திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்

marriage
- Advertisement -

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்று தொட்டு வருகிறது. ஆனால் இன்றைய காலத்தில் பலரின் வாழ்க்கையிலும் இந்த திருமணம் என்பது சொர்க்கத்தின் நிச்சயத்த ஒரு வைபவமாக நடப்பதில்லை. பலருக்கும் அவர்களுக்கேற்ற துணை கிடைக்காமல் திருமணத்திற்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ திருமணம் நடந்தும் துணையுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து இருப்பார்கள். இவர்களின் குறைகளை நீக்குவதற்கு எந்த கோவிலுக்கு சென்று எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தெய்வங்களுக்கு நடக்கும் திருமணத்தை திருக்கல்யாணம் என்று கூறுகிறோம். முருகர் வள்ளி தெய்வானை இவர்களுக்கு கந்த சஷ்டி சூரசம்ஹார நாள் முடிந்த அடுத்த நாள் திருக்கல்யாணம் நடக்கும். அதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சித்திரை மாதத்தில் திருக்கல்யாணம் நடக்கும். இப்படி மிகவும் விசேஷகரமான கோவில்களில் திருக்கல்யாணம் என்பது ஒரு பெரிய வைபவமாகவே நடக்கிறது.

- Advertisement -

அந்த திருக்கல்யாணத்தில் நாம் கலந்து கொள்ளும் பொழுது நம்முடைய திருமண வாழ்க்கையும் நல்ல முறையில் இருக்கும் என்பது ஐதீகம். திருமண தடை ஏற்பட்டு இருப்பவர்கள் எந்த கோவிலுக்கு சென்று எப்படி வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

யாருக்கு திருமணம் நடக்கவில்லையோ யாருக்கு திருமணம் நடந்தும் அதில் பிரச்சனைகள் ஏற்படுகிறது அவர்களின் நட்சத்திர நாளில் திருக்கல்யாணம் செய்து பார்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை நல்ல விதத்தில் அமையும் என்று கூறப்படுகிறது. அப்படி திருக்கல்யாணம் செய்து பார்க்க வேண்டிய கோவிலாக பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் திகழ்கிறது.

- Advertisement -

திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. ஆண் அல்லது பெண்ணின் நட்சத்திர நாள் அன்று ராமர் சீதைக்கு திருக்கல்யாணம் நடத்த வேண்டும் என்று பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் முன்னதாகவே புக் செய்து விட வேண்டும். பிறகு அன்றைய தினம் குடும்பத்துடன் சென்று அந்த திருமண வைபோகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு திருமணம் நடக்கும் பொழுது தங்களுக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனை நீங்க வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். திருமணம் நல்லபடியாக நடந்தேறிய பிறகு அங்கு உணவு அருந்திவிட்டு வரவேண்டும். கண்டிப்பான முறையில் உணவு அருந்திவிட்டு தான் வரவேண்டும் உணவு அருந்தாமல் வரக்கூடாது.

- Advertisement -

இவ்வாறு ராமர் சீதையின் திருமணத்தை செய்து வைப்பதன் மூலம் அவர்களுக்கு விரைவிலேயே திருமண பாக்கியம் என்பது ஏற்படும். மேலும் திருமணம் நடந்து பிரச்சனையால் பிரிந்திருக்கும் தம்பதிகளும் ஒன்று சேர்ந்து கணவனுக்கேற்ற மனைவியாகவும், மனைவிக்கேற்ற கணவனாகவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் சந்தோஷமாக வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே: தனம் தானியம் பெருக தீப வழிபாடு

எவ்வளவோ பரிகாரங்கள் செய்தும் திருமணம் நடக்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இந்த திருத்தலத்திற்கு சென்று திருக்கல்யாண வைபோகத்தை நடத்தி தங்களின் வாழ்க்கையிலும் சுப நிகழ்ச்சிகள் நடக்க இறைவனை மனதார வழிபட்டு வர வேண்டும்.

- Advertisement -