இரும்பு கடாயை இப்படி சுத்தம் செய்து எடுத்து வைத்தால், 1 மாதம் கழித்து மீண்டும் எடுத்துப் பார்த்தாலும், அதில் ஒரு துளி துரும்பு கூட பிடிக்காது.

kadai
- Advertisement -

இப்போது நம்முடைய சமையலறையில் பெரும்பாலும் இரும்பு கடாயை பயன்படுத்துவோம். அப்படி இல்லை என்றால், நான் ஸ்டிக் கடாயை பயன்படுத்துவோம். இரும்பு கடாயில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை. கழுவி இரும்பு கடாயை ஸ்டோர் செய்து அலமாரியில் கழிவிழ்த்து வைத்தால், உடனடியாக அதில் துருப்பிடித்து விடும். அடுத்த நாள் எடுத்து சமைத்தாலே அந்த துருவை சுத்தம் செய்வதற்குள் போதும் போதுமென போகும். இந்த துரு மீண்டும் மீண்டும் கடாயில் வராமல் இருக்கவும், இருக்கின்ற துருகரையை எளிமையாக எப்படி நீக்குவது என்பதை பற்றிய ஒரு எளிமையான வீட்டு குறிப்பு.

நான் ஸ்டிக் கடாயில் இருக்கும் கோட்டிங் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்க வேண்டும் என்றால், நான் ஸ்டிக் கடாயை சுத்தம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்காக. இந்த இரண்டு பயனுள்ள வீட்டு குறிப்புகளும் இல்லத்தரசிகளுக்கு தேவைப்படும் பயன்படித்து பாருங்கள். பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

இரும்பு கடாய் சுத்தம் செய்யும் முறை:
துருக்கறையோடு இருக்கும் இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தூள் உப்பு 1 ஸ்பூன், கொஞ்சமாக மண் தூவி, பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றி, ஒரு ஸ்டீல் நாரை வைத்து நன்றாக தேய்த்துக் கொடுங்கள். இரும்பு கடாயில் இருக்கும் துரு கறை அனைத்தும் சுத்தமாக நீங்கிவிடும். பிறகு தண்ணீரை ஊற்றி நன்றாக கழுவி விடுங்கள். (ரோட்டோரங்களில் இருக்கும் மண்ணை எடுத்துப் போட்டாலே போதும். அல்லது தொட்டியில் செடி இருந்தால் அதிலிருந்து கொஞ்சம் செம்மண்ணை எடுத்து போட்டு தேய்க்கலாம்.)

அதன் பிறகு இந்த கடாயை ஒரு துணியை போட்டு ஈரம் இல்லாமல் சுத்தமாக துடைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த கடாயின் உள்பக்கம் முழுமையாக சமையல் எண்ணெய் எதுவாக இருந்தாலும் அதை முழுக்க தடவி, அப்படியே வெயிலில் காய வைத்து எடுத்து ஸ்டோர் செய்தால் ஒரு மாதம் கழித்து மீண்டும் எடுத்தாலும் அந்த கடாய்த்துரு பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

வாரத்திற்கு ஒருமுறை தேவைப்பட்டால் நீங்கள் அந்த கடாயை எடுத்துப் பார்க்கலாம். துருப்பிடிப்பது போல இருந்தால் இன்னும் கொஞ்சம் எண்ணெயை அந்த கடாயில் ஊற்றி தடவி வைத்தால் மேலும் நல்லது. இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

நான்ஸ்டிக் கடாய் நீண்ட நாட்களுக்கு கோட்டிங் போகாமல் இருக்க:
நான்ஸ்டிக் கடாயை சமைத்து முடித்தவுடன் அப்படியே சிங்கிள் போட்டு, தண்ணீர் ஊற்றி நார் போட்டு தேய்த்து கழுவக்கூடாது. சமைத்து முடித்த நான் ஸ்டிக் கடாயில் கொஞ்சமாக கோதுமை மாவை தூவி ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து துடைத்து எடுத்து விட வேண்டும். அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு எல்லாம் நீங்கிவிடும்.

- Advertisement -

பிறகு அந்த கடாயில் கொஞ்சமாக பாத்திரம் தேய்க்கும் லிக்விட், வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, எலுமிச்ச பழத்தோலை வைத்து, லேசாக தேய்த்துக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தாலே நான் ஸ்டிக் கடாயில் இருக்கும் அழுக்கு சுத்தமாகிவிடும்.

பிறகு வழக்கம் போல பச்சை தண்ணீரில் கழுவி நான்ஸ்டிக் கடாய்க்கு உள்ளே இருக்கும் தண்ணீரை துடைத்து கவிழ்த்து வைத்து விட்டால், நான் ஸ்டிக் கடாய் எத்தனை வருடங்கள் ஆனாலும் புதுசு போலவே இருக்கும். தவிர நான் ஸ்டிக் கடாயில் ஸ்டீல் கரண்டி பயன்படுத்தக் கூடாது. ஸ்டீல் நார் பயன்படுத்தக் கூடாது. பச்சை நிறத்தில் இருக்கும் ஸ்பாஞ்நார் கூட பயன்படுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: இட்லி வேகும் நேரத்திற்குள்ளாகவே ஒரு அருமையான டிபன் சாம்பாரை சட்டுனு நிமிசத்துல ரெடி பண்ணிடலாம். டிபன் சாம்பார் இவ்வளவு சிம்பிளா கூட செய்யலாம்னு இது நாள் வரைக்கும் தெரியாம போச்சே.

எலுமிச்சம்பழத் தோல் இல்லை என்றால், உங்கள் கையாலேயே தேய்த்து நான் ஸ்டிக் கடாயை கழுவி கொள்ளுங்கள். இந்த டிப்ஸை பின்பற்றினால் உங்கள் வீட்டில் இருக்கும் நான் ஸ்டிக் கடாய், நான் ஸ்டிக் தோசை கல், குழி பணியார கல் எதுவாக இருந்தாலும் அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -