சகல ஐஸ்வர்யம் தரும் கோமாதா மண்

gomatha cow
- Advertisement -

நம்முடைய இந்து மதத்தில் பலதரப்பட்ட தெய்வங்கள் இருக்கின்றன. இந்த தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுசேர இருக்க கூடிய ஒன்றுதான் கோமாதா. அதனால் தான் கோமாதா பூஜை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. பூஜை செய்வதன் மூலம் அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்வதற்குரிய பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட கோமாதாவை நம் வீட்டிற்கு வரவழைத்து சகல ஐஸ்வர்யங்களும் பெற எந்த மண்ணை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருப்பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து தோன்றியதுதான் கோமாதா. கோமாதாவில் அனைத்து விதமான தெய்வங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள் என்பது ஐதீகம். கோமாதாவை வணங்குவதன் மூலம் அனைத்து தெய்வங்களையும் வணங்குவதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். அதனால்தான் இன்றளவும் கோமாதா பூஜை என்பது மிகவும் விசேஷகரமான பூஜையாக திகழ்கிறது.

- Advertisement -

இந்த பூஜையை செய்வதற்கு வீட்டில் கோமாதா சிலையை வாங்கி வைத்து பூஜை செய்வார்கள். வசதி படைத்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது வீட்டிற்கு பசுமாட்டை அழைத்து வந்து பூஜை செய்வார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட கோமாதாவின் அருளை பரிபூரணமாக பெறுவதற்குரிய எளிய தாந்திரீக முறையை பற்றி பார்ப்போம்.

கோமாதா என்றால் பசு என்று அர்த்தம். அனைத்து பசுக்களும் கோமாதாவிற்கு சமமாக கருதப்படுகின்றன. அதனால் தான் நம்முடைய கர்ம வினைகள் தீருவதற்கு பசுவிற்கு உணவளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இன்னும் சிலரோ பசுமாட்டை கவனித்துக் கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு தேவைப்படும் பணத்தை தானமாக தருவார்கள்.

- Advertisement -

இதை விட எந்த பசுமாட்டையாவது மாமிசத்திற்காக எடுத்துச் செல்வதை பார்ப்பவர்கள் அதை தடுத்து நிறுத்தி அதை மீட்டு ஏதாவது ஒரு கோவில் மடத்திடம் ஒப்படைத்தால் அது மிகப் பெரிய புண்ணியத்தை தரும். அதே போல் பசுமாடு இயற்கையாக இறந்துவிட்டால் அதை அடக்கம் செய்வதன்மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும்.

கிராமப்புறங்களில் மேய்ச்சலுக்காக பசுமாட்டை அழைத்துச் செல்லும் பொழுது பசு மாடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் படுக்கும். இதை வாடிக்கையாகவே கொண்டிருக்கும். அந்த இடத்தில் இருக்கக்கூடிய மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வர வேண்டும். இந்த மண்ணை வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு சுத்தமான வெள்ளை துணியில் வைத்து மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வர வேண்டும்.

- Advertisement -

இந்த மண்ணை துவாதசி திதி அன்று மட்டும்தான் எடுக்க வேண்டும். மேலும் இந்த மண்ணை எடுப்பதற்கு செல்லும் பொழுது வழியில் எத்தனை பசுக்களை பார்க்கிறோமோ அத்தனை பசுக்களுக்கும் ஏதாவது ஒன்றை உணவாக அளிக்க வேண்டும். மேலும் இந்த மண்ணானது ஒரு குறிப்பிட்ட பசு இருக்கும் இடத்தில் இருந்து மட்டும் தான் எடுக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பசுக்கள் இருக்கும் இடத்தில் இருந்து மண்ணை எடுக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே: திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

இந்த மண்ணை வீட்டில் வைத்து பூஜை செய்வதன் மூலம் கோமாதாவே நம் வீட்டில் இருந்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அனைத்து நன்மைகளும் நம்மை தேடி வரும் கோடீஸ்வர யோகமும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

- Advertisement -