அழியாத ஐஸ்வர்யத்தை பெற்றுத்தரும், இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஒரு முறை ஏற்றினாலே போதும். கஷ்டம் காணாமல் போய்விடும்.

deepam11

நம்முடைய வீட்டில் மகாலட்சுமியின் கடாட்சம் நிலைத்து நிற்க, அழியாத செல்வ வளத்தை பெற, பல வகையான பரிகாரங்கள் செய்தும் பலனளிக்கவில்லை, எனும் பட்சத்தில் மகாலட்சுமியை வேண்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வெள்ளிக்கிழமையில் இந்த தீபத்தை ஒருமுறை ஏற்றினாலும், குபேர சம்பத்து கிடைக்கப் பெற்று, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எந்த ஒரு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலும், நீங்கள் இந்த வழிபாட்டு முறையை ஒரே ஒரு முறை மட்டுமாவது உங்களுடைய வீட்டில் செய்து பாருங்கள். இந்த தீபச் சுடரின் ஒளியில் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடரலாம்.

mahalakshmi

ஒரு வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டை சுத்தமாக துடைத்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விட வேண்டும். மகாலட்சுமிக்கு மல்லிகைப் பூக்களால் அலங்காரம் செய்து விடவேண்டும். வீட்டின் நீல வாசல்படியில் கட்டாயம் மா இலை தோரணம் கட்ட வேண்டும். நேர்மறை ஆற்றல் ஈர்க்கக் கூடிய சக்தியும், ஐஸ்வர்யத்தை வசப்படுத்த கூடிய சக்தியும் இந்த மா இலை தோரணத்திற்க்கு உண்டு.

அடுத்தபடியாக 27 மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பழைய மண் அகல் விளக்குகளாக இருந்தாலும், சுத்தமாக துடைத்து விட்டு, அதை இந்த பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 27 மண் அகல் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, ஒரு தட்டில் வட்ட வடிவமாக அல்லது உங்களுக்கு எப்படி முடியுமோ அப்படி அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.

karthigai-deepam2

குறிப்பிட்ட இந்த திசையில் தான் தீபம் எரிய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. 27 மண் அகல் விளக்குகளையும் 4 திசைகளை பார்த்தவாறு அமைத்துக் அடுக்கி வைத்து கொள்ளலாம். ஒவ்வொரு தீபச் சுடரை நீங்கள் ஏற்றும் போதும், ‘ஓம் மகாலட்சுமியை ஓம்’ என்ற இந்த மந்திரத்தை உச்சரித்து 27 தீபங்களையும் ஏற்றி வைத்தாலே போதும்.

- Advertisement -

மனதார உங்கள் குலதெய்வத்தை வேண்டி, வீட்டில் குபேர சம்பத்து கிடைக்க வேண்டுமென்று, ஐஸ்வர்யம் நிலைத்திருக்க வேண்டும் என்று, வேண்டுதல் வைத்துக்கொண்டால் வீட்டில் இருக்கும் வறுமை, இந்த தீபச் சுடரின் ஒளியில் பொசுங்கி விடும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இத்தனை வெள்ளிக்கிழமை தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

deepam8

மன கஷ்டம் இருக்கும் போது, பண கஷ்டம் இருக்கும் போது, தடைகள் வந்து கொண்டே இருக்கும் போது, ஒரு வெள்ளிக் கிழமைகளில் இந்த தீப வழிபாட்டை உங்களுடைய வீட்டில் மனநிறைவோடு செய்தாலும் சரிதான். வெற்றியோடு சேர்ந்த நல்ல பலன்கள் உங்களை நோக்கி வருவதை உங்களால் உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்க தேங்காயை ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் போதுமே! மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து பணம் கொழிக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.