குங்குமத்தை கைதவறி கொட்டினால் அபசகுனமா ?

kungumam

இந்து மதத்தை சார்ந்தவர்கள் குங்குமத்தை மிக மிக புனிதமாக கருதுவது வழக்கம். அத்தகைய குங்குமத்தை நாம் கை தவறி கீழே கொட்டிவிட்டால் அது அபசகுனமா என்று பார்ப்போம் வாருங்கள்.

kungumam

பொதுவாக நாம் கைதவறி கொட்டிய எதையும் அபசகுனமாக கருத தேவை இல்லை. காரணத்துடன் நிகழும் எந்த நிகழ்விற்கும் சகுனத்திற்கும் சம்மந்தமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, கார்த்திகை தீபத்தன்று வாசலில் தீபம் ஏற்றுவோம் ஆனால் அது காற்றில் அணைந்துவிடும். இதை அபசகுனமாக கருத முடியுமா? காற்றடித்தால் தீபம் ஆணையத்தான் செய்யும். அதுபோல கோவிலில் கூட்ட நெரிசலில் நாம் வாங்கும் பிரசாதம் கைதவறி கீழே விழுந்துவிடும். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நம்முடைய அஜாக்கிரதையால் நிகழ்வதே தவிர இதெல்லாம் அபசகுனம் கிடையாது.

எதைத்தான் சகுனமாக கருதவேண்டும்?
நம்மை மீறி நடக்கும் சில செயல்களையே நாம் சகுனமாக கருத வேண்டும். உதாரணத்திற்கு நாம் வெளியில் கிளம்பும்போது வாசலில் வந்து அண்ணாந்து பார்க்கையில் கண்ணில் கருடன் தென்பட்டால் அது சகுனம். இது நம்மை மீறிய விஷயம். இதுபோல் நடக்கும் நிகழ்வுகளையே சகுனமாக கருதவேண்டும். ஆகையால் நம் அஜாக்கிரதையால் நடக்கும் சில விஷயங்களை சகுனம் என்று நினைத்து மனக்குழப்பம் அடைவதை விடுத்தது நிம்மதியாய் வாழ்வதே சிறந்தது.