புத்தம் புது புடவையில் கறை பட்டு விட்டால் இனி கவலையே பட வேண்டாம். இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிந்தால் போதும்.

sarry
- Advertisement -

அழகான விலை உயர்ந்த புடவையை கட்டிக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது. எல்லா பெண்களுக்கும் அழகான ஆடை அணிந்து கொள்ள ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த அழகான புடவையில் லேசாக அழிக்குப்பட்டு விட்டால், நீக்க முடியாத கறை பட்டு விட்டால், மனது தாங்கவே தாங்காது. எதிர்பாராமல், கட்டியிருக்கும் புடவையில் படும் கறைகளை சுலபமாக நீக்க ஒரு சில பயனுள்ள வீட்டுக் குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுடைய பட்டுப் புடவையாக இருந்தாலும் காஸ்லி புடைவையாக இருந்தாலும், அதை இந்த முறையில் சுத்தம் செய்து கொள்ளலாம்.

காஸ்ட்லி புடவையை சுத்தம் செய்ய சில ஐடியா:
நிறைய காஸ்ட்லி புடவை இருக்கும். பட்டுப்புடவையை விட்டு விடுங்கள். பட்டுப் புடவை அல்லாமல் துவைக்கக்கூடிய மெட்டீரியலில் இருக்கும் புடவைகளை அழுக்கு போக சுத்தம் செய்ய ஒரு எளிமையான ஐடியா. நாம் பயன்படுத்திய மீதமான சின்ன சின்ன சோப்புகளை தூக்கி குப்பையில் போடுவோம் அல்லவா. அதை சேகரித்து துருவி வைத்துக் கொள்ளுங்கள். சோப் துருவல் 200 கிராம், சுடுதண்ணீர் 500ml, 2 டேபிள் ஸ்பூன் சால்ட் இந்த மூன்று பொருட்கள் தேவை.

- Advertisement -

சுடுதண்ணீரில் சோப்பு துருவல், உப்பு போட்டு, நன்றாக கரைத்தால் சூப்பரான லிக்விட் நமக்கு கிடைத்திருக்கும். இந்த லிக்விடை தண்ணீரில் ஊற்றி கலந்து காஸ்ட்லி புடைவைகளை நனைத்து துவைத்தால், புடவைகளில் இருக்கும் அழுக்கு சுலபமாக நீங்கிவிடும். புடவையில் இருக்கும் சாயம் போகாது. புடவைகளின் பளபளப்பும் குறையாது. வாஷிங் பவுடர் திட்டு திட்டாக புடவையில் ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயமும் இருக்காது.

மருதாணி கறை நீக்க:
சில சமயம் கையில் வைக்கும் மருதாணி கறை அழகான துணிகளில் ஒட்டிக் கொள்ளும். சூடான பாலை ஊற்றி மருதாணிக்கறை படிந்த இடத்தை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பின்பு குளிக்கின்ற சோப்பு போட்டு தேய்த்தால் மருதாணி கறை சுத்தமாக நீங்கிவிடும்.

- Advertisement -

இரத்தை கறை நீங்க:
சில சமயம் புடவையில் பெண்களுக்கு பீரியட்ஸ் டைமில் ரத்தக்கறை பட்டுவிடும். புது புடவையாக இருந்தால் அந்த கறையை நீக்குவது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஐஸ்வாட்டரில், கொஞ்சம் கல் உப்பு போட்டு ரத்தக்கறை படிந்த துணியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு குளிக்கின்ற சோப்பு போட்டு தேய்த்தால் ரத்தக்கறை இருந்த தடம் தெரியாமல் நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: மஞ்சள் கறை படிந்த டாய்லெட்டை சுத்தம் செய்ய சூப்பர் ஐடியா

பேனா இங்க் கறை நீங்க:
பேனா மை, இங்க் போன்ற கறைகள் எதிர்பாராமல் பட்டுப் புடவையிலோ அல்லது மற்ற காஸ்ட்லி புடவையிலோ பட்டுவிட்டால் அவ்வளவு எளிதில் அதை நீக்க முடியாது. ஒரு வெள்ளை துணியை கிளிசரின் ஊற்றி நனைத்து கொள்ளவும். இந்தத் துணியால் பேனா மை படிந்த இடத்தை நன்றாக துடைத்து எடுத்தால், கறை முழுவதும் நீங்கிவிடும்.

பிறகு அந்த இடத்தில் ஃபேஸ் வாஷ் போட்டு தேய்த்து லேசாக தண்ணீரில் அலசி விட்டால் போதும், கறை தெரியாது. பல் தேய்க்கும் பிரஷில் ஃபேஸ் வாஷை போட்டு கறை படிந்த இடத்தை நுரை வர தேய்த்து, நல்ல தண்ணீரை ஊற்றி லேசாக அலசி விடுங்கள். அவ்வளவுதாங்க மேலே சொன்ன இந்த பயனுள்ள குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -