உங்கள் வீட்டில், பூஜை முடிந்தவுடன் இந்த தவறை செய்தால் பூஜைக்கான பலனே கிடைக்காது.

money
- Advertisement -

நம்முடைய வீட்டில் எந்த ஒரு பூஜை செய்தாலும் அதற்கான முழுமையான பலனை நாம் பெற வேண்டும். பலன் வேண்டும் என்பதற்காகத்தான், பூஜை புனஸ்காரங்களே இருக்கிறது. பலனே வேண்டாம் என்று, பூஜை செய்பவர்கள் யாருமே கிடையாது அல்லவா? இப்படி இருக்கையில் பூஜைக்கான பலனை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால், நம் வீட்டில் விசேஷ பூஜைகள் முடிந்தவுடன் எந்தெந்த தவறுகளை செய்யக்கூடாது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pooja-room

பொதுவாகவே, பூஜையில், அந்த இறைவனிடம் நாம் என்ன கேட்கப் போகிறோம்? ‘நம் வீட்டில் செல்வவளம் நிறைந்திருக்க வேண்டும். நம் வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்க வேண்டும்’, என்று வேண்டிக் கொண்டுதான் பூஜை செய்வோம். இதுதான் வழக்கமும் கூட. இப்படியாக மனநிறைவோடு நாம் வைக்கும் வேண்டுதலின் மூலம், அந்த பூஜையிலிருந்து, நேர்மறை ஆற்றல் நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும். நம்முடைய கைகளை கூப்பி தான் இறைவனை வழிபடுகின்றோம். நம்மிடம் நேர்மறை சக்திகள், குறிப்பாக நம்முடைய கைகளில் நிறைந்திருக்கும்!

- Advertisement -

அந்த பூஜை முடிந்தவுடன், பூஜையில் வைத்திருக்கும் பிரசாதங்களை நாம் அடுத்தவர்களுக்கு விநியோகம் செய்யலாம். தவறு இல்லை, மஞ்சல், குங்குமம், பூ, வெற்றிலை, பாக்கு போன்ற மங்கலப் பொருட்களை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். ஆனால், உங்கள் வீட்டில் இருக்கும் மளிகைப் பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. உப்பு, பால், தயிர் இவைகளை கொடுக்கக்கூடாது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சர்க்கரை, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களைக் கூட, பூஜை முடிந்த ஒரு மணி நேரத்திற்கு தானமாக கொடுக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

maligai-prorutkal

இதோடு சேர்த்து நம் வீட்டுப் பூஜை அறையில், தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது, நம் வீட்டு மகாலட்சுமியான பணத்தை யாருக்கும் தயவுசெய்து கொடுக்காதீர்கள். குறிப்பாக பூஜை முடிந்த ஒரு மணி நேரத்திற்கு பணத்தை, அடுத்தவர்களுக்கு  கொடுப்பது அவ்வளவு சரியல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. இறைவனிடம் வேண்டி வரத்தைப் பெற்ற பின்பு, நேர்மறையான சக்திகள், நம் கைகளில் மூலம், பணத்தை எடுத்து அடுத்தவர்களுக்கு (கடனாகவோ, தேவைக்காகவோ) கொடுக்கும்போது, அதன் மூலம் நம் வீட்டில், லட்சுமி கடாட்சம் வெளியே செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது. சிலபேருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றினால் போதும்.

- Advertisement -

அவசர தேவை, மருத்துவ செலவு, தவிர்க்கமுடியாத காரணத்திற்கு பணம் கொடுப்பது என்பது வேறு. தேவையை தள்ளிப்போட முடியும் என்ற பட்சத்தில், இறைவனிடம் உங்களுடைய வேண்டுதல் வைத்து பூஜை செய்து முடித்த பின்பு, குறைந்தது ஒரு மணி நேரத்திற்காவது, உங்கள் கைகளால் பணத்தை யாருக்கும் கொடுத்தார்கள்.

money

பூஜை முடிந்தவுடன் பணத்தை கொடுத்தால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டு விடுமா? என்று பயப்படவேண்டாம். ‘இறைவனிடம் நீங்கள் வாங்கிய வரங்களும், ஆசிர்வாதமும், நேர்மறை ஆற்றலும், உங்கள் கைகளின் மூலம், வெளியே செல்லும் என்பதற்காகத்தான் இந்த பதிவே தவிர, ‘நாம் மட்டுமே நன்றாக வாழவேண்டும். அடுத்தவர்களுக்கு,  நன்மை நடந்து விடக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் கூற்று அல்ல.’

- Advertisement -

money

சில பேரெல்லாம், இப்படி விளக்கு ஏற்றிய பின்பு, ஏதாவது ஒரு பொருளை தானமாகக் கொடுத்து விடுவார்கள். கொடுத்த பின்பு அமர்ந்து யோசிப்பார்கள்! ‘தானமாக கொடுத்து விட்டோமே! நம் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சென்று இருக்குமோ? நமக்கு கஷ்டம் வந்து விடுமோ?’ என்றெல்லாம் சிந்தனையில் மூழ்கி விடுவார்கள்! இந்த எதிர்மறை ஆற்றல் ஒன்று போதும். நாம் செய்த பூஜைக்கான பலனை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்காமல் இருக்க!

money

இறைவனுக்கு பூஜை புனஸ்காரங்களை செய்துவிட்டு, நிம்மதியான மனநிறைவு இல்லையேல், பூஜை செய்து என்ன பலன்? மன நிறைவோடு செய்யப்படாத எந்த ஒரு காரியத்தின் மூலமும் நம்மால் பலனை பெற முடியாது, அப்படி உங்கள் வீட்டில் பூஜை முடிந்தவுடன், நீங்கள் அடுத்தவர்களுக்கு பணத்தை கொடுத்தால் கூட, அதை மனநிறைவோடு கொடுக்க வேண்டும். எந்த ஒரு சஞ்சலமும், உங்கள் மனதில் இருக்கக் கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் உங்களை எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தாக்காது, உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டமும் வெளியே செல்லாது. என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்க எப்படி தூங்கனும்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க! அப்பறம் தூக்கம் வரலனு எப்பவும் புலம்பவே மாட்டீங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -