ராசியை போல கரணமும் முக்கியம். அதில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?

astology

ஒருவரது ஜாதகத்தில் ராசி, நட்சத்திரம், லக்கினம் எவ்வளவு முக்கியமோ அதே போல கரணமும் முக்கியம். அந்த வகையில் கரணம் என்றால் என்ன. எந்த வகையான கர்ணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை நிலை, 16 நாட்கள் தேய்பிறை நிலைக் கால சுழற்சியே ஒரு மாதம் என்று கணக்கிடப்படுகிறது. அப்படியான சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களிலில் வருவது தான் கரணங்கள். இக்கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில், அத்திதியின் அரைப் பகுதியாகும். மொத்தம் 11 வகையான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் “சர” கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும். அக்கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும் ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான கரணத்தை அறியலாம். அதோடு ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவருக்கும் சில குணாதிசியங்கள் இருக்கும் அது பற்றி பார்ப்போம்.

astrology

சகுனிக் கரணம்:

இக்கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும், சிறந்த அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள் மேலும் இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமிருப்பதால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். இவர்கள் தங்களை மிகவும் பக்குவப்பட்ட மனிதர்களாக மாற்றிக்கொள்வார்கள். போர்புரியவும்,நோய்த் தீர மருந்து உட்கொள்ளும் செயல்களை இக்கரணத்தில் செய்தால் சிறந்தப் பலன்களைக் கொடுக்கும். இக்கரணத்திற்கான உருவம் காக்கை.

சதுஷ்பதக் கரணம் :

- Advertisement -

இக்கரணங்களிலில் பிறந்தவர்கள் சுதந்திரத் தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்கு கீழ் அவர்கள் உத்தரவுகளுக்கு பணிந்து வேலை செய்யாமல், தானே முதலாளியாக இருக்கக் கூடிய வியாபாரத் தொழிலில்களையே இவர்கள் செய்வார்கள். பிறரிடம் அனைத்திலும் உண்மையாக நடந்துகொள்வார்கள். மிகவும் கடினமாக உழைக்கக் கூடிய தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இக்கரணத்தில் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலன்களைக் கொடுக்கும். மேலும் இவர்கள் தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபடுவர். இவர்களுக்கான விலங்கு உருவம் நாய்.

astrology

நாக கர்ணம் :

நாக காரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பூமி சம்பந்தப்பட்ட சுரங்கம், தாதுக்களை வெட்டி எடுப்பது போன்ற தொழில்களையோ, வியாபாரங்களையோ செய்வர். நல்ல குணாதியசங்கள் இவர்களிடம் காணப்படும். நாக கரணத்தில் பிறந்த காரணத்தால் இவர்களிலில் சிலருக்கு விஷப் பாம்புகளை மயக்கி பிடிக்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் ஆன்மிக வழியில் சென்றால், சிறந்த ஞானியாகக் கூடிய அமைப்பு உள்ளது. இக்கரணத்தில் பிறந்த ஒரு சிலர் பிறருக்கு தீமை விளைவிக்கும் காரியங்களைச் செய்வர். இக்கரணத்தின் உருவம் நாகப்பாம்பு.

கௌஸ்துவ கரணம் :

கௌஸ்துவ காரணத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இக்கரணத்தில் பிறந்த ஒரு சில தங்களின் சுயநலம் காரணமாக இரக்கமற்றவர்களாகவும், பிறருக்கு துன்பம் விளைவிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடம் அவப்பெயரைச் சம்பாதிப்பார்கள் இதன் காரணமாக இவர்கள் தங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுவார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தையும் இக்கரணத்தில் துணிந்து செய்யலாம்.

astrology

பவக் கரணம் :

இக்கரணத்தவர்கள் சற்று ஏழ்மையானச் சூழ்நிலையில் பிறந்தாலும், மிகவும் பெருந்தன்மையான குணங்களை பெற்றிருப்பர். பேராசைப்படாமல் தங்களுக்கு கிடைத்ததைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்வார்கள். இக்கரணத்திற்கான விலங்காக சிங்கம் இருப்பதால், வீர தீர சாகசம் புரியும் ராணுவம், காவல்துறைப் போன்றப் பணிகளில் இவர்கள் சிறப்பாகச் செயல்புரிவர்.

பாலவக் கரணம் :

இக்கரணத்தில் பிறந்தவர்கள் அழகானத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகுந்த தைரியசாலிகளான இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள். அதே நேரத்தில் பிறருக்காக எத்தகையத் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள் அது சம்பந்தமானது துறைகளில் சாதனைகள் புரிவார்கள். இக்கரணத்தவர்களுக்கான விலங்கு புலி.

astrology

கிம்ஸ்துக்னம் கரணம்:

இக்கரணத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு அதிகம் தீங்கு செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அனால் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருப்பார். தீயவர்களுன் சகவாசம் கொள்ளாதவரை இவர்கள் தவறான வழியில் செல்வதில்லை. இவர்களுக்கு சரியான ஆன்மிக வழிகாட்டி அமைந்து, அவர்கள் சொற்படி நடந்தால் சித்தி நிலை அடையக்கூடிய யோகம் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கான விலங்கின் உருவம் புழு.

தைதுலைக் கரணம்:

இவர்கள் எப்போதுமே இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சனையில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அதிகாரத் தன்மையுடன் தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார்கள்.
இயற்கையிலேயே இவர்கள் மனவுறுதி கொண்டவர்களாக இருப்பதால், எப்படிப்பட்ட சவால்களையும் ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி அடைவர். பொதுவாக எதிர்காலத்திற்கான பாதுகாப்பைக் கொடுக்கும் உத்தியோகங்களில் சேர்ந்து பணிபுரிவர். இக்கரணத்திற்கான விலங்கின் உருவம் கழுதை.

astrology

கரஜைக் கரணம்:

இந்நபர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சிறந்தப் பேச்சுத் திறனும் அதிகம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர்கள் என்பதால் ஓவியம், சிற்பம், கவிதை, நாடகம், நடனம் போன்ற காலை சம்பந்தமான துறைகளில் சாதிப்பர். இவர்களுக்கு சற்று சலன புத்தி இருப்பதால், பெண்கள் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இகரணத்திற்கான உருவம் யானை.

வனிஜக் கரணம்:

இவர்களிடம் சிறந்த நிர்வாகத்திறன் இருக்கும். மேலும் வியாபாரதில் சாதிக்கக் கூடிய மிகச் சிறப்பான புத்திசாலித்தனம் இருப்பதால் இவர்கள் எவ்வகையான தொழில்களிலும் முன்னிலைக்கு வந்து விடுவர். மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். காரியங்களைத் திட்டமிட்டு செய்து வெற்றிகளைப் பெறுவார்கள்.இக்கரணத்திற்கான விலங்கு உருவம் எருது.

astrology

பத்ரைக் கரணம்:

இவர்களும் இங்கு கூறப்பட்ட சில கரணத்தவர்களைப் போல் தீயச் செயல்களைப் புரிவர்களாக இருப்பர். இவர்களுக்கு சற்று மந்தக் குணம் இருக்கும் காரணத்தினால் எக்காரியத்தையும் சற்றுத் தாமதமாகவே செய்து முடிப்பர். ஆனால் ஏவ்வொரு விஷயத்தையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர். மனிதாபிமான குணம் இருக்கும். இவர்களை யாரவது தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால் இவர்களும் வெற்றியாளர்களாகலாம். இக்கரணத்திற்கான பறவையின் உருவம் கோழி.

இதையும் படிக்கலாமே:
எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?

English Overview:
Here we have described about the Karanam in astrology and characters of a person based on karanam in Tamil.