இந்து கோவில்களை பற்றி எவரும் அறியா 10 ரகசியங்கள்

Sivan

இந்து கோவில்களில் பல ரகசியங்கள் ஒளிந்துள்ள அதில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

1 ) ஒரே கல்லால் செய்யப்பட்ட ஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலையை தட்டினால் வெண்கல ஓசை கேட்கும். இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

2 ) கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரள புறம் என்னும் ஊரில் உள்ள அரசமரத்தடி பிள்ளையார் 6 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மறுக்கிறார். சந்திரகாந்த கல்லால் செய்யப்பட்ட இந்த பிள்ளையார் ஆவணி மாதத்தில் இருந்து தை மாதம் வரை வெள்ளை நிறமாகவும் மாசி மாதத்தில் இருந்து ஆறு மாதம் வரை கருப்பு நிறமாகவும் மாறுகிறார்.

3 ) மதுரை மீனட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்தாமரை குளத்தில் மீன்கள் வளருவது கிடையாது.

meenatchi amman temple

4 ) இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோவிலின் நடை நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் ஆறு மாதங்கள் வரை மூடியே இருக்கும். அப்படி நடை சார்த்துகையில் அந்த கோவிலில் ஒரு சிறிய தீபம் ஏற்றப்படும். அந்த தீபமானது ஆறு மாதங்கள் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கும். அது எப்படி தொடர்ந்து எரிகிறது என்ற ரகசியத்தை இதுவரை யாரும் அறியவில்லை.

- Advertisement -

5 ) சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி நாம் கோவிந்தராஜ பெருமாளையும் நடராஜரையும் வணங்க முடியும். இது போன்ற ஒரு அமைப்பு வேறெந்த பிரசித்தி பெற்ற கோவிலிலும் இருப்பது போல தெரியவில்லை.

Chithambaram Natarajar

6 ) விஷ்ணுவின் வாகனமான கருடன் காசி நகரை சுற்றி 45 கிலோமீட்டர் வரை பறப்பதில்லை. இதற்கான காரணத்தை யாராலும் அறிய முடியவில்லை.

7 ) தமிழகத்தில் உள்ள ரத்தினகிரி மலை மீது காகங்கள் பறப்பதில்லை. அதற்கான விளக்கமும் யாரும் அறியவில்லை.

8 ) திருவண்ணாமை மலை கோவிலில் எப்போதும் சுவாமி ராஜ கோபுரம் வழியாக வருவது கிடையாது. மாறாக பக்கத்துக்கு வாசல் வழியாகவே வெளியே வருவார்.

Thiruvannamalai

9 ) பொதுவாக எந்த கோவிலிலும் மூலவர் சிலை வீதி உலா வருவதில்லை. ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே மூலவரே வீதி உலா வருகிறது.

10 ) பொதுவாக பெருமாள் தனது இடது கரத்தில் சங்கை வைத்துள்ளது போல தான் எல்லா கோவில்களிலும் சிலை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் தனது வலது கரத்தில் சங்கை வைத்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:
எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் தரும் பூஜை பற்றி தெரியுமா ?

இது போன்ற அதிசயங்கள் நம்மை சுற்றி இன்னும் ஏராளமாக உள்ளன. இது போன்று நீங்களும் ஏதாவது அதிசயத்தை அறிந்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.