உங்கள் கை ரேகைப்படி உங்கள் குணம் என்ன ? பார்ப்போம் வாருங்கள்

- Advertisement -

ஜோதிடக் கலைகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த “கைரேகை ஜோதிடக் கலை “பல்லாயிரம் வருடங்களாக பயன்பாட்டில் இருக்கும் இக்கலை இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியதாகவும், மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பல மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. எது எப்படி இருந்தாலும் நம் நாட்டு மக்களுக்கு கைரேகை ஜோதிடக் கலையின் மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டு அதன் மூலம் தங்களுக்கான பலன்களை அறிந்து கொள்ள தான் செய்கின்றனர்.

kai regai

ஆணுக்கு வலது கையிலும், பெண்ணுக்கு இடது கையிலும் ரேகைப் பார்க்கப்படுவது ஏன்?

- Advertisement -

கைரேகை ஜோதிடம் பார்க்கும் போது ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையில் ரேகை பார்க்கப்படுவதை நம்மில் பலர் கண்டிருப்போம். இது ஏனெனில் “வாசி யோகம்” எனப்படும் மூச்சுப்பயிற்சி யோகத்தின் அடிப்படையில் ஆண்களுக்கு ஓடும் “சூரியக்கலை” எனும் மூச்சுக்காற்று அவர்களின் உடலின் வலப்பக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் வாழ்க் கையை வழிநடத்துவதால் வலது கையிலும், பெண்களுக்கு ஓடும் “சந்திரக்கலை” எனும் மூச்சுக்காற்று அவர்களின் இடதுபாகத்தில் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் வாழ்க்கையை வழிநடத்துவதால், பெண்களுக்கு இடது கையிலும் ரேகை பார்க்கப்படுகிறது. இந்த விதி யோகிகளின் “அர்த்தநாரீஸ்வர தத்துவம்” மற்றும் “தந்திர யோக” விஞ்ஞான உண்மையின் அடிப்படையிலும் பின்பற்றப்படுகிறது.

மனிதர்கள் அனைவருக்குமே உள்ளங்கை ரேகைகள் மாறுபாடுகள் கொண்டிருக்கும். ஆனால் அடர் நிறம் கொண்ட சில அழுத்தமான ரேகைகள், சிறு வேறுபாடுகளுடன் அனைவருக்கும் கட்டாயம் இருக்கும். அப்படியான ரேகைகளில் ஒன்று தான் “இருதய ரேகை”. இந்த “இருதய ரேகை” பொதுவாக ஒரு மனிதனின் குணநலன்களை பற்றி கூறக்கூடியதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இருதய ரேகையைப் பற்றிய சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

HEART REGAI

ஒருவரின் உள்ளங்கையில் சுண்டு விரலுக்கு சற்றுக் கீழாக, வெளிப்புற ஓரத்தில் தொடங்கி, ஆள்காட்டி விரலை நோக்கிச் செல்லும் அடர்நிறமான ரேகைதான் “இருதய ரேகை”. இந்த இருதய ரேகை நல்ல நிறமாகவும், பின்னல்கள் இல்லாமலும், நேராகவும், மற்ற ரேகைகளின் குறுக்கீடுகளில்லாமலும் இருந்தால் அந்த நபர் ஆரோக்கியமான உடல் மனம் கொண்டவராகவும், சாந்தமான குணங்களைக் கொண்டவராகவும் இருப்பார்.

இந்த இருதய ரேகை ஆள்காட்டி விரலின் அடி வரை நீண்டிருந்தால் அவர் அதிக காலம் வாழக் கூடியவராகவும், நேர்மையானவராகவும், பிறர் மீது உண்மையான அக்கறை கொண்ட மனிதராகவும் இருப்பார்.

- Advertisement -

IRUDHAYA REGAI

இந்த ரேகை நடுவிரலின் அடிப்பகுதி வரை நீண்டிருந்தால் அந்நபர் உடல், மனவலிமை மிக்கவராக இருப்பார். போர்க்குணம் கொண்டவராகவும், ஆரோக்கியமான சந்ததிகளைப் பெறுபவராகவும் இருப்பார்.

இருதய ரேகை மோதிர விரலின் அடி வரை மட்டுமே நீண்டிருந்தால் அந்நபர்களுக்கு சிந்தனைத் திறன் குறைவாக இருக்கும். சண்டைப் பிரியர்களாக இருப்பார்கள். தீய குணங்களும், எண்ணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆயுள் காலம் குறைவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
எந்த கரணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?

ஒரு சிலருக்கு அபூர்வமாக இருதய ரேகையே இல்லாமலும், அல்லது கண்ணுக்குத் தெரியாத வகையில் மிக மெலிதாக இருக்கும். இப்படிப்பட்ட அமைப்பைக் கொண்டவர்கள் மிக கொடூர குணங்களைக் கொண்டவர்களாகவும், வக்கிர எண்ணங்களும் தீயச் செயல்களைப் புரிபவர்களாகவும் இருப்பார்கள். இவை இருதய ரேகையைப் பற்றிய பொதுவான பலன்களாகும்.

கை ரேகை, ராசி பலன், மாத பலன் உள்ளிட்ட ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -