ஒவ்வொரு முடியையும் திக்காக ஸ்ட்ராங்காக நீளமாக வளர்க்க உங்களுக்கு ஆசையா இருக்கா? அப்ப யோசிக்காமல் இந்த ஒரு ஹேர் பேக்கை போடுங்க.

hair4
- Advertisement -

எல்லோருக்கும் தங்களுடைய முடி நீளமாகவும் அழகாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் முடியை சரியாக பராமரிப்பதற்கு நேரம் இல்லை. ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உணவோடு சேர்த்துக் கொள்வதும் இல்லை. நேரம் இல்லாத காரணத்தினால் எதையோ ஒன்றை சாப்பிட்டு, ஏதோ ஒரு எண்ணெயை தலையில் தேய்த்து விட்டு போனபோக்கில் செல்கின்றோம். இதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் முடி சீக்கிரம் உதிர்ந்து உடைந்து போகிறது.

முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க முடியை அடர்த்தியாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பார்க்கலாம். வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை சிரமம் பார்க்காமல் தலையில் போட்டு வர உங்களுடைய தலைமுடி திக்காகவும் அடர்த்தியாகவும் வளரும்.

- Advertisement -

ஒவ்வொரு முடியும் திக்காக போஷாக்குடன் வளர ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக்குக்கு முதலில் தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். ஓரளவுக்கு பழுத்த வாழைப்பழம், விளக்கெண்ணெய், முட்டை, இந்த 3 பொருட்கள்தான். மூன்றுமே முடி வளர்ச்சிக்கு உதவுக்கூடிய பொருட்கள்தான். உங்கள் தலைமுடிக்கு ஏற்ப இந்த பொருட்களை நீங்கள் கூட்டவோ குறையவோ செய்யலாம்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 வாழைப்பழங்களை தோல் உரித்து துண்டு துண்டுகளாக வெட்டி போட்டு விழுதாக நைசாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்து அதே மிக்ஸி ஜாரில் இரண்டு முட்டையின் வெள்ளைக்கரு, இரண்டு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி, ஒரு ஓட்டு ஓட்டிக்கோங்க.

- Advertisement -

இல்லையென்றால் இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கூட ஒரு விஸ்க் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளை கருவும் இந்த விளக்கெண்ணெயும் நன்றாக கலக்கட்டும். இதை அப்படியே அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழ விழுதில் ஊற்றி மீண்டும் நன்றாக கலந்து ஹேர் பேக் தயார் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய தலையை நன்றாக சிக்கு எடுத்து சீவி, எண்ணெய் வைத்து பிறகு இந்த ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்து கொள்ளவும். 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து விடலாம். முடி வளர்ச்சிக்கு இது சூப்பரான ஹேர் பேக்.

விளக்கெண்ணெய் உங்களுக்கு சளி பிடிக்கும் என்றால் விளக்கெண்ணெய் 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், கலந்து கூட நீங்க இந்த பேக்கில் பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய் உங்களுடைய ஒவ்வொரு முடியையும் திக்காக மாற்றுவதற்கு உதவி செய்யும். புரோட்டின் சத்து நிறைந்த முட்டையின் வெள்ளை கரு முடியை உதிர்விடாமல் பாதுகாக்கும். வாழைப்பழம் முடியை சில்க்கியாக மாற்றும். சூப்பரான எளிமையான இந்த ஹேர் பேக் பிடிச்சிருந்தா வாரத்தில் ஒரு நாள் போட்டுக்கோங்க. உங்களுடைய தலைமுடி நிச்சயம் போஷாக்கோடு வளரும். கூடவே சேர்த்து ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களை கட்டாயம் நீங்கள் சாப்பிட்டு வர வேண்டும். எளிமையான இந்த அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -