இட்லி வேகும் நேரத்திற்குள்ளாகவே ஒரு அருமையான டிபன் சாம்பாரை சட்டுனு நிமிசத்துல ரெடி பண்ணிடலாம். டிபன் சாம்பார் இவ்வளவு சிம்பிளா கூட செய்யலாம்னு இது நாள் வரைக்கும் தெரியாம போச்சே.

- Advertisement -

இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு பருப்பே சேர்க்காமல் அட்டகாசமான சாம்பார் வைக்கலாம். இது ஓரளவுக்கு அனைவருக்கும் தெரிந்த ரெசிபி தான். ஆனால் அந்த சாம்பாரை கூட ரொம்ப பிரமாதமான சுவையில் சட்டுன்னு செய்யறது எப்படின்னு தான் இப்போ இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம். வாங்க அந்த சிம்பிள் டிபன் சாம்பார் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

செய்முறை

இந்த சாம்பார் செய்ய முதலில் பத்து சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ரெண்டு பழுத்த தக்காளியும் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் காரத்திற்கு இரண்டு காய்ந்த மிளகாய், மூன்று பச்சை மிளகாய் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சாம்பார் தாளித்து விடலாம்.

- Advertisement -

அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன், அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாயை அப்படியே சேர்த்து விட்டு, பச்சை மிளகாய் இரண்டாக கீரி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

அடுத்ததாக அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் தக்காளியை சேர்த்து அதுவும் நன்றாக வதங்கிய பிறகு குழம்பு மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு இவையெல்லாம் சேர்த்து அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து மசாலாவின் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இது கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் மிக்ஸி ஜாரில் மூன்று டேபிள் ஸ்பூன் பொட்டுக்க டலை சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு அரைத்த பொட்டுக்கடலை பவுடரில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி விடுங்கள்.

அதன் பிறகு சாம்பாருக்கு தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பொட்டுக்கடலை சேர்த்து இருப்பதால் இந்த சாம்பார் மிகவும் கெட்டியாக இருக்கும். அதனால் கொஞ்சம் தாராளமாகவே தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் நன்றாக கொதித்த பிறகு கொத்தமல்லி தழைகளை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் ரவை இருந்தால் போதும், அதை வைத்தே சாப்டான ரவை சப்பாத்தி செய்துவிடலாம்.

அவ்வளவு தான் சுவையான பருப்பே இல்லாத டிபன் சாம்பார் நிமிடத்தில் தயார். இவ்வளவு சுலபமாக அதே நேரத்தில் நல்ல சுவையுடன் இருக்கக்கூ டிய இந்த டிபன் சாம்பாரை நீங்களும் ஒரு முறை உங்க வீட்டில் ட்ரை பண்ணா கண்டிப்பா மறுபடியும் செய்வீங்க.

- Advertisement -