உடம்பிற்கு ஆரோக்கியம் கொடுக்கின்ற முருங்கை கீரை தோசையை இந்தப் பதத்தில் செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு இதன் சுவையும் மிக அருமையாக இருக்கும்

keerai
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என விதவிதமான உணவுகளை காலை மற்றும் மதிய வேலைகளுக்குச் சமைத்துக் கொடுக்கிறோம். ஆனால் இவற்றில் உடம்பிற்கு தேவையான ஆரோக்கிய சத்துக்கள் இருக்கின்றதா என்று நாம் யோசிப்பதே கிடையாது. வயிறு நிறைய வேண்டும் என்பதற்காக மட்டும் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி குழந்தைகளுக்கும் அவர்கள் பசியில்லாமல் இருக்க வேண்டும் வயிறு நிறைய வேண்டும் என்று தான் நாம் நினைக்கிறோமே தவிர, அவர்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதற்காக இந்த உணவை கொடுக்க வேண்டும் என்று பலரும் யோசிப்பதில்லை. ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில காய்கறிகள் மற்றும் கீரைகளை ஒரு வாரத்திற்கு இரண்டு, மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாகும். அப்படி உடம்பிற்கு ஆரோக்கியம் தரக்கூடிய முருங்கைக்கீரை தோசை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – ஒரு கப், தோசை மாவு – ஒரு கப், சின்ன வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 2, மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை காம்புகள் இல்லாமல், ஒவ்வொரு இலையாக தனியாக உறுவி எடுக்க வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி இரண்டு, மூன்று முறை நன்றாக அலசி எடுக்க வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் மிளகு சேர்த்து வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் வறுக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ,அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கப் கெட்டியான தோசை மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள முருங்கைக் கீரை விழுதை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி விட வேண்டும். பிறகு கரைத்த மாவிலிருந்து ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை தேய்க்கவேண்டும். சிறிது நேரத்தில் தோசை வெந்தவுடன் திருப்பி போட்டு எடுத்து, அதனுடன் சட்னி, சாம்பார் என தொட்டுக்கொண்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -