உங்கள் நிதிநிலைமை படுமோசமாக இருக்கிறதா? இந்த 6 திரிகள் போதும். ‘லக்ஷ்மிக்கட்டு’ அறுபட்டு ஓஹோ என்று வந்து விடுவீர்கள்.

lakshmi-finance

எப்போதும் பண பற்றாக்குறை, நிதி நிலைமை மோசமாக இருப்பது, பொருளாதார பிரச்சனை என்று அனைத்திற்கும் காரணம் பணம் தான். பணம் என்றால் என்ன? பணம் என்பது லட்சுமியின் அம்சம் தானே? அந்த லட்சுமி உங்களிடம் இல்லை என்றால் அதற்கு அர்த்தம் லட்சுமி கட்டப்பட்டு இருக்கிறாள். இதனை ‘லட்சுமிக்கட்டு’ என்பார்கள். அந்த கட்டை அவிழ்த்து விட்டால் போதும். சதா பணக்காஷ்டம் என்ற நிலை மாறிவிடும். நிதிநிலைமை சீராக வந்து விடும். தேவைக்கு கூட காசில்லாத நிலையை இந்த பரிகாரம் நிவர்த்தி செய்து வைக்கும். இந்த லட்சுமியின் கட்டை எப்படி அவிழ்ப்பது என்பதைப்பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

பரிகாரம் செய்ய தேவையானவை:
தாமரைத்தண்டு திரி – 6
மண் அகல் விளக்குகள் – 6
நெய் – சிறிதளவு
குங்குமம் – சிறிதளவு
கற்கண்டு – சிறிதளவு
உதிரி பூக்கள் – சிறிது

மேற்கண்ட பொருட்களை முன்னரே தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் சரியாக 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விடுவது நல்லது. வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து குளித்து விடுங்கள். பூஜை செய்ய கீழே ஒரு துண்டு போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். வடக்கு பார்த்து உட்கார வேண்டும். ஒரு மனை எடுத்து கொள்ளுங்கள். அதை நீரினால் துடைத்து விட்டு குங்குமம் குழைத்து கொள்ளுங்கள். பின்னர் உங்களின் வலது கை மோதிர விரலால் குங்குமத்தை தொட்டு மனையின் மேல் பகுதியில் ‘ஸ்ரீம்’ என்று உச்சரித்து கொண்டே எழுதுங்கள். தாமரைதண்டு திரிகளை குங்குமத்தில் குழைத்து காய வைத்து கொள்ளுங்கள். அந்த மந்திரத்தை சுற்றி உதிரி பூக்களை வையுங்கள். மனையை சுற்றி 6 அகல் விளக்குகளையும் வையுங்கள் அனைத்து திசைகளையும் நோக்கியவாறு தீபம் இருக்க வேண்டும்.

thamaraithandu-thiri

பின்னர் அகல்களில் நெய் ஊற்றி தாமரைத்தண்டு திரிகளை போடுங்கள். நெய் சுத்தமான நெய்யாக இருக்க வேண்டும். பின்னர் விளக்குகளை ‘ஸ்ரீம்’ மந்திரத்தை உச்சரித்து கொண்டே ஏற்றி வாருங்கள். ஏற்றியதும் ஒரு 15 நிமிடங்கள் உங்களின் கோரிக்கைகளை முன் வைத்து தியானம் செய்யுங்கள். உங்கள் கஷ்டங்கள் தீர மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நிவேதனமாக கற்கண்டை வைக்கவும். தியானம் முடிந்ததும் எதையும் கலைக்க வேண்டாம். மறுநாள் வரை அப்படியே விட்டுவிட்டு காலையில் ஒன்பது வயது நிரம்பாத ஐந்து சிறுமியர்களுக்கு அந்த கற்கண்டை தானமாக அளிக்க வேண்டும். மீதம் இருப்பதை குடும்பத்தில் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகள் செய்து வர வேண்டும். குடும்பத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். விலக்காகும் நாட்களை கணக்கில் சேர்க்காதீர்கள். இப்படி செய்து வந்தால் கட்டாயம் உங்களின் நிதி நிலை மாறும். கட்டப்பட்ட மஹாலக்ஷ்மி கட்டவிழ்க்கபடுவாள். பணப்பற்றாக்குறை நீங்கி விடும். தாராள தனவரவு ஏற்படும். பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விடுவீர்கள். மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களில் ஒன்று இந்த பரிகாரம்.

santhana lakshmi

விரதம் இருந்து இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் இன்னும் விரைவாக உங்களின் நிலை மாறும். அதாவது பரிகாரம் செய்யப்படும் இந்த 21 வெள்ளிக் கிழமைகள் முடியும் வரை அசைவம் சேர்க்காமல் விரதம் அனுஷ்டித்தால் கூடுதல் பலன் கிடைக்கும். விரதம் இருந்து மேற்கொள்ளப்படும் போது சில வாரத்திலேயே நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன் தொல்லைகள் அகலும். புதிய மாற்றங்களை கண் கூடாக நீங்கள் காண்பீர்கள். எதெல்லாம் உங்களுக்கு தடையாக இருந்து வந்ததோ அவைகள் ஒவ்வொன்றாக அழிந்து நல்லது நடக்கும். முழு நம்பிக்கையுடன் செய்வது முக்கியமானது.

இதையும் படிக்கலாமே
ரூபாயை எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பணவரவு வேண்டுமா? லட்சுமி குபேர தீபத்தை முறையாக இப்படி ஏற்றுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Lakshmi kattu. Lakshmi vazhipadu in Tamil. Lakshmi valipadu. Lakshmi deepam.