பூமிக்கடியில் கட்டப்பட்டு நீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோவில் பற்றி தெரியுமா ?

iyangarkulam1

அதிசயங்களை தேடி உலகெங்கும் பலர் சுற்றுவதுண்டு. ஆனால் நம்மை சுற்றியே பல அதிசயங்கள் புதைந்து கிடைக்கிறது என்பதற்கு சான்றாக விலகுகிறது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு அனுமன் கோவில். பூமிக்கு அடியில் கட்டப்பட்டு எப்போதும் நீரில் மூழ்கி இருக்கும் இந்த அதிசய கோவில் குறித்த ஒரு வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது சஞ்சீவிராய சுவாமி கோவில். ராமாயண காலத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள இந்த கோவில் சிறந்த வேலைப்பாடுகளோடு திகழ்கிறது.இந்த கோவிலின் நடுவே ஒரு கிணறு உள்ளது. அந்த கிணறில் எப்போதும் ஊற்றுப்பெருக்கெடுப்பதால் இந்த கோவில் முழுவதும் நீர் நிரம்பி வழிகிறது.

சித்ரா பொருண்மை நாள் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் இந்த கோவிலில் உள்ள நீரை மோட்டார் கொண்டு வெளியேற்றுகின்றனர். நீரை வெளியேற்றிய பிறகு இந்த கோவில் மண்டபத்தில் கிட்ட தட்ட 500 முதல் 600 பக்தர்கள் வரை இறைவனை வணங்கும் அளவிற்கு இடம் உள்ளது.

sanjeevirayan temple

திருவிழா முடிந்த ஓர் இரு வாரங்களில் மீண்டும் இந்த கோவில் முழுவதும் நீர் சூழப்படுகிறது. எப்போதும் நீரில் மூழ்கி இருக்கும் இந்த கோவிலின் மூலவராக அனுமன் வீற்றிருக்கிறார். அவருக்கு எதிரே ராமன் சீதை மற்றும் லட்சுமணர் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் உள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட அனுமன் சிலையை கயவர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். ஆனால் அப்படி கொள்ளையடிக்கப்பட்ட சிலையை அவர்களால் வெகு தூரம் கொண்டு செல்ல முடியவில்லை. ஆகையில் அருகில் இருந்த ஒரு கிணற்றில் அவர்கள் போட்டு சென்றனர். பிறகு மீண்டும் அந்த அனுமன் சிலை இந்த கோவிலை வந்தடைந்துள்ளது. அனுமனின் இந்த சக்தியை கண்டு அந்த ஊர் மக்கள் மெய் சிலிர்த்துள்ளனர்.

- Advertisement -

Lord Hanuman

இந்த கோவில் குளம் இங்கு கட்டப்பட்டதற்கு பின்பு ஒரு வரலாறும் ஒளிந்துள்ளது. எச்சூர் தாதாச்சாரியார் என்பவர் விஜயநகர் மன்னரின் முகவராக இருந்தவர். அவர் இந்த வழியாக பொன் பொருளை கொண்டு செல்கையில் கொள்ளையர்கள் அவரை சூழ்ந்துள்ளனர். ராம பக்தரான அவர் உடனே ராம நாமத்தை ஜபிக்க துவங்கி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த இடத்தை நோக்கி ஒரு குரங்கு பட்டாளமே வந்து கொள்ளையர்களை விரட்டி அடித்துள்ளது.

இதையும் படிக்கலாமே:
இந்து கோவில்களை பற்றி எவரும் அறியா 10 ரகசியங்கள்

இந்த இடத்திற்கு அருகே ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருப்பதை அறிந்த அவர் இந்த கோயிலிற்கு தன்னால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று எண்ணி கோவிலை சுற்றி மிகப்பெரிய மண்டபம் எழுப்பினார். அதுவே இப்போது குளமாக உள்ளது. இது ஐயங்கார் குளம் என்று தாத சமுத்திரம் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.