வீட்டில் எப்போதும் சண்டை, தொழிலில் முடக்கம் பண தடை போன்றவைகளால் நீங்கள் பெரிதும் துன்பப்படுகிறீர்களா? அதற்கு காரணம் நீங்கள் அணியும் இந்த ஆடையாக இருக்கலாம்.

sandai amman
- Advertisement -

நம்மில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையுடன் சரியான முறையில் வழிபாடுகளையும் பித்ருகளுக்கான கடன்களையும் சரியாக செய்தாலும் கூட வாழ்க்கையில் துன்பத்திற்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கும். நாமும் பல வகையில் யோசித்துக் கொண்டு தான் இருப்போம். நாம் தான தர்மம், பூஜைகள் என அனைத்தும் செய்தும் கடவுள் ஏன் நம்மை சோதிக்கிறார் என்று யோசிப்போம். ஆனால் அதற்கான காரணம் நாம் சிறிதும் யோசிக்காத இது போன்றவைகளாக இருக்கலாம். அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் பிரச்சனைகள் வராமல் நாம் இருக்க தவிர்க்க வேண்டியவை:
வீட்டில் இது போல சூழ்நிலைகள் வராமல் இருக்க நாம் முதலில் செய்ய வேண்டியது என்னவென்று பார்த்தால் நம் வீட்டு பெரியோர்கள் அல்லது அகால மரணம் அடைந்தவர்களின் துணிகளை அவர்களின் நினைவுக்காக நாம் பீரோவில் வைத்திருப்பது அல்லது அவைகளை உடுத்துவது. இது எப்போதும் செய்யக் கூடாத ஒரு விஷயமாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதற்கு காரணம் ஒரு மனிதன் எந்த ஒரு பொருளையும் வாங்குவதாக இருந்தாலும் அதை அவன் விரும்பி ஆசைப்பட்டு தான் வாங்குவான். ஆனால் அவர்கள் இறந்த பிறகு அந்த பொருள்களை நாம் பயன்படுத்தும் போது அல்லது அந்த ஆடைகளை நாம் அணியும் போது நிச்சயம் அவர்களின் ஆசைகள் நிராசைகளாக மாறி நம்மை துயரத்திற்கு உள்ளாக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதே போல் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு அம்மவாசை அல்லது தவசம் போன்ற நாட்களில் நம் வீட்டு பெரியோர்களுக்கு வைத்து படைக்கும் துணிகளை நாமே அணிந்து கொள்வது. இதையும் செய்யக் கூடாது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்படி படைத்த துணிகளை இல்லாத வயதானவர்களிடம் அவர்கள் உன்ன வயிறார உணவு வாங்கித் தந்த பின் இந்த உடைகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதையும் கூட நம் வீட்டில் வைத்து கொடுக்காமல் அம்மன் ஆலயங்களில் அல்லது ஆலயத்தை சுற்றி இருக்கும் இடங்களில் கொடுப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பொருள்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது அவர்களுக்கு துன்பம் ஏற்படாதா என்றால் நிச்சயமாக ஏற்படாது. அப்படி வாங்குபவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவே இந்த தாக்கங்கள் எதுவும் அவர்களை ஒன்றும் செய்யாது.

- Advertisement -

இப்போது உங்களுக்கு இன்னொரு கேள்வியும் தோன்றலாம், பொருள்களை நாம் இப்படி கொடுத்து விடலாம் ஆனால் நகைகளை என்ன செய்வது அல்லது அவர்கள் இறக்கும் போது வைத்திருந்த பணத்தை என்ன செய்வது? இவைகளையும் நாம் அப்படியே பயன்படுத்தக் கூடாது. நகைகளை நாம் மாற்றி வேறு நகைகளாக செய்து கொள்ள வேண்டும். அந்த பணத்தை அப்படியே பணமாக வைத்துக் கொள்ளாமல் அதையும் மாற்றி வேறு பொருளாகவோ அல்லது உங்களால் முடியுமானால் பிறருக்கு உதவியாகவும் அதை கொடுக்கலாம்.

நம் வீட்டில் நம்முடன் ஒருவராக வாழ்ந்தவரை நினைவாக நாம் எதையும் பயன்படுத்தக் கூடாதா? என்றால் பயன்படுத்தக்கூடாது என்று தான் ஆன்மீகம் சொல்கிறது. அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடமைகளை நாம் சரிவர செய்தால் போதும் அவர்களுடைய ஆசீர்வாதமும் அனுகிரகமும் நமக்கு எப்போதும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு காரியத்தை நீங்கள் சரியாக செய்யாது போனால் காசிக்கு போனால் கூட உங்கள் கருமம் தொலையாது. கங்கையில் நீராடினாலும் கிடைக்காத புண்ணியத்தை இதை செய்தால் நிச்சயம் கிடைக்கும்.

நாம் பித்ருக்களை வணங்குவதும் கோவில் குளங்களுக்கு செல்வதும் நல்ல முறையில் வாழ்வதற்கு தான். ஆனால் இது போல நாம் தெரியாமல் செய்யும் ஒரு சில தவறுகளால் நாம் நிம்மதியும் இழந்து நம் குடும்பம் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும். இனியும் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -