இது ஒரு புது ஐடியாவா இருக்கே! வெறும் 2 ரூபாய் பூஸ்டில், 5 நிமிடத்தில் இவ்வளவு அழகாக மருதாணி வைக்க முடியுமா என்ன? தெரிஞ்சு வச்சுக்கலாம். அவசரத்துக்கு உதவும்.

maruthani
- Advertisement -

கையில் அழகாக மருதாணி இட்டுக் கொள்வது எல்லா பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். ஆனால் எல்லா சமயத்திலும் இந்த மருதாணியை கையில் இட்டுக் கொள்ள நேரம் இருக்காது. உடனடியாக ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டும். விசேஷத்திற்கு செல்ல வேண்டும் கையில் மருதாணி இருந்தால் நன்றாக இருக்கும் என தோனும். ஆனால் அந்த மருதாணியை அரைத்து வைத்துக் கொள்வதில் சிரமம் சோம்பேறித்தனம். அதேபோல ஒரு கிளாசிக்கல் டான்சருக்கு இந்த மருதாணி எவ்வளவு முக்கியம் என்பது  தெரியும். இப்படிப்பட்ட தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய இன்ஸ்டன்ட் ஆக கையில் 5 நிமிடத்தில் மருதாணி வைக்க ஒரு புது ஐடியா இருக்கு. அந்த ஐடியாவை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

இன்ஸ்டன்ட் மருதாணி செய்முறை:
இந்த மருதாணி செய்வதற்கு நமக்கு முதலில் ஒரு பூஸ்ட் பாக்கெட் தேவை. அதை நீங்கள் 2 ரூபாய் பூஸ்ட் ஆகவும் வாங்கிக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் பாட்டிலில் பூஸ்ட் இருந்தால் 2 டேபிள் ஸ்பூன் பூஸ்ட் எடுத்துக்கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த மெத்தடை ட்ரை பண்ணி பார்க்க வேண்டும் என்றால், ஒரு அகலமான மண் சட்டி அல்லது சில்வர் பாத்திரம் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் இந்த மெத்தடுக்கு பயன்படுத்திய பாத்திரத்தை மீண்டும் சமைப்பதற்கு பயன்படுத்த முடியாது. அந்த பாத்திரத்தில் அடியில் கறி பிடித்து விடும்.

ஒரு சின்ன கிண்ணத்தில் முதலில் 2 டேபிள் ஸ்பூன் பூஸ்ட், 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை போட்டு உங்கள் கையாலேயே நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். ஒரு அகலமான மண் சட்டிக்கு உள்ளே இந்த பூஸ்ட்டையும் சர்க்கரையையும் கலந்த கலவையை தூவி விடுங்கள். இந்த கலவைக்கு மேலே ஒரு சின்ன சில்வர் கிண்ணத்தை வைத்து விடுங்கள். அடுப்பை பற்ற வைத்து, தயார் செய்து வைத்திருக்கும் மண் சட்டியை அடுப்பில் வைக்க வேண்டும். அடுப்பு மீடியம் ஃப்ளேமில் இருக்க வேண்டும். இப்போது இந்த மண் சட்டியை மூடுவதற்கு ஒரு சில்வர் கிண்ணம் தயார் செய்து கொள்ளுங்கள். அந்த சில்வர் கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி மண் சட்டிக்கு மேலே மூடிவிடுங்கள். அவ்வளவுதான்.

- Advertisement -

ஒரே நிமிடத்தில் இந்த மண்சட்டியில் இருந்து புகை வெளி வர ஆரம்பிக்கும். இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் நீங்கள் அடுப்பை அணைத்து விடலாம். புகை எல்லாம் அடங்கியவுடன், மீண்டும் ஒரு நிமிடம் கழித்து மண் சட்டியை மூடி வைத்திருக்கும் கிண்ணத்தை எடுத்து பாருங்கள். மண்சட்டிக்கு உள்ளே வைத்திருக்கும் சின்ன கிண்ணியில் 2 டேபிள் ஸ்பூன் அளவு சிவப்பு நிறத்தில் ஆவிறி வடிந்த தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும். அதுதான் நமக்குத் தேவை.

கையை சுட்டுக் கொள்ளாமல் இருக்க ஒரு இடுக்கியில் அந்த தண்ணீரை வெளியே எடுத்து விடுங்கள். மண்சட்டிக்கு அடியில் நாம் தூவிய பூஸ்ட்டும் சர்க்கரையும் அப்படியே உருகி ஒட்டிக்கொள்ளும். அந்த மண் சட்டியை மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்த மண்சட்டிக்கு பதிலாக நீங்கள் அடிகனமான சில்வர் பாத்திரத்தை கூட பயன்படுத்தலாம். இரும்பு பாத்திரத்தை கூட பயன்படுத்தலாம் தவறு கிடையாது.

- Advertisement -

சரி, இப்போது சின்ன கிண்ணத்தில் அந்த வியர்வை வடிந்து இருக்கிறது அல்லவா. அந்த ஆவிரி தண்ணீரில் சிவப்பு நிற குங்குமத்தை போட்டு கலந்து கொள்ளுங்கள். தண்ணீருக்கு ஏற்ப சிவப்பு நிற குங்குமத்தை போட்டு பேஸ்ட் போல கலக்கவும். இதைத்தான் நாம் கையில் இட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் விருப்பம் போல விரல்களில் இந்த கலவையை தடவிக்கோங்க.

இதையும் படிக்கலாமே: ஒவ்வொரு முடியையும் திக்காக ஸ்ட்ராங்காக நீளமாக வளர்க்க உங்களுக்கு ஆசையா இருக்கா? அப்ப யோசிக்காமல் இந்த ஒரு ஹேர் பேக்கை போடுங்க.

உள்ளங்கைகளில் நடுவில் புள்ளி புள்ளியாக வைத்து டிசைன் போட்டாலும் சரி, அல்லது ஒரு குச்சி வைத்து டிசைன் போட்டாலும் சரி, இதை கையில் இட்ட அடுத்த பத்து நிமிடத்தில் நீங்கள் தண்ணீரில் கழுவி விடலாம். கலர் பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும். மருதாணி வைத்தால் கூட இந்த நிறம் உங்களுக்கு கிடையாது. இந்த நிறம் நான்கு நாட்களுக்கு உங்கள் கையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையாக பூஸ்ட் வைத்து செய்த இந்த மருதாணி அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -