அரிசி உளுந்து சேர்க்காமல் சுவையான பன் தோசை ரெசிபி

bun dosa recipe
- Advertisement -

பொதுவாக காலை மாலை டிபன் என்றாலே இட்லி அல்லது தோசை தான் பிரதானமாக இருக்கும் மற்ற உணவு வகைகள் இதற்கு அடுத்தபடியாக தான் நாம் தேர்ந்தெடுப்போம். இப்படி தினம் தினம் இட்லி தோசையை சாப்பிட்டு போர் அடித்து போனவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் அரிசி உளுந்தே சேர்க்காமல் ஒரு தோசை செய்யலாம்.

என்ன அரிசி உளுந்து சேர்க்காமல் தோசையா? அப்படின்னு ஆச்சரியப்படுறீங்களா. ஆமாங்க அரிசி உளுந்து எதையுமே சேர்க்காமல் சுவையான பண் தோசை சூப்பரா செய்யலாம். வாங்க அந்த எப்படி செய்யலாம்ன்னு இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

அரிசி உளுந்து சேர்க்காத பன் தோசை

தேவையான பொருட்கள்

ரவை – 1 கப்,
பச்சரிசி மாவு -2 டேபிள் ஸ்பூன்,
தயிர் -1/4 கப்,
பெரிய வெங்காயம் -1,
பச்சை மிளகாய் – 1,
இஞ்சி – சிறிய துண்டு,
கடுகு -1/2 ஸ்பூன்,
சீரகம் -1/2 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
பேக்கிங் சோடா – 1சிட்டிகை,
கருவேப்பிலை, கொத்தமல்லி – 1கொத்து,
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான உடன் கடுகு சீரகம் சேர்த்து பொரித்துக் கொள்ளுங்கள். அது பொரிந்த பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பெருங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் பொன்னிறமாக மாறியவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்த்து விட்டு உடனே அடுப்பை அணைத்து விடவும். இதை அப்படியே ஒரு தட்டில் கொட்டி ஆற விடுங்கள்.

அடுத்ததாக மிக்ஸி ஜாரில் ரவை தயிர் பச்சரிசி மாவு அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் தேவைப்பட்டால் ஊற்றி இதை தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாவை வேறொரு கிண்ணத்திற்கு மாற்றி விடுங்கள்.

- Advertisement -

இப்போது மாவில் நாம் ஏற்கனவே வதக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்த்த பிறகு பத்து நிமிடம் அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள்.

பத்து நிமிடம் கழித்து ஆப்ப கடாய் அல்லது குழியான பேன் இரண்டில் ஏதேனும் ஒன்றை வைத்து தோசை மாவை எடுத்து கொஞ்சம் தடிமனாக ஊற்றி தட்டு போட்டு மூடி வேக விட்டு ஒரு புறம் சிவந்த பிறகு திருப்பி போடுங்கள். அதே போல் மறுபுறமும் சிவந்த பிறகு எடுத்தால் அருமையான பண் தோசை தயார்.

இந்த முறையில் தோசை ஊற்றும் போது நாம் எப்போதும் போல மெலிதாக ஊற்றக் கூடாது கல் தோசை போல தடிமனாக ஊற்றி மூடி போட்டு தான் சுட வேண்டும் அப்போதுதான் இது பன் தோசை போல இருக்கும். இந்த முறையில் செய்வதற்கு மிக மிக சுலபம் அதே நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: இரும்பு சத்து மிக்க முருங்கைச் கீரை சட்னி செய்முறை

இதை மாலை நேர சிற்றுண்டியாகவும் இதை செய்து சாப்பிடலாம். இதற்கு கார சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி என உங்களுக்கு விருப்பமானவற்றை வைத்து சாப்பிடலாம். எதுவுமே இல்லை என்றாலும் அப்படியும் சாப்பிடலாம் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு முறை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -