இரும்பு தோசை கல்லை சுத்தம் செய்ய எளிய வழி

iron dosa tawa cleaning tips
- Advertisement -

காலை சிற்றுண்டிகளில் இந்த தோசையானது அனைவருக்கும் பிடித்த உணவாகவே இருக்கும். என்ன தான் மற்ற உணவு வகைகள் ஆரோக்கியமானது என்றாலும் கூட தோசை என்றால் அனைவருக்குமே ஒரு அலாதி பிரியம் தான். அப்படி தோசை ருசியாக வர தோசை கல்லும் ஒரு முக்கியமான காரணம். தோசை கல் சரியாக இல்லாத பட்சத்தில் மொறுமொறுவென்ற தோசை கிடைக்காது.

இப்போதெல்லாம் பெரும்பாலும் நான்ஸ்டிக் தவாவில் தான் தோசை ஊற்றுகிறார்கள். என்ன தான் இதில் ஊற்றுவது சுலபம் பயன்பாட்டிற்கு எளிமையாக இருந்தாலும், இரும்பு தோசை கல்லில் ஊற்றும் தோசையின் சுவை இதில் வராது. இது தெரிந்தும் நான்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு காரணம் இரும்பு தோசை கல்லில் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல் தான். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள படி தோசை கல்லை பயன்படுத்தி பாருங்கள் எப்போதும் ஊற்றினாலும் தோசை நன்றாக வரும்.

- Advertisement -

இரும்பு தோசை கல்லை சுத்தம் செய்யும் முறை

முதலில் தோசை கல்லை சுத்தம் செய்யும் போது எப்போதுமே வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு தான் கழுவ வேண்டும். அப்படி சுத்தம் செய்யும் போது கொஞ்சமாக சோப்பு அல்லது லிக்விடை சேர்த்து ஸ்பான்ச் நாரை வைத்து சுத்தம் செய்யலாம். இரும்பு நாரை கொண்டு கல்லை சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் வினிகர் இரண்டையும் சம அளவு எடுத்து அதை தோசைக் கல் மீது தடவி சிறிது நேரம் வைத்து விடுங்கள். அதன் பிறகு ஸ்பாஞ்ச் ஸ்கிரப்பர் வைத்து தேய்த்த பின்பு வெதுவெதுப்பான நீரை கொண்டு சுத்தம் செய்தால் தோசைக்கல் சுத்தமாவதுடன் நீண்ட நாள் உழைக்கும். இந்த முறையில் வினிகருக்கு பதிலாக சமையல் சோடாவையும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

இதே தோசை கல்லை இன்னொரு முறையிலும் சுத்தம் செய்யலாம். அதற்கு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி உப்பில் தொட்டு எடுத்து அதன் பிறகு தோசை கல் மீது தேய்த்து விடுங்கள். இதையும் சிறிது நேரம் அப்படியே விட்டு ஸ்பாஞ்ச் வைத்து தேய்த்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள். தோசை கல் மீது இருக்கும் எண்ணெய் பிசுக்கு அழுக்கு அனைத்தும் நீங்கி விடும்.

சில நேரங்களில் தோசை கல் அதிக சூடாகி தோசை ஊற்றவே வராது. அது போன்ற சமயத்தில் தோசை கல்லில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு ஸ்பாஞ்ச் வைத்து லேசாக தேய்த்த பிறகு மறுபடியும் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி ஊற்றுங்கள். கல்லும் சுத்தமாகும் தோசையும் நன்றாக வரும்.

- Advertisement -

அதே போல் தோசை கல்லை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் அந்தத் தண்ணீரை அதிக நேரம் தோசை கல்லில் ஊற்றி ஊற வைக்கக் கூடாது. அது மட்டும் இன்றி தோசை கல்லை தேய்க்க ஸ்பாஞ்ச் நாரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கம்பி நாரை வைத்து எந்த காரணத்தில் கொண்டும் தேய்க்க கூடாது.

இந்த தோசை கல்லோ அல்லது இரும்பு கடாயோ பயன்படுத்திய பிறகு அதை ஈரம் இல்லாத அளவுக்கு துடைத்து காய வைத்த பின்பு எடுத்து வைப்பது நல்லது. மறுமுறை அதை பயன்படுத்தும் முன்பு லேசாக எண்ணெய் தடவி வைத்த பின்பு பயன்படுத்தினால் தோசை ஊற்றினாலும் சரி அல்லது இரும்பு கடாய் வேறு பயன்படுத்திட்டு பயன்படுத்தினாலும் ஒட்டாமல் வரும்.

இதையும் படிக்கலாமே: சுவரில் இருக்கும் அழுக்குகள் நீங்க டிப்ஸ்.

இந்த முறையில் தோசை கல்லை பயன்படுத்தி சுத்தம் செய்து வைத்தால் தோசை கல் நீண்ட நாட்கள் உழைக்கும். அது மட்டும் இன்றி அழுக்கு எதுவும் சேராமல் தோசை ஊற்றும் போது நல்ல மொறு மொறு என்று இருக்கும். சாப்பிடவும் ருசியாக இருக்கும் இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்கள்.

- Advertisement -