இந்த 1 பொருளை இரவில் தானம் கொடுத்தால் உங்கள் கஷ்டங்கள் எல்லாமே விலகிப் போய்விடும் தெரியுமா?

dhanam-night-moon
- Advertisement -

எந்த ஒரு பொருளையும் இரவில் தானம் கொடுக்க கூடாது என்பது தான் நியதி. தானம் என்பது புண்ணியத்தை சேர்க்க இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம். இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒன்றை தானமாகக் கொடுத்து உதவினால் நம்முடைய கர்ம வினைகளில் புண்ணியமானது சேரும். ஆனால் அதை இரவு நேரத்தில் செய்யக் கூடாது என்பது தான் சாஸ்திரம். இருப்பினும் இந்த ஒரு பொருளை இரவில் நீங்கள் தானம் செய்தால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அப்படி என்ன பொருள் அது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

dhanam

பொதுவாக அந்தி சாய்ந்த பின்பு எந்த ஒரு பொருளையும் மற்றவர்களுக்கு தானம் கொடுத்தால் நம்மிடம் இருக்கும் செல்வமானது நம்மை விட்டு சென்றுவிடும் என்பது சாஸ்திர விதி. குறிப்பாக மகாலட்சுமி நிறைந்து இருக்கும் பொருட்களை தானம் கொடுக்கவே கூடாது. பால், தயிர், உப்பு, பணம் போன்ற பொருட்களை தானம் கொடுத்தால் வறுமை உண்டாகும். எனவே கடன் கொடுப்பவர்கள் கூட 6 மணிக்கு மேல் கொடுக்க மாட்டார்கள்.

- Advertisement -

அது போல் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் இருக்கும் பணமானது மற்றவர்கள் கைகளுக்கு செல்லக் கூடாது. இதனால் வாடகை பணத்தை கூட செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் யாரும் கொடுக்க மாட்டார்கள். ஒருவருக்குக் கொடுக்கும் சம்பளப் பணம் கூட முதலாளி ஆனவர் இந்த நாட்களில் கொடுப்பது இல்லை. இத்தகைய விதிகளில் விதிவிலக்காக இருப்பது இந்த ஒரு பொருளை இரவில் தானம் கொடுக்கலாம் என்பது தான்.

annadhanam 1

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். பசி என்று ஒருவர் வந்து கேட்கும் பொழுது அவர் தீயவராகவே இருந்தாலும் அன்ன தானம் கொடுத்தால் உங்களுடைய புண்ணிய கணக்கு பன்மடங்கு பெருகும். எதிரிகளாக இருந்தாலும் அன்னதானத்தை கொடுக்கலாம். துரோகிகளாக இருந்தாலும் அன்னத்தை தானம் கொடுக்கலாம், இத்தகைய மகிமை வாய்ந்த அன்ன தானத்தை செய்ய நேரம், காலம் எல்லாம் கிடையாது என்பது தான் சாஸ்திர விதி முறையாகும்.

- Advertisement -

பகல் முழுவதும் விரதம் இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடாமல் நம்மால் சரியாக தூங்க கூட முடியாது. உலக மக்களில் பெரும் பங்கு மக்கள் உண்ண உணவின்றி இன்னும் பசியுடன் தான் இருக்கிறார்கள். நம் இது கண்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல் நாம் விலகி சென்றால் நம்மை பாவம் வந்து சேரும். உங்கள் கண்களுக்குத் தென்படும் ஏழை, எளியவர்களுக்கு உங்கள் வீட்டில் இரவில் மீரும் நல்ல சாப்பாட்டை நல்ல முறையில் கொண்டு போய் கொடுங்கள். எத்தகைய துன்பங்கள் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் செய்த இந்த புண்ணியத்தின் பயனாக அவைகள் யாவும் விலகும்.

இரவில் உப்பை தானம் கொடுக்க கூடாது எனவே நீங்கள் சமைக்கும் சாதத்தில் உப்பு சேர்த்து இருந்தால் அந்த சாதத்தை தானமாக கொடுக்காதீர்கள். உப்பில்லாமல் செய்யும் அன்னத்தை இரவு நேரங்களில் தானம் கொடுத்தால் உங்களுடைய துன்பங்கள் யாவும் தொலைந்து போகும். பகலில் செய்யும் அன்னதானத்தை விட இரவில் செய்யும் அன்னதானம் மிகவும் சக்தி வாய்ந்தது. உங்கள் கைகளால் கொடுக்கும் அன்னத்தை சாப்பிட்டு ஒரு நபர் பசியாறினால் கூட உங்களுக்கு அதன் பங்கில் பன்மடங்கு வந்து சேரும். எனவே இரவு நேரத்தில் அன்னத்தை தானம் செய்ய தயங்கவே செய்யாதீர்கள்! அது சரியா? தவறா? என்றெல்லாம் யோசிக்கவே வேண்டாம். தாராளமாக மீரும் சாப்பாட்டை வீணாக்காமல் பசியுடன் வாடுபவர்களுக்கு தானம் செய்யுங்கள், நல்லதே நடக்கும்.

- Advertisement -