரியம் வீட்டில் இருக்கும் விளக்கை ஏற்றி வைப்பதுதான். பெண்கள் வீட்டை சார்ந்தவர்கள் இரண்டு விட்டார்கள் என்றால் மூன்று நாட்களுக்கு அசைவம் சாப்பிடாமல், மஞ்சள் தேய்த்துக் குளிக்காமல்,பூ வைக்காமல், பொட்டு வைக்காமல் பெரிய அளவில் அலங்காரம் ஏதும் செய்யாமலிருக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு கோவில்களுக்குச் செல்ல கூடாது. வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றக்கூடாது.

- Advertisement -

இதுவே கணவர் வீட்டு உறவினர்களுள் எவரேனும் இறந்து விட்டால் அதுவும் அவர்கள் பங்காளியாக இருந்தார்கள் என்றால் 16 நாட்களுக்கு அசைவம் சாப்பிடக்கூடாது. கோவிலுக்கு செல்லக்கூடாது, வீட்டில் விளக்கு ஏற்றக் கூடாது, பூ, பொட்டு வைக்கக் கூடாது. 16ம் நாள் காரியம் முடிந்த பின்னர் வீடு முழுவதுமாக சுத்தம் செய்து, பூஜை சாமான்களை சுத்தமாக கழுவி அதன் பின்னர் தான் நமது அன்றாட செயல்களை செய்யத் துவங்க வேண்டும்.

dharpanam

காரியம் முடிந்த பிறகு கோவில்களுக்குச் செல்லலாம். வீட்டில் விளக்கு ஏற்றலாம். ஆனால் தேங்காய் உடைத்து பூஜை செய்யக்கூடாது, கோவிலுக்கு செல்லும்போதும் தேங்காய் உடைக்கக்கூடாது, கோவிலில் பொங்கல் வைப்பது போன்ற பூஜைகளையும் செய்யக்கூடாது, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை அந்த வருடம் கொண்டாடுவதென்பதை தவிர்க்க வேண்டும். இறந்தவர்கள் பித்ரு லோகத்திற்க்கு செல்வதற்கு ஒரு வருட காலமாகிறது.

- Advertisement -

அது வரை வீட்டில் அமாவாசை பூஜை செய்யலாம். அதுவும் வீட்டில் உள்ள ஆண்கள் தான் இதனை செய்ய வேண்டும். ஒரு இறப்பு ஏற்பட்ட இடத்தில் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த நல்ல காரியத்திற்காக பேச்சு வார்த்தைகளை மட்டுமே துவங்க வேண்டும். ஆனால் அந்த சுபநிகழ்ச்சியை ஒரு வருடம் முடிந்த பிறகு தான் செய்ய வேண்டும்.

amavasai

ஒரு வருடத்திற்கு பிறகு அவர்களுக்கு தவசம் செய்து, எள் தர்ப்பணம் கொடுத்து, அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்த பின்னர் தான் நமது அன்றாட வாழ்க்கையை வாழத் தொடங்கவேண்டும். பங்காளிகளின் காரியத்திற்கு செல்ல முடியவில்லை என்றாலும் அன்றைய நாள் வீட்டில் இருக்கும்போதும் நல்லெண்ணை தேய்த்து தலைக்கு குளித்து, வீட்டை சுத்தம் செய்து, பூஜை பாத்திரங்களை கழுவி, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அன்று முதல் அந்த தோஷங்கள் அனைத்தும் முடிவடைந்து இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கவேண்டும்.

- Advertisement -