108 நாட்கள் இஷ்ட தெய்வத்திடம், வேண்டுதலை இப்படி சொன்னால், எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது நிறைவேறிவிடும்.

pray

எப்படிப்பட்ட இஷ்டதெய்வ வேண்டுதலை வைத்தாலும், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அதன் பின்பு இஷ்ட தெய்வ வழிபாட்டை தொடங்குவது சரியான முறை. உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத கஷ்டங்கள் தீர வேண்டும். நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால், இறைவழிபாட்டை தவம் போல் எப்படி மேற்கொள்வது என்பதை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். விடாமல் முழுமூச்சோடு கஷ்டப்பட்டு இஷ்ட தெய்வத்தை 108 நாட்கள் இப்படி வழிபாடு செய்து பாருங்கள். தோல்வியே உங்களுக்கு இல்லை.

god-archanai

இந்த வழிபாட்டிற்காக உங்களுக்குப் பிடித்தமான இஷ்ட தெய்வத்தின் திரு உருவப்படம் அல்லது திருவுருவ சிலையை புதியதாக வாங்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் குருமார்கள் இருந்தால் அவர்களுடைய ஆசீர்வாதத்தோடு அவர்களுடைய கையால் இந்த சுவாமி படத்தை வாங்குவதே நல்லது. அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு அந்த சுவாமியின் படத்தை வாங்கி ஈரத் துணியால் நன்றாக துடைத்து, மஞ்சள் குங்கும பொட்டு இட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

உங்கள் இஷ்ட தெய்வம் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். பிள்ளையார், முருகர், சிவன், அம்பாள், பெருமாள் இப்படி உங்களுக்கு பிடித்த தெய்வத்தை வாங்கி வைத்து வழிபடலாம். காலை மாலை இரண்டு வேளையும் இந்த தெய்வத்தின் பெயரை உச்சரித்து 108 முறை மந்திரத்தை சொல்ல வேண்டும்.

சிவனாக இருந்தால் ‘ஓம் நமசிவாய’ முருகர் ஆக இருந்தால் ‘ஓம் முருகப் பெருமானே போற்றி’ விநாயகராக இருந்தால் ‘விக்னங்களை தீர்க்கும் விநாயக போற்றி’ இப்படி அந்த தெய்வத்தின் நாமத்தை உச்சரித்து, ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு மந்திரத்தை சொன்னால் மட்டுமே போதும்.

- Advertisement -

முழுமூச்சோடு ஆத்மார்த்தமாக அடிமனதில் இருந்து மந்திரம் எழவேண்டும். 108 நாட்கள், குறிப்பிட்ட இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்கு காலை மாலை இருவேளையும் செல்ல வேண்டும். இது வேண்டுதல் அல்ல. நீங்கள் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்காக மேற்கொள்ளக்கூடிய தவம்.

3-god-picture

அந்த காலத்தில் முனிவர்கள் தவமிருந்த வரத்தை பெற்றது போல் நீங்களும் உங்கள் இஷ்ட தெய்வத்திடம் தவமிருந்து வரத்தை பெற போவதாக நினைத்து சதாகாலமும் அதே வேண்டுதலை மனதில் திரும்பத் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்து, தினம் தினம் வீட்டில் இருக்கும் தெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு தீப ஆராதனை காட்டி பூஜை செய்துவந்தால், 108 நாட்கள் முடிவதற்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கான வேலைகள் நடக்க ஆரம்பிக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

praying-god

உங்களுக்கு இறைவன் மீது முழு நம்பிக்கை இருந்தால் கஷ்டப்பட்டு இந்த 108 நாள் வழிபாட்டை (தவத்தை) மேற்கொண்டு தான் பாருங்களேன். உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மாசி மாத வெள்ளி கிழமையில் இதை செய்பவர்களுக்கு இதுவரை இருக்கும் தடைகள் எல்லாம் தவிடுபொடியாகும்! குறிப்பாக இந்த 1 நட்சத்திரகாரர்கள் மாசி வழிபாடு செய்தால் சகலமும் வசமாகும். அது என்ன நட்சத்திரம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.