பூஜை அறையில் வைத்து வணங்க கூடாத படம்

pooja room lady
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறைக்கு என தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஒரே ஒரு அறையாக இருந்தாலும் கூட தெய்வப் படங்கள் வைப்பதற்கு என தனியாக இடம் ஒதுக்கி அதற்கு என பராமரிப்பு செய்து வைத்து இருப்போம். நம்மையெல்லாம் வாழ வைக்கும் தெய்வத்தை நம்மால் முடிந்த அளவு நம் வீட்டில் வைத்து அவர்களை நல்ல முறையில் வணங்குவது தான் சிறந்தது.

இந்த வழிபாட்டு முறைகள் வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் மாறு படலாம். ஆனால் வழிபாட்டிற்கான நோக்கம் ஒன்று தான். நாமும் நம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும். செல்வ செழிப்புடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ அருள் கிடைக்க வேண்டும் என்பது மட்டும் தான். இந்த பூஜை அறையில் நாம் வைக்கும் சில படங்களால் நம் குடும்பத்திற்கு பெரும் இன்னல்கள் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன படம் ஏன் வைக்கக் கூடாது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பூஜை அறையில் வைத்து வணங்கக் கூடாத படங்கள்

இந்த தலைப்பை பார்த்தவுடன் பலருக்கும் புரிந்திருக்கும். பூஜை அறையில் நாம் வைத்து வணங்கக் கூடாத படங்கள் எனில் அது முன்னோர்கள் படம் தான். இதை ஏன் வைக்கக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் இறந்த பெரியோர்கள் தெய்வங்களாக மதித்து வணங்கப்படுகிறார்கள். அப்படி வணங்கித் தான் ஆக வேண்டும்.

ஏனெனில் அவர்கள் தான் நம்முடைய பிறப்பிற்கும் நம்முடைய இந்த வாழ்க்கைக்கு மூலாதாரம். ஏன் நாம் பித்ரு தோஷம் இன்றி நல்ல முறையில் வாழ முன்னோர் வழிபாடு மிகவும் முக்கியமானது. இதை நம்முடைய சாஸ்திரங்கள் மிகவும் வலுவாகவே வலியுறுத்துகிறது. நம்முடைய குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கே முன்னோர்களின் அருள் இருந்தால் தான் முடியும். இவையெல்லாம் மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -

என்ன இருந்தாலும் தெய்வங்களுக்கு நிகரான இடத்தில் இறந்தவர்களின் படத்தை வைக்க கூடாது என்றும் நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கிறது. இதற்கு காரணம் மனிதர்கள் எப்போதும் தெய்வத்திற்கு சமமானவர்கள் கிடையாது என்பது தான். இறந்தவர்கள் தெய்வத்திற்கு சமமாக கருதப்படுவார்களே அன்றி தெய்வமாக மாறுவது கிடையாது.

அதுமட்டுமின்றி இறந்த ஆத்மாக்கள் தெய்வ நிலையை அடைந்ததா இல்லையா என்பது நாம் அறியாத ரகசியம். அப்படி இருக்கையில் அவர்களை தெய்வங்களுடன் ஒன்றாக வைத்து வணங்கும் போது நம்முடைய குடும்பத்திற்கு நிச்சயம் அது கெடு பலன்களை தான். பூஜை அறையில் நம் முன்னோர்களை வைத்து வழிபடும் போது ஏற்படுவதோடு, இன்னொரு சிக்கலும் உண்டு.

- Advertisement -

அதாவது அவர்களின் புகைப்படத்தை நாம் வைத்து வழிபடும் போது அவர்களை பார்க்கும் போதும் நமக்கு ஒருவித மனக்கஷ்டமும், துயரமும் அவர்கள் நம்மை விட்டு நீங்கி விட்டார்களே என்ற வருத்தமும் தோன்றும். பூஜை அறையில் எப்போதும் இந்த மனநிலையில் பூஜை செய்யும் பொழுது தெய்வ கடாட்சமும் அருளும் நமக்கு கிடைக்காது.

ஒரு மனிதன் எப்போது பூஜை செய்தாலும் இப்படியான மனநிலையிலே வணங்கினால் நன்றாக இருக்கும்மா? எப்படி அவனால் நல்ல மனநிலையில் இறைவனை வணங்க முடியும். நல்ல மனநிலையில் வணங்கினால் தானே அவனுக்கு நல்லதும் நடக்கும். இதை எல்லாம் சற்று யோசித்து செய்ய வேண்டியது நம்முடைய கடமை.

பூஜை அறையில் மகான்களின் படங்களையே கூட தனியாக வைத்து வணங்க வேண்டும் என்று தான் சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படி இருக்கையில் இறந்தவர்களின் புகைப்படத்தை அங்கு வைப்பது தவறு தானே. பூஜை அறையில் நாம் தெய்வப் படங்களை கிழக்கு அல்லது மேற்கு பார்த்து வைத்து வணங்குவோம். இறந்தவர்களின் புகைப்படத்தை எப்பொழுதும் தெற்கு பார்த்து மட்டும் தான் வைத்து வணங்க வேண்டும்.

ஒரே பூஜை அறையில் இப்படி திசை கொன்றாக மாற்றி வைத்து வணங்குவதே வீட்டில் தேவையற்ற எதிர்வலைகளை உருவாக்கும். பூஜை அறையில் இறந்தவர்கள் படத்தை வைப்பது அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தவறு என்பது தான் இதன் மூலம் புலப்படுகின்றது. இது போல உங்கள் இல்லங்களில் இரண்டு படங்களும் ஒன்றாகக இருக்குமேயானால் அவற்றை தனியாக மாற்றி வைத்து வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர யோகம் கிடைக்க உதவும் உணவுப் பொருட்கள்.

நம் குடும்பம் துன்பப்பட நாமே எந்த வகையில் காரணமாகி விடக் கூடாது. இந்த பதிவில் உள்ள தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமேனில் இது உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் இதை பின்பற்றி நல்ல பலனை அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -