புதுசா வாங்கின இரும்பு தோசை கல்லை ஒரே ஒரு பொருளை மட்டும் கொண்டு ரொம்பவே சுலபமா பழக்கி விடலாம் தெரியுமா? அட இந்த டிப்ஸ் இதுவரைக்கும் யாருமே சொல்லாதா இருக்கேன்னு நிச்சயம் யோசிப்பீங்க.

- Advertisement -

உணவு வகைகளிலே தோசை பெரும்பாலானரின் விருப்பமான உணவாக இருக்கிறது. அதை இப்போதெல்லாம் நான்ஸ்டிக் தாவாவில் தான் அதிகமானோர் செய்கிறார்கள். இதற்கு காரணம் அதில் அதிக சிரமம் இல்லாமல் செய்யலாம். அதுமட்டுமின்றி அதனை பக்குவப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் இதில் சமைப்பதின் மூலம் உடலுக்கு எந்த வித நன்மையும் கிடைக்காது என்பதையும், இது கெடுதல் விளைவிக்கும் என்பதை நாம் கொஞ்சம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரும்பு தோசை கல்லை எளிமையாக பழக்குவது எப்படி:
இதற்குக் புதிதாக வாங்கிய தோசை கல்லை முதலில் இரண்டு முறை நன்றாக கழுவி கொள்ளுங்கள். அப்போது தான் இதன் மேல் இருக்கும் துருக்கள் தூசு போன்றவை முற்றிலுமாக நீங்கும். அதன் பிறகு ஒரே ஒரு சின்ன வெல்ல கட்டியை எடுத்து தூள் செய்து இந்த தோசை கல் மீது பரவலாக போட்டு லேசாக தண்ணீர் தெளித்து வெல்லத்தை குழைத்து தோசைக்கல் முழுவதுமாக தேய்த்து அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்படி வெல்லம் பூசிய இந்த தோசை கல்லை ஒரு வாரம் வரையில் அப்படியே வைக்க வேண்டும். ஆனால் தினமும் எடுத்து லேசாக தண்ணீர் மட்டும் தெளித்து கைகளால் ஒரு முறை நன்றாக தடவி மறுபடியும் அப்படியே வைத்து விடுங்கள். ஏழு நாள் கழித்து வெல்லம் அனைத்தும் கறுத்து ஒரு வித பிசுபிசுப்பு தன்மையுடன் தோசை கல் முழுவதுமாக ஒட்டி இருக்கும்.

இதை நாம் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப்பு அல்லது லிக்விடை வைத்து தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இதையும் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானவுடன் ஒரு வெங்காயத்தை பாதியாக நறுக்கி எண்ணெயில் தொட்ட பிறகு அதை தோசைக் கல்லில் நன்றாக தேய்த்து விடுங்கள். இதை ஒரு மெல்லிய காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். இப்போது மீதம் இருக்கும் துருவும் இத்துடன் வந்து விடும். இதன் பிறகு மறுபடியும் லேசாக எண்ணெய் தடவி நல்ல தடிமனாக ஒரே ஒரு தோசையாக ஊற்றி அந்த தோசையை இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுத்து விடுங்கள். இந்த தோசையை சாப்பிட வேண்டாம்.

இதையெல்லாம் செய்த பிறகு நீங்கள் மாவை எடுத்து மெலிதாக தேய்த்து ஊற்றி  சிவந்த பிறகு எடுத்தால் நான் ஸ்டிக் தவாவில் செய்வதை விடவே ரொம்பவே சூப்பரான மொறுமொறு தோசை கிடைக்கும். இந்த முறையில் தோசை கல்லை பழகுவதற்கு ஒரு வார கால அவகாசம் மட்டுமே நமக்கு தேவை. மற்றபடி ஒரே ஒரு பொருளை அதில் தேய்த்து எடுத்து விட்டால் போதும். இதில் வேறு எந்த வித வேலையும் நமக்கு கிடையாது. மிக மிக சுலபமாக எல்லோராலும் செய்யக் கூடிய வழிமுறை தான் இது.

இதையும் படிக்கலாமே: புத்தம் புது புடவையில் கறை பட்டு விட்டால் இனி கவலையே பட வேண்டாம். இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிந்தால் போதும்.

இனி புதிதாக இரும்பு தோசை கல்லை வாங்கும் போது இந்த முறையில் பழக்கி பயன் படுத்தி கொள்ளலாம். இப்படி இரும்பு தோசை கல்லை பழக்கி பயன்படுத்துவது மூலம் நாம் ஆரோக்கியம் எந்த அளவிற்கு மேம்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற தகவலோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -